சிறகடிக்க ஆசை: ரோகிணி விட்ட சவால், மீனாக்கு வந்த சந்தேகம்! முத்து கண்டுபிடிக்கும் உண்மை! விஜயாவுக்கு ஆப்பு
சென்னை: விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் ஆறாம் தேதிக்கான எபிசோடில், மீனாவை சந்தித்த ரோகிணி, அவரிடம் தான் மீண்டும் வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பேன் என சவால்விடுத்துள்ளார். அதனால் மீனா சுதிக்கு சந்தேகம் வருகிறது இது பற்றி முத்து விடவும் சொல்கின்றனர் பிறகு என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில், மீனாவை விஜயா வீட்டை விட்டு துரத்திவிட்டுள்ளார். இதனால் மீனா தன்னுடைய அம்மா வீட்டில் தங்கி இருக்கிறார். அவரை பார்க்க ஸ்ருதி, அவரின் பூக்கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது ரோகிணியால் தான் நம்ம வீட்டில் இப்படியெல்லாம் நடக்கிறதோ என தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறுகிறார். அத கேட்டு மீனாவுக்கும் அப்படி இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது. அவர்கள் ரோகிணியை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே, ரோகிணி அங்கு காரில் எண்ட்ரி கொடுக்கிறார். அவர் மீனா மற்றும் ஸ்ருதியிடம் பேசப்போகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், ரோகினி நேராக போய் மீனாவிடம், இப்போ நாம மூணு பேருமே அந்த வீட்டில் இல்லை என சொல்ல, இப்போ உனக்கு சந்தோஷமா என மீனா கேட்கிறார். கணவரை பிரிந்திருப்பதன் வலி என்பது இப்போ உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன் என்று திமிராக சொல்ல, அதற்கு ஸ்ருதி நாங்க ரெண்டு பேரும் ஈஸியா மீண்டும் அந்த வீட்டுக்குள் போயிருவோம். ஆனால் நீ அந்த வீட்டுக்குள் செல்வது நடக்கவே நடக்காது என சொல்கிறார். அதற்கு ரோகிணி, நீங்க ரெண்டு பேரும் எனக்கு சப்போர்ட் பண்ணுனீங்கனா உங்களுக்கு நல்லது, இல்லையென்றால் என மிரட்டும் தொனியில் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.
மனோஜ் உடன் சண்டை போடும் முத்து
மறுபுறம் வீட்டில் மருமகள்கள் யாருமே இல்லாததால், முத்து, ரவி தான் எல்லா வேலையும் செய்கிறார்கள். ரவி சமையல் வேலையை கவனித்துக் கொள்ள, முத்து வீட்டிற்கு மாப் போடுகிறார். அப்போது அங்கு வரும் மனோஜ், எந்த வேலையும் செய்யாமல் சோபாவில் அமர்ந்திருக்கிறார். அவரிடம் போய் பாத்திரம் கழுவுடா என முத்து சொல்ல, அதெல்லாம் எனக்கு தெரியாது என்று வழக்கம்போல மனோஜ் திமிராக பேசுகிறார்.
பின்னர் அங்கு வரும் விஜயா, மனோஜ் எந்த வேலையும் பார்க்க மாட்டான் என சொல்ல, அவனை கெடுக்குறதே நீங்க தான் என முத்துவும், ரவியும் திட்டுகிறார்கள். இதையடுத்து வீட்டு வேலைக்கு ஆள் எடுக்க விஜயா முடிவு செய்கிறார். அதற்கு மனோஜ் தான் பணம் கொடுக்கணும் நாங்க வீட்டு வேலை செய்ய ரெடியா தான் இருக்கிறோம் ஆனா இவன்தான் வீட்டு வேலை செய்ய மாட்டேங்கிறான் அப்போ அவன் தான் பணம் கொடுக்கணும் என்று முத்து சொல்லி விடுகிறார்.
அண்ணாமலை எடுத்த முடிவு
இதையடுத்து ரூமுக்குள் செல்லும் அண்ணாமலை, விஜயாவிடம் தனியாக பேசுகிறார். அப்போது மீனா இந்த வீட்டோட முதுகெலும்பு, இனி எந்த ஜென்மத்திலும் மீனா மாதிரி ஒரு நல்ல மருமகள் உனக்கு கிடைக்க மாட்டாள், மீனாவை மீண்டும் இந்த வீட்டுக்கு கூப்பிடலாம் என அண்ணாமலை சொல்ல, அதை மட்டும் சொல்லாதீங்க என தடுக்கும் விஜயா, நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று முடிவாக இருக்கிறார். இதனால் கடுப்பான அண்ணாமலை, நாய் வாலை எப்படியும் நிமிர்த்த முடியாது. அது வேஸ்ட் என விஜயாவை குத்திக்காட்டுகிறார்.
மீனா சொன்ன விஷயம்
பிறகு அடுத்த நாள் முத்து, மீனாவின் பூக்கடைக்கு போய் அவரை சந்தித்து பேசுகிறார். அப்போது ரோகிணி அங்கு வந்த விஷயத்தை சொல்லும் மீனா, நம் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அவள் தான் காரணமாக இருக்கக் கூடும் என ஸ்ருதி சந்தேகப்படுவதாக மீனா சொல்கிறார். அதை கேட்டதும் பார்லர் அம்மா இந்த மாதிரி ஃபிராடு வேலைகளை எல்லாம் செய்யக்கூடிய ஆள் தான். முதலில் அந்த பெண் சாமியார் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என என்று சொல்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications