சிறகடிக்க ஆசை: பிசினஸில் மனோஜ்க்கு வந்த சிக்கல்! ரோகிணி இப்படி மாறிட்டாங்க! மாஸ் காட்டிய முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 22ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ரூம் விஷயத்தில் வீட்டில் பிரச்சனை நடக்கிறது. மறுபக்கத்தில் மனோஜ் ஷோரூம் திறப்பதற்கு முன்பே கடையை யாரை வைத்து திறக்கலாம் என்ற குழப்பம் வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், அண்ணாமலை எல்லோரும் வாங்க கொஞ்சம் பேசணும் என்று வீட்டில் இருக்கும் எல்லாரையும் கூப்பிட்டு வைத்து இந்த வீட்டில் மூன்று பசங்க இருக்குறீங்க. ஆனால் மூன்று ரூம் தான் இருக்கிறது அதில் ஒரு ரூமில் நாங்க இருக்கிறதால இரண்டு ரூமில் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருந்தாங்க இப்போ மூணு பேரும் மூணு குடும்பமா இருக்கீங்க.

ஆனால் மீனாவும் முத்துவும் மட்டும் ஹால்லயும் மொட்ட மாடிலயும் படுத்து தூங்குறது அவ்வளவு சரியில்ல. அதனால மாடியில் ஒரு ரூம் கட்டலான்னு முடிவு பண்ணி இருக்கிறேன் என்று சொல்ல அதற்கு முத்து அதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல பாட்டி அமைதியா இருடா என்று தடுக்கிறார். பிறகு மனோஜ் யாருக்குப்பா என்று கேட்க அதானே ரூம் என்றதும் ஓடி வந்துருவான் என்று திட்ட,
அதற்கு விஜயா சரிதான் ஒரு ஆளுக்கு ஒரு கிச்சன் ஒரு அட்டாச் பாத்ரூம் அப்படின்னு கட்டிடலாம் என்று சொல்ல முத்து அதற்கு விஜயா சரிதான் ஒரு ஹால் ஒரு கிச்சன் ஒரு அட்டாச் பாத்ரூம் அப்படின்னு கட்டிடலாம் என்று சொல்ல முத்து இவங்க யாரையோ தனி குடிக்கணும் வைக்க ஏற்பாடு பண்றாங்க என்று கலாய்க்கிறார். பிறகு மீனா ஆடம்பர செலவு எல்லாம் வேண்டாம் சிம்பிளா செய்யலாம் என்று சொல்ல ரோகினி ரூமோட சேர்ந்து அட்லீஸ்ட் ஒரு அட்டாச் பாத்ரூமாவது இருக்கட்டும் என்று சொல்கிறார்.
அதற்கு மனோஜ் ரூம் கட்ட பணம் யாருகிட்ட இருக்கு என்று மனோஜ் கேட்டதும் முத்து உன்னிடம் பணம் கேட்க மாட்டோம் என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை கவலைப்படாதீங்க யாரும் பணம் தர வேண்டாம் நான் என்னுடைய பென்ஷன் படத்துல கட்டிக்கிறேன் என்று சொல்ல, அதற்கு முத்து அது வேண்டாம்பா உன்னுடைய பணம் உன்கிட்ட இருக்கட்டும்.
அதுதான் உனக்கு பாதுகாப்பு இத்தனை வருஷமா நீ கஷ்டப்பட்டு வேலை செஞ்ச பணம் நீ யார்கிட்டயும் கைநீட்டுற நிலைமை வரக்கூடாது என்று சொல்ல, பாட்டி முத்து சொல்றது சரிதான் என்று பாராட்டுகிறார். பிறகு நான் ஒரு ஐடியா சொல்கிறேன் என்று மூன்று ரூம்ல நாங்க ஒரு ரூமில் இருக்கிறோம். மத்த ரெண்டு ரூம்ல ரெண்டு பேர் இருக்காங்க. இனிமே அந்த ரெண்டு ரூமையும் மூன்று பேரும் மாறி மாறி யூஸ் பண்ணட்டும் என்று ஐடியா கொடுக்க மனோஜூம் ரோகிணியும் அதிர்ச்சி அடைகின்றனர்.
முத்து, மீனா வெளியே தூங்குறாங்க அதனால இந்த வாரம் ரோகிணி மனோஜ் வெளியே தூங்கட்டும். அதுக்கப்புறம் ரவி ஸ்ருதி அதுக்கு அடுத்த வாரம் தூங்கட்டும் என்று சொன்னதும் மனோஜ் அதுதான் முத்துவும் மீனாவும் மாடியில் தூங்குறேன் சொல்றாங்களே அப்படியே விட்டுட வேண்டியதுதானே என்று சொல்ல முத்து நான் அப்படி சொல்லலையே என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதற்கு விஜயா ரோகிணி, ஸ்ருதி ரெண்டு பேரும் பணக்கார வீட்டு பொண்ணுங்க. அவங்க வெளியில் எப்படி தூங்குவாங்க என்று கேட்க அதற்கு பாட்டி அதெல்லாம் அவங்க வீட்ல என்ன வேணா இருக்கட்டும் இந்த வீட்ல வாழ வந்தா எல்லாரும் ஒரே மாதிரி தான் இருக்கணும் என்று பதிலடி கொடுக்கிறார். அதோடு இவ்வளவு நாளா வெளியில் தூங்கிட்டு இருந்த முத்து ரூம்ல தூங்கட்டும் அவங்க ஹால்ல தூங்கட்டும் என்று சொல்கிறார்.
பிறகு எல்லாரும் போனதும் பாட்டி கிச்சனுக்கு வந்து மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாட்டி நீ ஹாலிலும் முத்து மொட்டை மாடியிலும் தூங்குனா உங்களுக்கு எப்படி குழந்தை பிறக்கும்? நீ என்ன குந்திதேவியா? அவன் மொட்டை மாடியில் இருந்து பார்த்ததும் கர்ப்பமாக என்று திட்டுகிறார். பிறகு புருஷன் பொண்டாட்டி அன்னோனியமா இருந்தால்தான் வம்சம் விருத்தி அடையும்.
குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும் அதனால நான் சொல்றத செய் என்று அறிவுரை சொல்கிறார். பிறகு மனோஜ் தன்னுடைய பார்க் நண்பரை ஷோரூம்க்கு கூட்டிட்டு வந்து கடையை சுற்றிப் பார்க்கிறார். அப்போது உங்க ஓனர் சீட்டில் மனோஜ் உட்கார்ந்து இருப்பதை பார்த்து பார்க் நண்பர் எழுந்திரு ப்ரோ ஓனர் பார்த்தா ஏதாவது சொல்ல போறாரு என்று சொல்ல மனோஜ் இனிமே நான் தான் ஓனர் என்று சொல்ல அதற்கு பார்க் நண்பர் இன்னும் கடை உன் கைக்கு மாறல என்று கலாய்க்க ரோகினி அதை பார்த்து கோபப்படுகிறார்.
பிறகு கடைக்கு என்ன பெயர் வைக்க போறீங்க பெரிய நடிகையாக கூப்பிட்டு திறங்க அப்பதான் உங்க கடைக்கு விளம்பரம் கிடைக்கும் என்று சொல்ல ரோகினியும் மனோஜும் என்ன செய்யலாம் என்று குழப்பம் அடைகின்றனர். பிறகு வீட்டுக்கு வந்ததும் மனோஜ் ரூமுக்குள் இருக்கும்போது மீனா அவர்கள் வெளியே வராததால் ஹாலில் பாய் போட ஸ்ருதியும் ரவியும் இந்த வாரம் நீங்க உள்ளே தானே தூங்கணும் என்று கேட்கின்றனர்.
அவங்க இன்னும் வெளியே வரல தூங்கிட்டாங்க போல என்று மீனா சொல்ல முத்து மனோஜ் ரூமை தட்டி வெளிய வாடா என்று கூப்பிடுகிறார். பிறகு மனோஜ் வெளியே வர ரோகிணி அதுதான் வெளியே வந்துட்டோம்ல என்று கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications