சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial March 3, 2026 episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் மூன்றாம் தேதிக்கான எபிசோடில் அண்ணாமலைக்கு ஆக்சிடென்ட் செய்ய வைத்தது நான்தான் என்று சிந்தாமணி வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். அதே நேரத்தில் மீனா விஜயாவால் வீட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி விஜயாவின் வீட்டை கைப்பற்றுவதற்காக முத்துவையும் மீனாவையும் வெளியேற்றுவதற்கு ஒரு சாமியார் பெண்ணை வைத்து நாடகம் போட்டிருந்தார். அந்த பெண் மீனா இந்த வீட்டில் இருந்தால் வீட்டு தலைவரின் உயிருக்கு ஆபத்திற்கு ஆபத்து, விஜயா தாலின்னு நிலைக்காது என்று குண்டை தூக்கி போட அதையே இப்போது விஜயாவும் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அந்த சாமியார் பெண் சொன்னது நடக்க வேண்டும் என்று சிந்தாமணி ஆள் செட் பண்ணி அண்ணாமலைக்கு ஆக்சிடென்ட் செய்ய வைத்திருந்தார். அவரும் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் நிலையில் (Siragadikka Aasai serial today episode) அண்ணாமலை நிலையை கேட்டு விஜயா கோபத்தில் ஹாஸ்பிடலில் கத்திக் கொண்டிருக்கிறார். இந்த மீனாவால் தான் என் புருஷன் உயிருக்கு ஆபத்து, அந்த சாமியார் அம்மா சொன்ன மாதிரியே இப்போ நடந்துச்சு. இத்தனைக்கும் காரணம் இவ தான் காரணம். இவன் அப்ப இறந்தது கூட இவ ராசியால தான். இப்போ என் புருஷன் உசுரை எடுக்க வந்துட்டா.
விஜயா ஆதங்கம்
என் புருஷன் தான் இவளை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது ஆனால் அவர் உசுரையே எடுக்குறதுக்காக இவ இந்த வீட்டில் இருக்கிறா. வீட்டை விட்டு வெளியே போக சொன்னாலும் போக மாட்டேங்குறா.. என் தாலி இறங்கின பிறகு தான் போவா போல... ஆனா அவருக்கு ஒன்னும் ஆகிடுச்சுன்னா நானும் உயிரோடு இருக்க மாட்டேன் நானும் போயிருவேன் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.
விஜயா பேசுவதை கேட்டு ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் இது எதார்த்தமாக நடந்த சம்பவம் அதற்காக மீனா மீது பழி போடாதீங்க என்று திட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மனோஜ் மீனா ராசியால தான் அப்பாக்கு இப்படி நடந்துச்சு என்று ஜிங்சான் போட, அதனால் முத்து கோபமாகி மனோஜை அடிக்க போகிறார்.
டாக்டர் சொன்ன விஷயம்
இந்த நேரத்தில் டாக்டர் வந்து அண்ணாமலைக்கு எல்லாம் ஸ்கேனும் பார்த்தாச்சு அவருக்கு பெருசா ஒரு பாதிப்பு இல்ல. காலில் மட்டும் அடி இருக்கு அதற்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு போகின்றனர். மறுபக்கத்தில் சிந்தாமணி ரோகினியை பார்க்க வருகிறார். ரோகிணி என்னாச்சு ஆன்ட்டி எதுவும் பிரச்சனையா? என்று கேட்க, உன்னுடைய வாழ்க்கைக்காக நான் ஒரு முக்கிய விஷயம் பண்ணி இருக்கிறேன் என்று சொல்ல, ரோகிணிக்கு எதுவும் புரியவில்லை.
ரோகிணிக்கு தெரிந்த உண்மை
பிறகு அண்ணாமலை ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொன்னதும் ரோகிணி பதறிப் போகிறார். அதற்கு நீ பயப்படாத என் ஆட்களை வைத்து நான் தான் உன் மாமனாரை ஆக்சிடென்ட் பண்ணுனேன். நீ அந்த வீட்டுக்கு போகணும்னா முத்துவும் மீனாவும் அந்த வீட்டில் இருக்கக் கூடாது அதற்காகத்தான் நான் இப்படி எல்லாம் பண்ணுனேன் என்று நல்லவன் போல பேச அதை ரோகிணியும் நம்பி விடுகிறார்.
சிந்தாமணி நாடகம்
பிறகு ரோகிணி முன்பு வைத்தே விஜயாவுக்கு போன் பண்ணி சிந்தாமணி விசாரிக்கிறார். அப்போது சிந்தாமணி வழக்கம் போல மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் மீனா யாருக்கும் சொல்லாமல் அங்கிருந்து போய் விடுகிறார். அடுத்ததாக அண்ணாமலையை போய் பார்க்கலாம் என்று சொன்னதும் விஜயா, முத்து, மனோஜ், ரவி ஸ்ருதி எல்லோரும் போய் பார்க்கின்றனர்.
அண்ணாமலை சொன்ன விஷயம்
அப்போது விஜயாவும் மனோஜும் மீனாவால் உங்களுக்கு இப்படியெல்லாம் ஆகிடுச்சு என்று பேசிக் கொண்டிருக்க, அதற்கு அண்ணாமலை அப்படியெல்லாம் இல்ல நாங்க ஒதுங்கி தான் வந்தோம் அந்த பையன் தான் எங்க மேல வேணும்னு வந்து மோதிட்டு போயிட்டான் இதற்கும் மீனாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை தேவையில்லாம பேசாத என்று சொல்லிக் கொண்டிருக்க, மனோஜ் மீண்டும் மீனாவை பற்றி பேசியதுவும் முத்து அடிக்க போகிறார். உடனே அண்ணாமலை முத்துவை வெளியே போக சொல்லிவிட்டு மனோஜிடம் பேசுகிறார். இப்படியாக இன்றறைய எபிசோடு முடிவடைகிறது.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications