சிறகடிக்க ஆசை: மனம் மாறிய சத்யா.. ரோகிணிக்கு வந்த புது சிக்கல்.. முத்து நறுக்குன்னு கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 13ஆம் தேதிக்கான எபிசோடில் சத்யா மீது கொடுத்த கேஸை விஜயா வாபஸ் வாங்க சம்மதிக்கிறார். அதே நேரத்தில் ரோகிணிக்கு சிட்டி மூலமாக புது பிரச்சனை வருகிறது.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வக்கீல் விஜயாவிடம் சத்யா மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்குவதற்காக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜயா கேஸை வாபஸ் வாங்குனா எனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று கேட்க, அதற்கு வக்கீல் உங்களுக்கு ஐம்பதாயிரம் தரேன் என்று சொல்கிறார்.

அதற்கு விஜயா அது சரிப்பட்டு வராது எனக்கு 2 லட்சம் வேணும் என்று சொல்ல, அதற்கு வக்கீல் சரி என்று சம்மதம் சொல்கிறார். ஆனால் நீங்க கேஸை வாபஸ் வாங்குவதற்கு போலீஸ் ஸ்டேஷன் வந்து தான் வாங்கணும். அப்போ உங்களுக்கு பணத்தை தரேன் என்று சொல்கிறார்.
மறுபக்கத்தில் அண்ணாமலை முத்துவிடம் நீ வேலைக்கு போகலையா என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்துவுக்கு வக்கீல் போன் செய்து விஜயா கேஸை வாபஸ் வாங்குகிறேன் என்று சொல்லிட்டாங்க என்று சொல்ல முத்து சந்தோஷப்படுகிறார்.
பிறகு அண்ணாமலை இடம் அம்மா கேஸை வாபஸ் வாங்க சம்மதம் சொல்லிட்டாங்க என்று சொல்ல, அண்ணாமலை அது எப்படி இவ்வளவு சீக்கிரமா மனம் மாறினா என்று சந்தேகப்படுகிறார். அந்த நேரத்தில் மனோஜ் வந்து அம்மா வீட்டில் இல்லை என்று நாங்களே வருத்தத்தில் இருக்கிறோம் நீ அம்மா வீட்டில் இல்லாததை நினைச்சு சந்தோஷமா இருக்கிறியா? என்று கேட்க அதற்கு முத்து அம்மா சத்யா மீது கொடுத்து கேஸை வாபஸ் வாங்க சம்மதம் சொல்லிட்டாங்க என்று சொல்ல அதை கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
அடுத்ததாக சத்யாவை கூட்டிக்கொண்டு முத்துவும் மீனாவும் அம்மா வீட்டிற்குள் வருகின்றனர். அதை பார்த்ததும் மீனாவின் அம்மா சந்திரா ரொம்பவும் சந்தோஷப்படுகிறார். அப்போது முத்துவிற்கு நன்றி சொல்ல அதற்கு முத்து நான் என்னுடைய கடமை தான் செய்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதுவரைக்கும் திமிரா பேசிக் கொண்டிருந்த சத்யா நான் இப்போதான் வாழ்க்கையை புரிஞ்சு கொண்டேன். இனி நான் தப்பு பண்ண மாட்டேன். உங்கள பத்தி தெரியாம பல முறை அவமானப்படுத்திட்டேன் என்று மன்னிப்பு கேட்கிறார். அதற்கு முத்து சத்யாவிடம் நீ நல்லா படிச்சி நல்லபடியா வேலைக்கு போகணும் என்று சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் சிட்டி இடம் ஒரு நபர் வந்து அந்த விஜயா அம்மா சத்யா மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்குறேன்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல, சிட்டி நான் அந்த முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு அடிச்சு தொரத்துவாங்கன்னு பார்த்தேன் ஆனா அப்படி நடக்கலையே என்று சொல்கிறார்.
அதோடு இன்னும் ஏதாவது பிரச்சனை வராமலா போகும் என்று பேசிக் கொண்டிருக்கும்போது ரோகிணியின் பிஏ சட்டையை போட்டு வந்து வெளியே கிளம்புகிறார். அதை பார்த்ததும் சிட்டி எங்க போறா என்று கேட்க அதற்கு அவர் நான் உள்ளேயே வீட்டிற்குள் இருப்பதால் எனக்கு ஒரு மாதிரி இருக்கு நான் போய் சரக்கு போட்டுட்டு வரேன், அந்த ரோகிணி பெரிய கேடி அவ உடனே பணம் தர மாட்ட என்று சொல்கிறார்.

அதற்கு சிட்டி என் மீது பயம் குறைஞ்சு போயிட்டா? என்ன செய்யணும்னு எனக்கு தெரியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டத்தில் ரோகிணியும் அவருடைய தோழி வித்யாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ரோகிணி எங்க மாமியார் எப்படி கேஸை வாபஸ் வாங்குனாங்கன்னு தெரியல.
அவங்கள யாராவது மிரட்டி இருக்கணும் இல்லன்னா இந்த முத்து ஏதோ செஞ்சு இருக்கான் அதனால்தான் அவங்க கேஸை வாபஸ் வாங்குகிறேன் என்று சொல்லி இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications