சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் செம சம்பவம்! ரோகிணியின் திருட்டு செயினால் சிக்கும் விஜயா, காப்பாற்றும் முத்து?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சிட்டி இடம் வாங்கி கொடுத்த திருட்டுச் செயின் பற்றிய உண்மைகள் விஜயாவிற்கு தெரிய வருகிறது. இதனால் எல்லோர் முன்னாடியும் விஜயா அவமானப்பட்டு நிற்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் பல எதிர்பாராத சம்பவங்கள் இனிதான் நடக்கப்போகிறது. ஏற்கனவே அருண் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றும் குடும்பத்திற்கு தெரிய வருகிறது. அதிலும் ஒரு பெண்ணை காப்பாற்றியது முத்து தான் என்ற உண்மையும் இப்போது குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் அருண் இப்போதும் முத்துவிடம் திமிராக பேசுகிறார். நீ என்னை வேணும்னு பழிவாங்குவதற்காக தான் அந்த லேடியை உன் வீட்டுக்கு வர வச்சு வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியாவில் போட்டு இருக்க என்று சொல்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

அருண் சூழ்ச்சி

ஆனால் சீதா மற்றும் மீனாவிடம் நான் ஏதோ தெரியாமல் பண்ணி விட்டேன், இப்போ தான் எனக்கு உண்மை புரிகிறது, அதனால் எனக்கும் சீதாவுக்கும் திருமணத்தை நீங்கதான் நடத்தி வைக்கணும் என்று சொல்ல, மீனா அதிர்ச்சியில் இருக்கிறார். இனி சீதாவிற்காக மீனா முத்துவுக்கு தெரியாமல் திருமணத்தை நடத்தி வைப்பார் என்று தான் தெரிகிறது. சீதாவின் திருமணம் நடப்பதால் முத்து கடும் கோபத்தில் இருப்பார். அந்த உண்மைகளை சொல்லி அருண் முத்துவை வெறுப்பேற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயாவின் பிளான்

இந்த பஞ்சாயத்துக்கு இடையில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோவும் வெளியாகி அனைவருக்கும் இந்த சீரியல் பற்றிய எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது. அதாவது ஏற்கனவே ரோகிணி பற்றிய உண்மைகள் குடும்பத்திற்கு தெரிந்ததும் விஜயா ரோகிணியின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். ரோகிணியை விவாகரத்து செய்து அனுப்பி நீத்துவை கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ரோகிணி செய்த செயல்

அப்போது விஜயாவின் மனதை மாற்றுவதற்காக சிட்டி கொடுத்த திருட்டுச் செயினை வித்யாவிடம் பணம் வாங்கி ரோகிணி வாங்கி இருந்தார். அந்த செயினை விஜயாவிடம் கொடுத்து நான் இது உங்களுக்காக வாங்கிய செயின் என்று சொல்லி இருந்தார். முதலில் அதை வாங்காமல் பிகு செய்த விஜயா பிறகு தங்கம் என்றதும் வாங்கி வைத்துக் கொண்டார். இந்த நிலையில் விஜயா அந்த செயினை போட்டுக்கொண்டு சிந்தாமணி வீட்டு பங்க்ஷனுக்கு போயிருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

மாட்டிய செயின்

அப்போது அங்கிருந்த ஒரு பெண் இந்த செயினை பார்த்து விசாரிக்கிறார். அப்போது இந்த செயின் ஆன்ட்டிக் கலெக்சன் ரொம்ப அருமையா இருக்கும் என்று பெருமையாக விஜயா பேசிக் கொண்டிருக்கும் போது அந்த பெண் இது என்னுடைய செயின், என்னிடம் இருந்து திருட்டு போன செயின் என்று சொன்னதும் விஜயா அதிர்ச்சி ஆகிறார். அப்படி இருக்க வாய்ப்பு இல்லை ஒரே போல எத்தனையோ செயின் இருக்குமே என்று சொல்ல, என்னுடைய பெயர் அந்த செயினுக்கு பின்னாடி இருக்கும் என்று சொன்னதும் விஜயா பார்க்க அந்தப் பெண் சொன்னது போலவே செயினுக்கு பின்னாடி அந்த பெண்ணின் பெயர் இருக்கிறது.

Siragadikka aasai serial vijay tv

சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம்

இதனால் அனைவர் முன்பு விஜயா அவமானப்பட்டு இருக்கிறார். இனி விஜயாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போவதற்காக அந்த பெண் யோசித்தால் எப்படியும் முத்து தான் விஜயாவை காப்பாற்றுவார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே முத்து ஒரு பெண்ணை காப்பாற்றியதற்காக அந்த பெண் வீட்டிற்கே வந்து விஜயாவை பெருமையாக பேசிவிட்டு போயிருந்தார். இந்த மகனை பெற்ற உங்களுடைய வயிற்றை தொட்டு கும்பிடணும் என்று சொன்னதும் விஜயா எமோஷனல் ஆகி இருந்தார். இந்த சூழ்நிலையில் இனி முத்து விஜயாக்கு உதவி செய்யும்போதுதான் விஜயா முத்துவை புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதுபோல ரோகிணிக்கு பெரிய சம்பவமும் காத்திருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+