கிரிஷை வீட்டிற்கு கூப்பிட்டு வரும் முத்து.. ரோகிணி உளறிய வார்த்தை.. விஜயா கொடுத்த வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 30ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் முத்து மற்றும் மீனா ஹாஸ்பிடலில் ரோகிணியின் மகன் கிரிஷை சந்தித்து அவரை வீட்டிற்கு கூட்டிட்டு வருகின்றனர்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ஒவ்வொரு முறையும் முத்து மற்றும் மீனாவிற்கு தான் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் எல்லா தப்புகளையும் செய்து கொண்டிருக்கும் ரோகிணிக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை என்று ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது ஒரு மகிழ்ச்சிகரமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Television Kollywood Siragadikka aasai serial

அதாவது இன்றைய எபிசோடின் இறுதியில் மீனாவுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் முத்து மீனாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகிறார். மறுபக்கத்தில் ரோகிணி ரெஸ்டாரண்டில் இருக்கும்போது ரோகிணியின் அம்மா போன் செய்கிறார். அப்போது ரோகிணி எதுக்குமா இப்ப போன் பண்ணுன நான் உன்னை எதுக்கும் போன் பண்ணாதன்னு சொல்லி இருக்கேன்ல்ல?

சிறகடிக்க ஆசை: விஜயாவுக்கு ஆப்பு வைத்த முத்து.. ரோகிணியின் திமிருக்கு கிடைத்த கூலி.. பாவம் மீனா
இங்க மனோஜ் வேற இருக்கான் என்று திட்ட, அதற்கு ரோகிணிக்கு அம்மா அழுது கொண்டே கிரிஷை ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறேன் டி... என்று சொல்கிறார். இதனால் அதிர்ச்சியான ரோகிணி இப்போ நான் இங்கிருந்து எப்படியாவது ஹாஸ்பிடலுக்கு போய் ஆகணும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து ரோகிணி ஹாஸ்பிடலில் கிருஷை பார்த்துவிட்டு கையில் ஒரு கவரைக் கொண்டு வெளியே வரும் போது, மறு பக்கத்தில் இருந்த ரூமில் இருந்து முத்து மற்றும் மீனாவும் வெளியே வருகின்றனர்.

Television Kollywood Siragadikka aasai serial

அப்போது முத்து மீனா ரோகிணியை பார்த்து அதிர்ச்சி ஆகின்றனர். இந்த காட்சிகள் நாளைக்கான எபிசோட்டில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் தற்போது மே 30ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரைக்குமானா ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஹாஸ்பிடலுக்கு போன முத்து மற்றும் மீனா ஆம்புலன்ஸில் இருந்த கிரிஷை பார்த்து ஐயோ கிரிஷ்க்கு என்ன ஆச்சு என்று ஹாஸ்பிடலுக்கு தூக்கிக்கொண்டு ஓடுகின்றனர்.

பிறகு கிரிஷ்க்கு கண்ணில் ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது ரோகிணியின் அம்மாவிடம் மீனா எங்க வீட்டில் வந்து ரெண்டு நாளைக்கு இருங்க என்று கிரிஷ் மற்றும் ரோகிணியின் அம்மாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வர ரோகிணி அதிர்ச்சியாகிறார். கிரிஷை பார்த்ததும் அண்ணாமலை என்ன ஆச்சு இவ்வளவு பெரிய கட்டு போட்டு இருக்கிறது என்று கேட்டதும் மீனா நாளைக்கு தான் கட்டு பிரிக்கிறதா சொல்லி இருக்காங்க.

அதுவரைக்கும் நம்ம வீட்ல இருக்கட்டுன்னு கூட்டிட்டு வந்திருக்கிறோம் என்று சொன்னதும் விஜயா இங்க என்ன ஹோட்டல்ல வச்சு நடத்துகிறோம்? இல்ல இது ஹாஸ்பிடல் வார்டா? என்று கோபப்பட அதற்கு முத்து இப்ப என்ன உங்களுக்கு பிரச்சனை என்று கேட்டதும் விஜயா இவங்க தங்குவதற்கு இங்க எங்க ரூம் இருக்கிறது? என்று கேட்க, அதற்கு ரோகிணி இவங்க எங்க ரூம்ல தங்கட்டும் ஆன்ட்டி என்று சொல்கிறார்.

Television Kollywood Siragadikka aasai serial

பிறகு விஜயா ரோகிணியிடம் இவங்க ரெண்டு பேரையும் எப்படியாவது நாளைக்கு வெளியே அனுப்பிடனும்.. நீதான் ஏதாவது செய்யணும்.. என்று சொல்லுகிறார். இனி ரோகிணி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்போடு ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. இந்த முறையாவது ரோகிணி பற்றிய உண்மைகள் வீட்டில் யாருக்காவது தெரிய வருமா? இல்லை இந்த முறையும் வழக்கம் போல ரோகிணி தப்பித்து விடுவாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+