சிறகடிக்க ஆசை: நடுத்தெருவில் தவிக்கும் அண்ணாமலை.. முத்து நறுக்குன்னு கேட்ட கேள்வி! பிரிந்து சென்ற விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மே 7ஆம் தேதிக்கான எபிசோடில் மனோஜ் செய்த வேலையால் அண்ணாமலையும் விஜயாவும் பிரிந்து இருக்கின்றனர். விஜயா குடும்பத்தினர் எல்லோரும் இப்போது நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வந்தவுடன் அவர்களிடம் அண்ணாமலை "பைனான்சியரை பார்த்து பேசினீங்களா?" என்று கேட்கிறார். ஆனால் முத்து எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறார். அந்த அமைதியே பெரிய பதிலாக மாற, நிலைமை சரியில்லை என்பதை அனைவரும் உணர ஆரம்பிக்கிறார்கள். எல்லோரும் என்னாச்சு என்று கேட்கின்றார்.
மீனா சொன்ன விஷயம்
அந்த நேரத்தில் மீனா "நாங்கள் அவரை பார்க்க பல இடங்களில் தேடி அலைந்தோம். தெரு தெருவாக அலைய வைத்தார். கடைசிவரை எங்களை சந்திக்கவே இல்லை," என்று சொல்ல, அதைக் கேட்டு அண்ணாமலை உடைந்து போய் உட்கார்ந்து விடுகிறார். பிறகு நடந்து வக்கீல் ஆபீஸில் நடந்த விஷயங்களையும் மீனா சொல்கிறார். இதனால் அண்ணாமலை இனி நம்மால் இந்த வீட்டில் வாழவே முடியாதா என்று ஃபீல் பண்ணி கேட்கிறார்.

அதற்கு மனோஜ் இப்போ கூட பிரச்சனை இல்ல இந்த வீட்டை நாம விச்சு விடலாம் என்று சொல்ல, உடனே ரவியும் ஸ்ருதியும் கோவப்பட்டு திட்டுகிறார்கள் ஆனாலும் மனோஜ் புரிந்து கொள்ளவே இல்லை. உடனே முத்து கோபமாகி நீ செஞ்ச வேலையால் தானடா இன்னைக்கு இந்த அளவுக்கு வந்திருக்கு, கொஞ்சம் கூட உனக்கு வருத்தமே இல்லையா? என்று கேட்கிறார்.
கோபத்தில் அண்ணாமலை
அதற்கு விஜயா ஏதோ தெரியாம பண்ணிட்டான் என்று மகனுக்கு சப்போர்ட் பண்ணுகிறார். அதற்கு அண்ணாமலை பையன் நல்லா இல்லன்னா அம்மா தான் திருத்தணும் ஆனா இந்த பையன் கெட்டுப் போறதுக்கு காரணமே அம்மா தானே அவளால எப்படி இந்த குடும்பம் நல்லா இருக்கும் என்று கோவப்பட்டு திட்டுகிறார். முத்து நாளைக்கு காலையில் வந்து ஆபீஸர்ஸ் வீட்டை சீல் வைக்கும் போது நாம இங்க இருந்து அசிங்கப்படுவதை விட நாளைக்கு அவங்க வர்றதுக்கு முன்னாடியே வீட்டை விட்டு போயிடுவோம் என்று ஐடியா கொடுக்கிறார்.
முத்து கேட்ட கேள்வி
அதை கேட்டு அண்ணாமலை நாம எங்க போறது என்று ஃபீல் பண்ணுகிறார். அப்போது முத்து மீனாவின் வீட்டுக்கு போயிடலாம் என்று சொன்னதும், விஜயா என்னால அந்த வீட்டில் வந்து இருக்க முடியாது, ஒரு நாள் கூட நான் அந்த வீட்ல வந்து தங்க மாட்டேன். நான் அந்த அளவிற்கு இன்னும் கெட்டுப் போகல என்று திமிராகவே பேசுகிறார். அப்போது ஸ்ருதி சரி நீங்க அவங்க வீட்டுக்கு போகலன்னா எங்க வீட்டுக்கு வாங்க அங்க போயிருவோம் என்று சொல்கிறார்.
மனோஜ் செய்த செயல்
அப்போது மனோஜ் அப்போ நான் எங்க போகிறது என்று கேட்க, உன்னாலதானே இவ்வளவு பிரச்சனை வந்துச்சு இனி ஷோரூமில் தங்கிக்க என்று சொல்ல, அங்க எந்த வசதியுமே கிடையாதே என்று மனோஜ் கேட்டதும் முத்துவிற்கு கோபம் வருகிறது. இவ்வளவு பிரச்சனையும் உன்னால தான் வந்து இருக்கு அதை நெனச்சு வருத்தம் இல்ல... ஆனா உனக்கு தங்கறதுக்கு எந்த வசதியும் இல்லன்னு நீ வருத்தப்படுவியா என்று திட்டுகிறார்.
பிரியும் விஜயா அண்ணாமலை
பிறகு எல்லோரும் தூங்கிவிட்டு அடுத்த நாள் காலையில் வீட்டை விட்டு வெளியே கிளம்புகின்றனர். அப்போது அண்ணாமலை ஃபீல் பண்ணுகிறார். அதை பார்த்து விஜயா அழுது கொண்டு இருக்கிறார். இந்த நிலைமைக்கு எல்லாம் காரணமான மனோஜ் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் ஷோரூமில் இருக்கும் சந்தோஷுக்கு போன் செய்து தான் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை நினைத்து பீல் பண்ணியப்படியே அண்ணாமலை முத்துவின் காரில் போகிறார். விஜயா ஸ்ருதி ரவியின் காரில் ஏறிப் போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications