அண்ணாமலையை அவமானப்படுத்தும் வாசுதேவன்.. கோபப்படும் மனோஜ்.. அதிர்ச்சி கொடுத்த முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 28ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். அதில் முத்துவை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக இன்றைய எபிசோடிலும் பல சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்து முத்து சந்தேகப்படுகிறார்.

அதே நேரத்தில் அண்ணாமலையை வாசுதேவன் அவமானப்படுத்தி பேசுகிறார். அதுபோல ரோகினி அப்பா விஷயத்தில் விஜயா முக்கிய முடிவு எடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai serial march 28th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவிடம் மீனா," கால் ரொம்ப வலிக்குதா?" என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ருதியின் அம்மா சொல்லி அனுப்பிய ஒரு நபர் முத்துவின் முதுகில் பளார் என்று அடித்து தான் தன்னுடைய நண்பன் என்று நினைத்து அடித்து விட்டதாக சொல்ல, அதற்கு மீனா அவரிடம் சண்டைக்கு போக, அந்த நபரும் மீனாவிடம் சண்டை போட முத்து இருவரையும் சமாதானப்படுத்துகிறார்.

பிறகு நடப்பது எல்லாம் பார்த்தா எனக்கு ஏதோ சந்தேகமா இருக்கு இது எல்லாம் வேணும்னு யாரோ சொல்லி நடக்கிற மாதிரியே இருக்கு என்று முத்து சொல்ல, அதற்கு மீனா, யாரு இப்படி செய்ய சொல்ல போறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பார்வதி மீனாவை கூப்பிட்டு, இங்கே உட்கார்ந்து இருக்க உங்க அத்தை விஜயா வேலை இருக்குன்னு கூப்பிடுறாங்க என்று சொல்ல, மீனா முத்துவிடம் நான் எங்க இருந்தாலும் உங்களை தான் பார்த்துட்டு இருப்பேன் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

Siragadikka aasai serial march 28th promo and episode full update

பிறகு முத்து, அண்ணாமலையும் அவருடைய நண்பர் பரமுவையும் கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைக்கிறார். அப்போது அங்கு வரும் விஜயா உங்களை சம்மந்தி பேசணும்னு கூப்பிட்டாங்க என்று சொல்லி அனுப்பி வைக்க, அங்கே வாசுதேவன் அண்ணாமலையை பார்த்தும் கண்டு கொள்ளாமல் அங்கிருக்கும் நபர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர்களோடு அதிகாரியாக வேலை பார்த்த ஒருவர் அண்ணாமலையை பார்த்ததும் எப்படி இருக்கிறீங்க என்று நலம் விசாரிக்கிறார்.

அதோடு அண்ணாமலை தான் நேர்மையான ஆளு என்று பாராட்ட, அதைக் கேட்டு வாசுதேவன் கடுப்பாகிறார். அதோடு சில சமயங்களில் நாம நினைக்கிறதா நடக்கிறது? குப்பை மேடெல்லாம் கோபுரமா மாறிவிடும் என்று அண்ணாமலையை அவமானப்படுத்துவது போல பேச அந்த நேரத்தில் அண்ணாமலை நல்லவேளை இந்த நேரத்தில் முத்து இல்ல.. இருந்தால் இந்த பிரச்சனையை பெருசாகி இருப்பான் என்று நிம்மதி அடைகிறார்.

Siragadikka aasai serial march 28th promo and episode full update

அதற்கு பிறகு ரோகிணி ஏற்பாடு செய்த நபர் முத்துவின் பின்னாடி வந்து உட்கார்ந்து நீங்களும் நானும் ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு ஒயின்ஷாப்பில் சந்தித்தோம் என்று பேச்சுக் கொடுக்கிறார். அப்போது ரோகிணியின் அப்பா வர நேரம் ஆவதால் விஜயா முதலில் ஸ்ருதிக்கு தாலி பிரித்து போடும் பங்க்ஷன் செஞ்சுடலாம் என்று அண்ணாமலையை கேட்க அதற்கு அண்ணாமலை நீயே யோசிச்சு ஒரு முடிவு எடு என்று சொல்லிவிடுகிறார்.

Siragadikka aasai serial march 28th promo and episode full update

ஆனால் மனோஜ், ரோகிணிதான் மூத்த மருமகள் அதனால ரோகிணிக்கு தான் பண்ணனும் என்று கோபப்படுகிறார். அதற்கு விஜயாவும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாம் அதுக்குள்ள ரோகிணி அப்பா வரட்டும். ஏற்கனவே ரோகிணி அப்பா உங்க கல்யாணத்த பாக்கல.. இப்ப இதையாவது பார்க்கட்டும் என்று சொல்லி ஸ்ருதிக்கு முதலில் தாலி பிரித்து கோர்க்கலாம் என்று குடும்பத்தில் பேசுகின்றனர்.

Siragadikka aasai serial march 28th promo and episode full update

இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது அதைத்தொடர்ந்து நாளைக்கு என்று வெளியான வீடியோவில் ரோகிணி அனுப்பிய ஆள் முத்துவிடம் காரில் சரக்கு பாட்டில் இருப்பதை காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை முத்துவை மண்டபத்திற்குள் காணாமல் அதிர்ச்சி ஆகிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+