சிறகடிக்க ஆசையில் டுவிஸ்ட்.. அடுத்து நடக்கப்போவது? முத்து கொடுத்த அப்டேட்.. பிரச்சனை நடந்துடுச்சா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவால் ரோகிணி மற்றும் ஸ்ருதியின் தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனில் பிரச்சனை ஏற்படுமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்த சீரியலில் முத்துவாக நடிக்கும் நடிகர் வெற்றி வசந்த் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த புகைப்படங்களை பார்க்கும் போது அங்கு பிரச்சனை நடந்ததற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. ஆனால் அதைத் தொடர்ந்து இந்த சீரியலில் ஸ்ருதியாக நடிக்கும் நடிகை ப்ரீத்தா லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அவர் மார்டன் உடையில் இருப்பது போன்று காட்சிகள் இருக்கும் நிலையில் ஸ்ருதி அவங்க அம்மா வீட்டுக்கு போய் விட்டாரா? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலின் எதிர்பார்ப்பான கட்டத்தில் இருக்கிறது. ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்வதற்காக ஆர்வமாக இருக்கின்றனர். ஏற்கனவே இந்த சீரியலில் முத்து எதற்காக சிறுவர் சீர்திருத்த பள்ளியில் குழந்தையாக இருக்கும்போது போனார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
அதே நேரத்தில் அந்த பிளாஷ்பேக் உடைவதற்கு முன்பு ரோகிணி விஜயாவிடம் மாட்டி விடுவாரா? இல்லையா? என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இப்படியான நிலையில் இப்போது ஸ்ருதி மற்றும் ரோகிணியின் தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனில் முத்துவை வைத்து பிரச்சனை நடத்த வேண்டும் என்று மண்டபத்திற்குள் பெரிய சதி நடந்து கொண்டிருக்கும்போது இதில் முத்து சிக்கிவிடக்கூடாது, முத்து தான் நேர்மையான ஒரு மனிதராக இருக்கிறார்.

அதனால் அவருடைய கோபத்தை வைத்து இங்கே பலர் குளிர் காய நினைக்கிறார்கள். அதனால் அது நடக்கக்கூடாது என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கருத்து தெரிவிக்க வருகிறார்கள். அதே நேரத்தில் சீரியல் தரப்பினர்கள் சுவாரசியத்திற்காக என்ன மாதிரி முடிவெடுக்க போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இப்படியான நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சீரியலில் முத்துவாக நடிக்கும் நடிகர் வெற்றி வசந்த் சில புகைப்படங்களை வெளியிட்டு நான் இந்த மூவ்மெண்டை மிஸ் பண்ணுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
அதில் ஸ்ருதி மற்றும் ரோகிணிக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடந்து முடிந்திருக்கிறது. இருவருடைய கழுத்திலும் மஞ்சள் தாலி இருக்கிறது. கன்னத்திலும் மஞ்சள், சந்தனம் எல்லாம் பூசப்பட்டிருக்கிறது. இதனால் ஃபங்ஷன் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்துவிட்டது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பங்க்ஷனில் யாரால் பிரச்சனை ஏற்பட்டது என்ற கேள்விகள் தான் பெரியதாக இருக்கிறது.
ஏனென்றால் பங்க்ஷனில் பிரச்சனை ஏற்பட்டதால் ரோகிணியின் அப்பா இந்த பங்க்ஷனுக்கு வரவில்லை என்பதை ரோகிணியால் சமாளிக்க முடியும். இல்லை என்றால் ரோகிணி இந்த முறையை மாட்டி விடுவார். ஆனால் இந்த முறை ரோகிணி மாட்டி விட்டால் சீரியலில் பாதி கதை முடிவுக்கு வந்துவிடும். அதனால் ரோகிணி இப்போது மாட்டுவதற்கு வாய்ப்பே கிடையாது.
அதே நேரத்தில் அப்போ ரோகிணி எப்படி தன்னுடைய அப்பா விஷயத்தில் சிக்காமல் தப்பித்தார் என்ற கேள்விகளும் உங்களுக்கு எழலாம் ஆனால் இங்கு கண்டிப்பாக முத்துவோ அல்லது முத்துவுக்கு ஆதரவாக மீனாவோ ஏதோ பிரச்சனை செய்திருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. காரணம் தற்போது இந்த சீரியலில் ஸ்ருதியாக நடிக்கும் நடிகை பிரீத்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் ஸ்டைலிஷ் ஆக சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த புகைப்படங்களில் இருக்கும் பேக்ரவுண்டை பார்த்தால் அது ஸ்ருதியின் வீடு போல இருக்கிறது. அதனால் ஸ்ருதி அவருடைய அம்மா வீட்டுக்கு போய்விட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கண்டிப்பாக பிரச்சினை நடந்திருக்கிறது.. இதனால் ரவியும் ஸ்ருதியும் அம்மா வீட்டில் போய் இருக்கும் நிலையில் மீனாவையும் முத்துவையும் வீட்டை விட்டு துரத்துவதற்காக விஜயா அடுத்த பிளான் போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications