சிறகடிக்க ஆசையில் செம டுவிஸ்ட்.. ஜெயிலுக்கு போகும் ரோகிணி.. ரசிகர்கள் நினைத்தது நடந்தது!
சென்னை : சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி ஜெயிலிலிருக்கும் வீடியோ ஒன்றை மனோஜ் வெளியிட்டு இருக்கிறார். அதில் விஜயாவிடம் ரோகிணி ஜெயிலுக்குள் இருந்து கெஞ்சி அழுது கொண்டிருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. காரணம் இந்த சீரியலில் இதுவரைக்கும் ரோகிணி ஒரு இடத்தில் கூட மாட்டவில்லை. ஒவ்வொரு முறையும் முத்து மீனாவிற்கு தான் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது.

அதிலும் மீனாவின் தம்பி சத்யா பல மாதங்களுக்கு முன்பு விஜயாவிடம் இருந்து பணத்தை திருடிய வீடியோவை முத்து செல்போனில் இத்தனை நாட்களாக பாதுகாத்து வைத்திருந்தார். ஆனால் அதை எதற்காக வைத்தார் என்று யாருக்கும் தெரியாத கேள்வி தான்.
காரணம் முதலில் சத்யா சிட்டியோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தார் அப்போது இந்த வீடியோவை சேவ் பண்ணி முத்து வைத்தது கூட ஓகே என்று சொல்லலாம். ஆனால் இப்போது சத்யா திருந்தி விட்டார். அந்த நேரத்தில் கூட அந்த வீடியோவை டெலிட் செய்யாமல் முத்து வைத்திருந்த நிலையில் அந்த வீடியோவை சிட்டி ரோகினியின் உதவியோடு லீக் செய்து விட்டார்.

இதனால் பெரும் பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்கிறது. சத்யாவை போலீஸ் தேடி இருந்த நிலையில் சத்யா மற்றும் அவருடைய குடும்பத்தின் மீது விஜயா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் சத்யாவிற்காக அவருடைய அம்மாவை போலிஸ் அரஸ்ட் செய்து ஸ்டேஷனில் வைத்திருந்த நிலையில் முத்துவும் மீனாவும் கெஞ்சி அவருடைய அம்மாவை மட்டும் கூட்டிக்கொண்டு வந்திருக்கின்றனர்.
ஆனால் இன்னும் ஒரு நாளைக்குள் சத்யாவை போலீசில் ஒப்படைக்கவில்லை என்றால் சத்யாவுக்கு தண்டனை அதிகமாகும் என்று போலீஸ் சொல்லி இருக்கிறார். இதனால் விஜயா கேஸை வாபஸ் வாங்க சொல்லி பேச முத்து அண்ணாமலையிடம் கெஞ்சி இருக்கிறார்.

முதலில் அண்ணாமலை முடியாது என்று சொன்னாலும் பிறகு முத்து எடுத்து சொன்னதால் சரி விஜயாவிடம் பேசி பார்க்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த பஞ்சாயத்துக்கு இடையே தற்போது மனோஜாக நடிக்கும் ஸ்ரீ தேவா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் ரோகிணி போலீஸ் ஸ்டேஷனில் லாக்கப்பிற்குள் இருக்கிறார்.
வெளியே விஜயா நின்று கொண்டிருக்கும் போது லாக்கப்பிற்குள் இருந்து ரோகிணி அழுது கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இருக்கிறது. இது சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுத்த வீடியோ என்பதால் ரோகிணி போலீஸில் மாட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விகளும் எழுகிறது.
ஏற்கனவே சிட்டியும், பழைய பிஏவும் சேர்ந்து ரோகிணியை பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இப்போது 2 லட்சம் பணம் வேண்டும் என்று சொல்லி இருக்கும் நிலையில் ரோகிணி இந்த பணத்தை ஏற்பாடு செய்வதற்கு என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஒருவேளை ரோகினி வீட்டில் மாட்டப் போகிறாரா? எதற்காக இவர் ஜெயிலுக்கு போனார் என்ற கேள்விகள் எழுகிறது ஆனாலும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ஏதோ ஒரு பெரிய சம்பவம் வரும் வாரத்தில் சிறகடிக்க ஆசை சீரியலில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications