சிறகடிக்க ஆசை: விஜயாவால் சிக்கிய ரோகிணி.. சந்தோஷத்தை கொண்டாடிய முத்து- மீனா! பாவம் பார்வதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 23ஆம் தேதிக்கான எபிசோடில் விஜயா மலேசியாவிற்கு போக வேண்டும் என்று சொன்னதால் ரோகிணி புது பிரச்சனையில் சிக்குகிறார்.

இன்றைய எபிசோடில் அண்ணாமலை விஜயாவிடம் உன்னால தான் முத்துவுக்கும் மீனாவுக்கும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதனால நீ அவங்களுக்கு அஞ்சு லட்ச ரூபா கொடுக்கணும் என்று சொல்ல, அதற்கு விஜயா நான் எப்படி கொடுக்க முடியும்? என்று கொடுக்க மறுக்கிறார்.

siragadikka aasai serial vijay tv

அதற்கு அண்ணாமலை, அப்படி என்றால் நான் வேலைக்கு போய் அந்த பணத்தை கொடுக்கிறேன் என்று சொல்கிறார். இதனால் விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். ஆனால் முத்துவும் மீனாவும் எங்களுக்கு பணம் வேண்டாம் என்று சொல்கின்றனர். ஆனாலும் இல்லை பணத்தை கொடுத்து தான் ஆக வேண்டும் என்று அண்ணாமலை ஸ்ட்ரிக்ட்டாக சொல்கிறார்.

அடுத்ததாக மனோஜிடம் சென்ற விஜயா எனக்கு அஞ்சு லட்சம் கொடு அந்த பூக்காரி கிட்ட நான் கடன்காரியா இருக்க விரும்பல என்று சொல்ல, அதற்கு மனோஜ் தன்னிடம் இப்போது காசு இல்லை என்று சொல்லிவிடுகிறார். உடனே விஜயா ரோகினி இடம் மலேசியா மாமாவுக்கு போன் பண்ணி காசு கேளு என்று சொல்ல, அவர் போனை எடுக்கவில்லை என்று ரோகினி சமாளிக்கிறார்.

உடனே மனோஜிடம் நீ மலேசியாவுக்கு டிக்கெட் போடு அங்க போய் சம்பந்தியை பார்த்துவிட்டு காசை வாங்கிட்டு வருவோம் என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். அப்பா ஜெயிலில் இருப்பதால் அவரை இப்போது பார்க்க முடியாது அதற்கு அப்ளை பண்ணுனா மூணு மாசம் ஆகும் என்று சொல்ல, எப்படி என்றாலும் பரவாயில்லை சம்மந்தியை இருந்து பாத்துட்டு வரலாம் என்று விஜயா சொல்கிறார்.

அதற்கு ரோகிணி இப்ப நாம போனா நம்மையும் ஜெயிலில் பிடித்து போட்டுருவாங்க என்று பயம் காட்டி நான் உங்களுக்கு மூன்று லட்சம் ரெடி பண்ணி தரேன் என்று விஜயாவுக்கு வாக்கு கொடுக்கிறார். பிறகு விஜயா போனதும் மனோஜிடம் ஜீவா தந்த பணத்தில் 3 லட்சம் எடுத்து தருமாறு கேட்க, அந்த பணம் ஒன்னும் இல்ல எல்லாம் பிசினஸில் போட்டாச்சு என்று மனோஜ் சொல்கிறார்.

இதனால் தன்னுடைய தாலி செயினை விற்று பணத்தை கொடுக்கிறேன் நீ பிசினஸில் உனக்கு பணம் வந்த பிறகு எடுத்து தா என்று சொல்கிறார். மறுபக்கத்தில் மீனாவும் முத்துவும் செருப்பு தைக்கும் பெரியவர்களுக்கு திருமண நாளை கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு மாலை வாங்கி கொடுத்து பக்கத்தில் போகிறவர்களுக்கு எல்லாம் ஸ்வீட் கொடுத்து கொண்டாடுகிறார்கள்.

அதை பார்த்து அந்த பெரியவர்கள் கண் கலங்குகிறார்கள். கடைசியாக வீட்டில் நடந்த பிரச்சனையை வித்யாவிடம் ரோகிணி சொல்ல, அதற்கு வித்யா கர்மா ஒரு பூமர் உனக்கு திருப்பி அடிச்சுடுச்சு. நீ சத்யா வீடியோவை லீக் பண்ணாமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. நீ பண்ணுனதால தான உங்க மாமியார் கேஸ் கொடுத்தாங்க. அதற்காக இப்போ நீதான் மூன்று லட்சம் கொடுக்க வேண்டியது இருக்கு.

அப்புறம் அந்த ரெண்டு லட்சத்தையும் நீ யாருக்கும் தெரியாமல் எடுத்த ,அதுவும் இப்போ நீ கொடுத்தாக வேண்டிய நிலைமை இருக்கு என்ன செய்யப் போற என்று கேட்க, நான் ஒரு கணக்கு போட்டா நடந்தது ஒன்றாக இருக்கிறது. என்னை விட எங்க மாமியார் ரொம்ப கெட்டிக்காரங்களா இருக்காங்க என்று சொன்னதும் வித்யா இப்போ உங்க மாமியார் பார்வதி ஆன்ட்டி வீட்டில் காணாமல் போன பணத்துக்கு கேஸ் கொடுத்தால் என்ன பண்ணுவ என்று கேட்கிறார்.

அதற்கு இன்னொரு வழி பண்ண போறேன் என்று சொல்லிவிட்டு பார்வதி வீட்டிற்கு ரோகிணி வருகிறார். அங்கு பார்வதி தனக்கு மசாஜ் பண்ண வந்தியா என்று கேட்டதும் இல்ல இங்க இருந்த பணம் காணாமல் போனதும் முத்து மீனா மீது அத்தை கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன் என்று சொல்றாங்க.

இது குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனையை உண்டு பண்ணும். அதற்காக நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன் என்று பார்வதியிடம் இரண்டு லட்சம் பணத்தை கொடுத்து இந்த பணம் வீட்டில் தான் இருந்தது என்று அத்தையிடம் சொல்லுங்க என்று சொல்கிறார். ரோகிணி சொல்வதை உண்மை என்று பார்வதியும் நம்பி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+