சிறகடிக்க ஆசை: சிந்தாமணியின் பிளானை கண்டுபிடித்த மீனா.. துணைக்கு வந்த ஸ்ருதி.. அடுத்த வார அப்டேட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சிந்தாமணி மீனாவுக்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்று சூழ்ச்சி செய்தார். ஆனால் அதை மீனா கண்டுபிடித்து இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போது மாட்டுவார் என்று எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஏமாற்றம் தான் வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் இந்த வாரம் மீனா முத்துவிற்கு பிரச்சனை வருவது போன்று காட்சிகள் இருக்கிறது. அதாவது மீனாவிற்கு பெரிய ஆர்டர் ஒன்று ஒரு மண்டபத்தில் கிடைக்கிறது.

சிந்தாமணியின் சூழ்ச்சி
அதற்காக அங்குள்ள மேனேஜர் நீங்கள் இந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டு அட்வான்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். மீனாவும் அதுபோல கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த பிளான் எல்லாமே சிந்தாமணி போட்டது என்பது மீனாவிற்கு தெரியாது. தனக்கு பெரிய ஆர்டர் கிடைத்ததும் அதை குடும்பத்தில் வந்து சந்தோஷமாக மீனா சொல்ல முத்து உட்பட குடும்பத்தினர் எல்லோரும் மீனாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லி சந்தோஷப்படுகிறார்கள்.
பொறாமையில் விஜயா
ஆனால் விஜயா மட்டும் வழக்கம் போல மீனாவின் வளர்ச்சியை பார்த்து பொறாமையில் இருக்கிறார். அந்த நேரத்தில் சிந்தாமணி விஜயாவுக்கு போன் போட அப்போது சிந்தாமணி விஜயா வீட்டில் நடக்கும் விஷயங்களை சொல்கிறார். மீனாவுக்கு ரெண்டு லட்சத்திற்கு பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு என்று சொல்ல, அதற்கு சிந்தாமணி எனக்கு தெரியும். நான்தான் அந்த ஆர்டரை மீனாவுக்கு கிடைக்க வைத்தேன், இனி மீனா எடுக்கும் கடைசி ஆர்டர் இதுதான். இதை மீனா செய்து கொடுத்தால் மீனா வேலையை விட்டுவிட்டு போய்விட வேண்டியதுதான் என்று சொல்லி இருக்கிறார்.
பண தேவை
அதுபோல இந்த ஆர்டர் முடிப்பதற்கு ஒன்றரை லட்சம் செலவாகும் அதற்கு பணத்துக்கு என்ன செய்ய என்று மீனா யோசித்துக் கொண்டிருக்கும் போது முத்து நான் ஏதாவது ஏற்பாடு பண்ணட்டுமா என்று கேட்க, வேண்டாம் என்னால் முடிந்த அளவிற்கு நான் செய்கிறேன். முடியவில்லை என்றால் மட்டும் உங்களிடம் கேட்கிறேன் என்று மீனா சொல்லி இருக்கிறார்.
அடுத்த வார ப்ரோமோ
இப்படியான நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனா ஏமாற்றப்பட்டு இருப்பதை தெரிந்து இருக்கிறார். மீனாவிடம் அவருடைய அம்மா அந்த மண்டபத்து காரரிடம் பேசுனியா பணம் தருவது பற்றி ஏதாவது சொன்னாரா? என்று கேட்க, இல்லை இதில் பெரிய சூழ்ச்சி நடந்து இருக்கிறது நாம ஒரு வேலை பண்ணி அந்த சிந்தாமணி தான் இந்த பிளான் போட்டது என்று கண்டுபிடித்துவிட்டால் இந்த பிரச்சனையில் இருந்து நாம தப்பிவிடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மீனாவின் மாஸ்டர் பிளான்
பிறகு இதற்காக சீதாவின் குடும்பத்தினர் மீனாவிற்கு உதவி செய்ய முன் வருகிறார்கள். அதைத்தொடர்ந்து மீனா ஸ்ருதியை சந்தித்து நடந்த பிரச்சனைகளை சொல்கிறார். அப்போது ஸ்ருதி இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு என்ன பண்ணனும் என்று கேட்க மீனா பிளான் போட்டு கொடுக்கிறார். அதனால் ஸ்ருதி தான் இனிமே வேற யாருடையாவது குரலில் பேசி சிந்தாமணி தான் இந்த பிளான் போட்டு மீனாவை சிக்க வைத்தது என்பதை ஒத்துக் கொள்ள வைப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications