சிறகடிக்க ஆசை: ஸ்ருதி வீட்டில் விஜயாவுக்கு கிடைத்த அதிர்ச்சி! மீனா அருமை இப்போதாவது புரிந்ததே! முத்து செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மே 7ஆம் தேதிக்கான எபிசோடில் அண்ணாமலையின் வீடு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே போன விஜயா ஸ்ருதி வீட்டிற்கு போய் இருக்கிறார். அங்கு நடந்த சம்பவத்தை பார்த்து விஜயாவிற்கு மீனாவின் அருமையை புரிந்து கொள்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வீட்டு பத்திரத்தை வைத்து கடன் வாங்கியதால் பைனான்சியர் அண்ணாமலை வீட்டை ஏலத்தில் விடுவதற்காக நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனால் வீட்டிற்கு சீல் வைக்க ஆள்கள் வருவதற்கு முன்பே வீட்டை விட்டு காலி பண்ணி போக வேண்டும் என்று முத்து ஐடியா கொடுத்திருந்தார். அதற்காக விஜயா ஸ்ருதி வீட்டிற்கு போவதாகவும், அண்ணாமலை மீனா வீட்டிற்கு போவதாகவும் வீட்டை விட்டு கிளம்பி போயிருக்கின்றனர்.
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா ஸ்ருதி மற்றும் ரவியுடன் ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு வருகிறார். அங்கு வாசலில் நின்று கொண்டே யோசித்துக் கொண்டிருக்கிறார். ஸ்ருதியும் ரவியும் வீட்டிற்குள் சென்று நிலைமையை சொன்னதும் ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் வந்து விஜயாவை வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு போகின்றனர்.
பிறகு விஜயாவிற்கு பிளாக் டீ கொடுக்கின்றனர். அதை பார்த்து விஜயா இதை எப்படி குடிக்கிறது பால் இல்லையா என்று கேட்க, அதற்கு ஸ்ருதி அம்மா, எங்கே வீட்டில் இதைத்தான் குடிப்போம் நல்லா இருக்கும் குடிங்க இதுதான் உடலுக்கு நல்லது, பால் குடிக்கிறது உடம்புக்கு நல்லது கிடையாது என்று சொல்கிறார். அதைக் குடித்து பார்த்த விஜயாவால் அதை குடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
அசிங்கப்பட்ட விஜயா
பிறகு ஸ்ருதியின் அப்பா அண்ணாமலை என் கூட வேலை பார்க்கும் போது யாரையும் ஏமாத்த மாட்டாரு, ரொம்ப நல்ல மனுஷன் அப்படிப்பட்டவருக்கு இப்படி ஒரு பையன் கிடைச்சுருக்குறான் அண்ணாமலை பாவம் என்று சொன்னதும் விஜயாவின் முகமே மாறி போகிறது. பிறகு ரவியும் ஸ்ருதியும் ரெஸ்டாரன்ட் போனதும், விஜயா மீனாவிடம் தான் டீ வேண்டும் என்று அதிகாரமாக கேட்டது.. மீனா கொடுத்த டீயை கூட நல்லா இருக்கு என்று சொல்லாமல் அவரிடம் திமிராக பேசியதை எல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக மனோஜ் ரெஸ்டாரண்டில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்கிறார். அப்போது அங்கு நிறைய எலி இருக்கு என்று சொன்னதும் தனியாக தங்குவதற்கு பயந்து கொண்டு சந்தோஷை துணைக்கு தூங்க சொல்ல அதற்கு அவர் முடியாது என்று சொல்கிறார். அடுத்ததாக மீனா வீட்டில் அவரும் அவருடைய அம்மாவும் சமைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
அண்ணாமலை பீலிங்
அப்போது அண்ணாமலை சோகமாக இருப்பதை பற்றி இருவரும் ஃபில் பண்ணி பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு அண்ணாமலைக்கு சாப்பாடு வைக்கும் சமயத்தில் முத்து அண்ணாமலை தூங்குவதற்கான பெட்டுடன் அங்கே வருகிறார். பிறகு சீதாவும் வீட்டில் இருந்து சமைத்து சாப்பாட்டை கொண்டு வந்து பரிமாறுகிறார்.
இதையெல்லாம் பார்த்த அண்ணாமலை நான் என் வீட்டை விட்டு வெளியே வரும்போது இனி நம்ம நிலமை அவ்வளவுதான் நமக்குன்னு யாருமே இல்லன்னு பீல் பண்ணுனேன். ஆனா இங்க வந்த பிறகு நீங்க எல்லாரும் இருக்குறதை பார்த்து எனக்கு ஆட்கள் இருக்காங்கன்னு ஒரு நம்பிக்கை வந்து இருக்கு என்று பீல் பண்ணி சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.













Click it and Unblock the Notifications