சிறகடிக்க ஆசை ரசிகர்களுக்கு ஏமாற்றம்! குடித்துவிட்ட முத்து! அவமானப்பட்ட அண்ணாமலை! கடைசியில் டுவிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 29ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மண்டபத்தில் முத்துவை குடிக்க வைக்க வேண்டும் என்று ரோகிணி ப்ளான் போட்டு இருந்த நிலையில் கடைசியில் முத்து குடித்துவிட்டார்.
அதே நேரத்தில் மண்டபத்திற்குள் அண்ணாமலையை ஸ்ருதியின் அப்பா அவமானப்படுத்துகிறார். கடைசி வரைக்கும் ரோகினியின் அப்பா வராததால் விஜயாவும் கோபத்தில் இருக்கிறார். அந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் வித்தியாவும் ரோகினியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது வித்யா உங்க அத்தை தான் உங்க அப்பா வந்த பிறகு உனக்கு பங்க்ஷன் வைக்கலாம் என்று சொல்லி ஸ்ருதிக்கு முதலில் பங்க்ஷன்க்கு சொல்லி இருக்காங்களாம் என்று சொல்ல, ரோகிணி இவங்க ஏண்டி இப்படி பண்ணுனாங்க என்று பேசிக் கொண்டிருக்கும்போது மனோஜ் ரூமுக்குள் வந்து உங்க அப்பா வந்துட்டாரா? இல்லையா? நீ நம்பர் சொல்லு அவரு எங்க இருக்காருன்னு நம்ம டிராக் பண்ணலாம் என்று கேட்க,
அதற்கு ரோகிணி அதிர்ச்சியானாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் எதற்காக இப்ப இவ்வளவு அவசரப்படுகிற என்று சொல்ல, எல்லாம் உன்னால தான் இப்போ உங்க அப்பா வரல என்பதால் ஸ்ருதிக்கு முதலில் பங்க்ஷன் பண்ண போறாங்க. முதல் மரியாதை உனக்கு கிடைக்காமல் போயிடுச்சு என்று சொல்ல, அதற்கு ரோகிணி அவர் என்ன பக்கத்து ஊர்ல இருந்தா வராரு என்று சமாளிக்கிறார்.

இதை எல்லாம் விஜயாவும் பார்வதியும் ரூமுக்கு வெளியே நின்று கேட்டுக் கொண்டிருக்கும் போது ஸ்ருதியின் அம்மா அங்கே வர ஸ்ருதியின் அம்மாவிடம் உங்க மகளுக்கு முதலில் பங்க்ஷன் செய்யலாம் என்று விஜயா சொல்ல, அதற்கு ஸ்ருதியின் அம்மா சுதா, இல்ல மூத்த மருமகளுக்கு தானே முதலில் பங்க்ஷன் செய்யணும் என்று சொல்ல, அதற்கு விஜயா இல்ல உங்க மகளுக்கு தான் மரியாதை கிடைக்கும்.
அதனால முதலில் ஸ்ருதிக்கு செய்யட்டும் என்று சொல்ல, சரி என்று கிளம்பிய சுதா ரோகிணியிடம் வந்து என்ன ஆச்சு என்ன பிரச்சனை எதனால் ஸ்ருதிக்கு முதலில் பங்க்ஷன் பண்ணுறாங்க என்று கேட்க, அப்போது ரோகிணி எங்க அப்பா வந்துட்டு இருக்காங்க... அதனால ஸ்ருதிக்கு முதலில் பண்றாங்க என்று சொன்னதும், இந்த விஜயா பொம்பள நம்ம கிடட ஏமாத்துறாங்களா? என்று சுதா மனதில் நினைத்துக் கொண்டு பிறகு ஸ்ருதிக்கு பங்க்ஷன் நடைபெறுகிறது.
அப்போது ஸ்ருதி கழுத்தில் நிறைய நகை போட்டு இருப்பதை பார்த்து மனோஜ் அதிசயப்பட, அதற்கு விஜயா உன் மாமனார் இப்ப வரும்போது இன்னும் அதிகமா கொண்டு வருவாரு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். மறுபக்கத்தில் முத்துவை ரோகிணி செட் பண்ணிய ஆள் நைசாக பேசி வெளியே கூட்டிட்டு போகிறார். முதலில் முத்து வெளியே வரவில்லை என்று மறுத்தாலும் பிறகு அந்த ஆளோடு போய்விடுகிறார்.

அடுத்த கட்டத்தில் ரோகிணியின் அப்பா வராததால் ரோகினிக்கு ஃபங்ஷனை நடத்திவிடலாம் என்று விஜயா அண்ணாமலை இடம் சொல்கிறார். பிறகு ரோகிணிக்கும் பங்க்ஷன் நடந்து கொண்டிருக்க, அப்போது ஸ்ருதியின் அப்பா வாசுதேவனிடம் அவருடைய உறவினர் ஒருவர் உங்க பொண்ணுக்கு பங்க்ஷன் நடத்துற செலவிலேயே உங்க சம்பந்தி வீட்டுக்காரங்க அவங்க பெரிய மருமகளுக்கும் பங்க்ஷன் வச்சிருக்காங்களே என்று கேட்க,

அதற்கு வாசுதேவன் நாம சாப்பிட்ட பிறகு அந்த இலையில் எதுவோ வந்து சாப்பிடுமே அப்படித்தான் என்னவோ பண்ணிட்டு போகட்டும் என்று சொல்ல, இதை எல்லாம் அண்ணாமலை கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்துவை ரோகிணி அனுப்பிய ஆள் குடிக்க வைத்து விடுகிறார். அப்போது மண்டபத்திற்குள் முத்துவை காணவில்லை என்று பரமு சொல்ல, அண்ணாமலை அதிர்ச்சி ஆகி முத்துவை தேடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications