Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 18ஆம் தேதிக்கான எபிசோடில், ரோகிணி தனக்கு வந்த பிரச்சனையை அப்படியே முத்து பக்கம் திருப்பி விட்டுருக்கிறார். அதே நேரத்தில் மீனா செய்த செயலை பார்த்து விஜயா கடுப்பாகி இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறகடிக்க சீரியலில் (Siragadikka Aasai serial March 18 Episode) நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே போகிறது. மனோஜ் எப்படியாவது ரோகிணியிடம் இருந்து விவாகரத்து வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு கொண்டு இருக்கிறார். ஆனால் அதே நேரத்தில், ரோகிணி எந்த நிலையிலும் மனோஜை விட்டு பிரியக் கூடாது என்று இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தினமும் புது பிரச்சனைகள் உருவாகி வருகிறது.

மனோஜ் வருத்தம்

அந்த வகையில், நேற்று நடந்த சம்பவம் மனோஜுக்கு பெரிய அவமானமாக மாறியது. ரோகிணி திட்டமிட்டு கிரிஷை கூட்டிக்கொண்டு மனோஜ் வேலை பார்க்கும் ஷோரூமுக்கு போகிறார். அங்கே அவர் ஒரு பெரிய டிராமா போடுகிறார். விஷயம் கைக்கு எட்டாமல் போன நேரத்தில், மனோஜ் கோபத்தில் கிரிஷை தள்ளிவிடுகிறார். இதைப் பார்த்த அங்கிருந்த வாடிக்கையாளர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைந்து, மனோஜை "கொடுமைக்காரன்" என்று திட்டிவிட்டு அங்கிருந்து போய் விடுகிறார்கள். இந்த சம்பவம் மனோஜின் இமேஜை முழுக்க குலைத்து விடுகிறது.

முத்து கொடுத்த அட்வைஸ்

இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் வீட்டுக்கு வந்த மனோஜ், நடந்ததை எல்லாம் குடும்பத்தினரிடம் சொல்லி வருத்தப்படுகிறார். அப்போது முத்து ஒரு ஐடியா சொல்கிறார். "நான் இருந்திருந்தா இதை எப்படி ஹேண்டில் பண்ணிருப்பேன்னு தெரியுமா?" என்று ஆரம்பிக்கிறார். கிரிஷிடம் நல்லா மார்க் வாங்கியிருக்கே, அதை முதலில் உன் அம்மாவிடம் காட்டணும், அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க என்று சொல்லி அவனை பாட்டி வீட்டுக்கு கூட்டிச்செல்லலாம். அப்போ ரோகிணி தான் தவறாக நடந்து கொண்டவளாக தோன்றுவாள், மக்கள் மனோஜை நல்லவனாகவே பார்த்திருப்பார்கள் என்று விளக்குகிறார். இந்த ஐடியா மனோஜுக்கு ஒரு பக்கம் ஆறுதலாக இருந்தாலும், கடுப்பாக இருக்கிறார்.

விஜயா கண்ட காட்சி

இதே நேரத்தில், வேறு ஒரு சம்பவம் நடக்கிறது. கிரிஷ் ஸ்கூல் முடிந்து தனியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருக்கிறான். அப்போது மீனா பைக்கில் வரும்போது அவனை பார்க்கிறார். அவனை கூப்பிட்டு நலம் விசாரித்து, சாக்லேட் வாங்கி கொடுத்து அன்பாக பேசுகிறார். இதை அந்த வழியாக வந்த விஜயா பார்த்துவிடுகிறார். மீனா கிரிஷை இவ்வளவு பாசமாக பார்த்துக்கொள்வது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

திட்டிய ரோகிணி

அதற்குள் மீனா அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். அப்போது ரோகிணி அங்கே வருகிறார். கிரிஷ் மீனாவுடன் பேசியது தெரிந்ததும், அவனை திட்டத் தொடங்குகிறார். "எதுக்குடா அவகூட பேசுற?" என்று கோபமாக கேட்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி பிஏ தினேஷ் அங்கே பைக்கில் வந்து நிற்கிறார்.

தினேஷை பார்த்ததும் ரோகிணி பதற்றமாகிறார். அவர் தனியாக அழைத்து என்ன வேண்டும் என்று கேட்கிறார். உடனே தினேஷ் நேராக விஷயத்துக்கு வருகிறார் - "நீ பணம் தர்றேன்னு சொல்லி என்னை ஏமாத்திக்கிட்டு இருக்க. இப்போவே பணம் குடுக்கலேன்னா, உன்னைப் பற்றிய எல்லா உண்மையையும் உன் வீட்டில் சொல்லிடுவேன்" என்று மிரட்டுகிறார். ரோகிணி பற்றிய உண்மைகள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பது தினேஷுக்கு தெரியாமல், அதை வைத்து பிளாக்மெயில் செய்கிறார்.

விஜயா வீட்டில் கொண்டாட்டம்

இதைக் கேட்ட ரோகிணி உடனே டிராமா போட ஆரம்பிக்கிறார். "தயவு செய்து சொல்லாதே... குறிப்பா முத்துகிட்ட மட்டும் சொல்லாதே" என்று கெஞ்சுவது போல நடிக்கிறார். இதைக் கேட்ட தினேஷ், "இப்போவே போய் முத்துவிடம் சொல்லிடுறேன்" என்று கிளம்புகிறார்.

ஆனால் தினேஷ் அங்கிருந்து போனதும் ரோகிணியின் முகபாவனை மாறுகிறது. "இன்னையோட இவன் தொல்லை முடிஞ்சது" என்று நிம்மதியாக மூச்சு விடுகிறார். இதன் மூலம் அவர் இன்னொரு திட்டத்தை மனதில் வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

இதற்கிடையில் வீட்டில் இன்னொரு திருப்பம் நடக்கிறது. மனோஜுக்கு முன்னாடி பார்த்த பெண் வீட்டுக்கு வருகிறார். தங்கச்சி முறை காரணமாக அந்த திருமணம் நடக்காமல் போயிருந்தாலும், "எனக்கு அண்ணன்கள் கிடைச்சாச்சு" என்ற சந்தோஷத்தில் அவர்களை பார்க்க வந்ததாக சொல்கிறார். அவர் மனோஜை "அண்ணா... அண்ணா..." என்று அழைக்க தொடங்குகிறார். இதைக் கேட்ட மனோஜ் கடுப்பாகி போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+