சிறகடிக்க ஆசை: ரோகினியிடம் மாட்டிய மனோஜ்.. கடும் கோபத்தில் முத்து.. மீனாவால் விஜயாவுக்கு அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 24ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் வசீகரனை பார்ப்பதற்காக போயிருந்த ரோகினி இடம் மனோஜ் பார்க்கில் மாட்டிக் கொள்கிறார்.

அதே நேரத்தில் ரவி மற்றும் ஸ்ருதியை மீண்டும் வீட்டிற்கு கூட்டிட்டு வரவேண்டும் என்று மீனா எடுக்கும் முயற்சியால் விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் மீனா, ரவி மற்றும் ஸ்ருதியை மீண்டும் வீட்டுக்கு கூட்டிட்டு வரவேண்டும் என்பதற்காக பேசி கொண்டு இருக்க அதற்கு விஜயாவும் மீனா சொல்றது சரிதான் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அண்ணாமலை என் மனசு அதை ஏற்கல. அவங்க வாழ்க்கையே அவங்க பார்க்கட்டும் என்று சொல்ல, விஜயா இதைக் கேட்டு ஷாக் ஆகிறார்.

மறுபக்கத்தில் ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டு பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது ரவி குடும்பத்தோடு சேர்ந்து இருக்கணும் என்று தன்னுடைய ஆசை சொல்ல அதற்கு ஸ்ருதி முத்து இருக்கும் வீட்டில் என்னால் இருக்க முடியாது என்று அதிர்ச்சி கொடுக்கிறார். கூடவே உனக்கு வேண்டுமென்றால் நீ தனியாக போய் பார்த்துவிட்டு வா. நான் தடுக்க மாட்டேன் என்று சொல்கிறார்.
அடுத்ததாக ரோகிணியும் வித்தியாவும், பார்க்கிற்க்கு வசீகரனை பார்ப்பதற்காக வருகின்றனர். அங்கு ரோகிணி புலம்பிக்கொண்டே வந்து அவரை பார்த்து காசை கொடுக்க அதற்கு வசீகரன் ரோகிணியை போகவிடாமல் நிற்க சொல்லி பணத்தை எண்ணி பார்த்து விட்டு சரியாக இருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு ரோகிணி நானே ரொம்ப கஷ்டப்படுறேன். நீ இப்படி என்னை அடிக்கடி தொந்தரவு பண்ணாத என்று சொல்ல, அதற்கு வசீகரன் அது எப்படி சொல்ல முடியும்

நான் பணம் தேவைப்படும்போது கால் பண்ணுவேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார் ஆனாலும் அங்கிருந்து ரோகிணியும் அவருடைய தோழி வித்தியாவும் கிளம்பும்போது அங்கு மனோஜ் ஒரு இடத்தில் அவருடைய பார்க் நண்பரோடு சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து ரோகினி அதிர்ச்சி ஆகிறார். ரோகிணி மனோஜ் பக்கத்தில் போக அவரோடு இருந்த நபர் நம்மள ரெண்டு பொண்ணுங்க பாத்துட்டு வருது என்று சொல்ல...
அதை பார்த்து மனோஜ் அதிர்ச்சியாகி ரோகிணியிடம் பக்கத்தில் இருப்பவரை கைகாட்டி இவரு என்னுடைய க்ளைன்ட் அவர் காரை பத்தி பேசணும்னு சொன்னாரு. அதனால தான் இங்க வந்தேன். அவருக்கு கார்ட் ப்ராப்ளம், சுகர் எல்லாமே இருக்கு. அதனால டைமுக்கு சாப்பிடணும்னு சொன்னாரு. அதனால அவர் சாப்பிடுவதற்கு நானும் கம்பெனி கொடுத்துட்டு இருக்கிறேன் என்று சொல்லி சமாளிக்கிறார்.

அதை ரோகிணி நம்ப கூடவே நீ எதற்கு இங்கே வந்தா? என்று மனோஜ் கேள்வி கேட்க அதனால் ரோகிணி அதிர்ச்சியாகிறார். அதற்கு வித்யாவிற்கு ஒரு அலைன்ஸ் இங்கே வருகிறேன் என்று சொன்னார். அவரை பாக்குறதுக்காக தான் வித்யா கூட நான் வந்தேன் என்று சமாளித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக கிளம்பி விடுகிறார்.

அதை பார்த்ததும் மனோஜின் நண்பர் உங்க பொண்டாட்டி நீங்க என்ன சொன்னாலும் நம்புறாங்களே என்று கேட்கிறார். மறுபக்கத்தில் விஜயா ரூமில் கோபமாக அமர்ந்திருக்க அவரை சாப்பிடுவதற்காக மீனா போய் கூப்பிட அப்போது அவர் மீனாவை திட்டி அனுப்பி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications