வீடியோ எடுத்தவனை பளார் விட்ட மீனா! இதைத்தானே எதிர்பார்த்தோம்.. இதை நோட் பண்ணுங்கப்பா! செம ப்ரோமோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் முத்துவுக்காக பாருக்கு சென்று மீனா உண்மையை கண்டுபிடித்திருக்கிறார்.
அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரத்தில் முழுக்க முத்து குடிக்காமலேயே குடித்துவிட்டு கார் ஓட்டுவதாக சிட்டி செய்த சதியால் இணையத்தில் அனைவரும் முத்துவை திட்ட, அதை உண்மை என்று நம்பிய அண்ணாமலை மற்றும் மொத்த குடும்பத்தினரும் முத்துவுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் முத்துவின் தம்பி ரவி மட்டும் தான் முத்து கண்டிப்பாக வேலை நேரத்தில் குடித்து இருக்க மாட்டான் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் மீனா கூட முத்துவை நம்பாமல் பேசிக் கொண்டிருந்தார். இதனால் முத்து குடிக்கவில்லை என்பதை யார் கண்டுபிடிப்பார்கள்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். இப்போது நேற்றைய எபிசோடில் சிட்டி பேசிய வார்த்தை மற்றும் இன்றைய எபிசோடில் முத்து மீனா மீது சத்தியம் செய்தது எல்லாவற்றையும் வைத்து மீனா முத்து குடித்ததாக சொல்லப்படும் பார்க்கு துணிச்சலாக போயிருக்கிறார்.
அதே நேரத்தில் அங்கு குடிமகன்கள் கடை எப்போது திறக்கும் என்று காத்திருக்கும் போது மீனாவும் அவர்களோடு சேர்ந்து காத்திருப்பதை பார்த்த ஒரு யூடியூபர் மீனாவை வீடியோ எடுத்து நீங்க இதுவரைக்கும் பெண்கள் தண்ணீருக்காக காத்து இருப்பதை பார்த்திருப்பீங்க இப்போ குடும்ப குத்து விளக்கு போல இருக்கும் ஒரு பெண் பாரில் குடிப்பதற்காக காத்திருக்கிறார் என்று சொல்லிக் கொண்டு மீனாவிடம் நீங்க எப்போ இருந்து குடிக்க தொடங்கினீங்க என்று கேட்க,

கோபமான மீனா அவருடைய கன்னத்தில் பளார் என்று அடித்து நான் என்னுடைய புருஷன் மீது விழுந்திருக்கும் வீண் பழியை துடைப்பதற்காக இங்கே வந்திருக்கிறேன். அது தெரியாம நீயா இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்குற என்று திட்டி இருக்கிறார். பிறகு பாருக்குள் சென்று அங்கிருக்கும் உரிமையாளரிடம் என்ன உங்க பொண்ணா நினைச்சு இந்த ஒரு உதவியை செய்யுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு அழுகிறார்.
பிறகு அவரும் சிசிடிவியை பார்ப்பதற்கு அனுமதிக்கிறார். அப்போது அங்கு என்ன நடந்தது என்பதை சிசிடிவி-யில் மீனா பார்க்க சிட்டி வீடியோ எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார். பிறகு தன்னுடைய நண்பர்கள் மற்றும் ரவியோடு முத்து பேசிக் கொண்டிருக்கும் இடத்திற்கு ஓடி வந்த மீனா முத்துவை கட்டி பிடித்து அழுகிறார். ஒரு வழியாக முத்து மீது தப்பில்லை என்பதை மீனாவே கண்டுபிடித்துவிட்டார்.

இது குறித்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த முத்து பற்றிய உண்மையை கண்டுபிடிப்பதற்கு இன்னும் ஒரு சில எபிசோடுகள் இழுத்தடிப்பார்கள் என்று நினைத்து வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு இன்றைய ப்ரோமோ உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. இதுபோல சீரியலில் அடுத்தடுத்து வேகமாக கொண்டு போங்க என்று பலரும் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
ஆனாலும் இந்த பிரச்சனையில் சிட்டி மட்டும்தான் மாட்டுவார் என்று தெரிகிறது. ஸ்ருதியின் அப்பா தான் போலீசுக்கு போன் போட்டு முத்துவை அரெஸ்ட் செய்ய சொன்னது என்பதும், ரோகிணியின் சூழ்ச்சிகளும் இப்போதும் வழக்கம் போல தெரியாமல் இருக்கிறது என்பது ரசிகர்களின் வருத்தமாகவும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications