சிறகடிக்க ஆசை: சிட்டியிடம் மாட்டிய ரோகிணி.. மீனா மீது பாசத்தை கொட்டும் விஜயா.. முத்து கொடுத்த ஷாக்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 18ம் தேதிக்கான எபிசோடில் சிட்டியிடம் ரோகிணி 2 லட்சம் பணத்தை கொடுக்கிறார். ஆனால் சிட்டி இதை வைத்து வேறு ஒரு பிளான் போடுகிறார். அதே நேரத்தில் மீனா மீது தனக்கு இருக்கும் பாசத்தை விஜயா வெளிப்படுத்துகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனாவுடன் போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருக்கும்போது விஜயா, மனோஜ், ரோகிணி வருகிறார்கள். அப்போது மனோஜ் வரும்போது மீனா திரும்பி நிற்க முத்து அவரை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியான மனோஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த முத்து ஏதோ ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து கட்டி பிடிச்சிட்டு நிற்கிறான், எல்லாரும் ஓடி வாங்க என்று கூப்பிட ரோகிணியும், விஜயாவும் வந்து பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

நடுவீட்டில் என்ன செய்கிறாய்? யார் அந்த பொண்ணு என்று திட்டுகிறார். அதோடு மீனாவுக்கு முத்து துரோகம் பண்ணுவதாக நினைத்து மீனா எங்கே? அவ பார்த்தா என்ன நடக்கும் என்று தெரியும்தானே என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு முத்து நான் விளம்பரத்துக்காக மாடல் கூட்டிட்டு வந்திருக்கிறேன் என்று சொல்ல இதெல்லாம் பார்த்தா மீனா எப்படி தாங்குவா ?என்று மீனா மீனா என விஜயா கத்த மீனா பேசப்போகிறார்.
ஆனால் முத்து கொஞ்ச நேரத்திற்கு மீனாவை திரும்ப விடாமல் பிடித்துக் கொள்கிறார். பிறகு மீனா திரும்பி முகத்தை காட்டி நான் தான் அத்தை விளம்பரத்துக்காக போட்டோ சூட் செய்தோம் என்று சொல்கிறார். அப்போது முத்து பார்த்தியா அம்மாவுக்கு உன் மேல எவ்வளவு பாசம்? நான் துரோகம் பண்றதா நினைச்சு இவ்வளவு கத்திட்டாங்க என்று முத்து சொல்ல, அதைக் கேட்டு மீனா அவர் எனக்கு துரோகம் பண்ண மாட்டார்.

இதுல இருந்து நீங்க என்ன இந்த வீட்டு பொண்ணா தான் நினைக்கிறீங்க என்று தெரிகிறது என்று சொல்கிறார். அதற்கு விஜயா சமாளித்துவிட்டு அங்கிருந்து போகிறார். அடுத்ததாக ரோகிணி சிட்டியிடம் இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கிறார். அப்போது இனி உங்களுக்கு அந்த பிஏவால் பிரச்சனை இல்லை, என்னால்தான் என்று சிட்டி சொன்னதும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
அதற்கு அந்த பிஏ ஏதாவது பிரச்சனை செய்தால் அவனை அடக்கி வைப்பது நான் தானே என்று சமாளிக்கிறார். பிறகு ரோகிணி போனதும் அதில் ஒரு லட்சம் ரூபாயை பிஏ விடம் கொடுத்து நான் சொல்லும்போது இனி வந்தா போதும் ரோகிணி தங்க முட்டை இடுற வாத்து அதை கொஞ்சம் கொஞ்சம் அறுக்கணும் என்று சொல்கிறார்.

மறுபக்கத்தில் மனோஜும், ரோகிணியும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது சந்தோஷ் போன் செய்கிறார். அவர் கடையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று பேசுகிறார். அதற்கு மனோஜ் நானும் அது பற்றி தான் பிளான் பண்ணிட்டு இருக்கிறேன். விளம்பர சூட் எடுக்க வேண்டும் என்றால் அந்த நடிகையை வைத்து எடுக்கலாமா? இந்த நடிகையை வைத்து எடுக்கலாமா என்று பல நடிகைகள் பெயரை சொல்ல அதற்கு சந்தோஷம் நாங்க ஸ்கிரிப்ட் எல்லாம் ரெடி பண்ணியாச்சு.
உன் குடும்பத்தினர் தான் நடிக்கணும் என்று சொன்னதும் ஸ்ருதியும் ரவியும் வேணும்னா நடிப்பாங்க. முத்து மீனாவுக்கு நடிக்க வராது என்று சொன்னதும் அவங்க தான் இயல்பாக இருக்காங்க அவங்க கண்டிப்பா வேணும் என்று சந்தோஷ் சொல்லி விடுகிறார். அதோடு அவங்களுக்கு பேமென்ட் கொடுப்பதற்காக உனக்கு இரண்டு லட்சம் ரூபாய் அனுப்பி இருக்கிறேன் என்று சொன்னதும் மனோஜ் சந்தோஷப்படுகிறார்.

பிறகு போனை கட் பண்ணினதும் ரோகிணியிடம் விஷயத்தை சொல்லிவிட்டு இந்த பணத்தை வீட்டில் கொடுக்க வேண்டாம் என்று மனோஜ் பிளான் போட அதற்கு ரோகிணி இந்த விஷயம் முத்துவுக்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று சொல்கிறார். அது தெரியாமல் சமாளித்து விடலாம் அம்மாவுக்கு மட்டும் வேணும்னா பத்தாயிரம் கொடுக்கலாம் என்று மனோஜ் சொல்கிறார்.
இறுதியாக வீட்டிற்கு வந்த மனோஜ் சந்தோஷ் போன் பண்ணி பேசிய விஷயத்தை சொல்கிறார். அப்போது அண்ணாமலை அது எப்படி நம்மால் நடிக்க முடியும் என்று முதலில் சொல்கிறார். அந்த நேரத்தில் நாங்க வேலையை விட்டுட்டு வரணும் என்றால் நீ எவ்வளவு பணம் தருவ? என்று முத்து கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications