சிறகடிக்க ஆசை: ரவி-ஸ்ருதி விஷயத்தில் அண்ணாமலை எடுத்த முடிவு.. பழியை தீர்த்த மீனா.. கதறிய முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 25ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஸ்ருதி மற்றும் ரவியை வீட்டிற்கு கூட்டிட்டு வருவது குறித்து சம்மதம் தெரிவித்த அண்ணாமலை அதற்கு ஒரு கண்டிஷன் சொல்கிறார்.
அதற்க்கு சம்மதித்த விஜயாவிற்கு முத்து மற்றும் மீனாவின் நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சி கிடைக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா எல்லாரையும் சாப்பிட கூப்பிடுகிறார். அப்போது விஜயா நான் ரவி இந்த வீட்டிற்கு வராமல் சாப்பிட மாட்டேன் என்று உண்ணாவிரதம் இருக்க, அதற்கு ரோகிணி, ஆன்ட்டி ரொம்ப பாவம். ஒரு பையனை பிரிஞ்சு அம்மா கஷ்டப்படுவதை என்னால் புரிஞ்சுக்க முடியுது. அவங்களுக்காக ரவியை வீட்டுக்கு கூப்பிடலாமே என்று அண்ணாமலை இடம் பேசுகின்றார்.
அப்போது அண்ணாமலை யோசித்துப் பார்த்துவிட்டு முத்து மனோஜ் நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவு எடுக்கலாம்னு சொல்லுங்க என்று கேட்க, அதற்கு மனோஜ் நீங்களும் அம்மாவும் சேர்ந்து முடிவெடுத்துக்கோங்க அப்பா என்று நழுவுகிறார். அதற்கு முத்து அவன் வீட்டுக்கு வரக்கூடாது உங்களை ஸ்டேஷனில் உட்கார வைத்தான். உங்கள் அவமானப்படுத்திய யாருமே இந்த வீட்ல இருக்க கூடாது. அதுவும் அந்த பொண்ணு ரொம்ப திமிரு புடிச்சதாக இருக்கு .
அதெல்லாம் நம்ம வீட்டுக்கு செட்டாகாது என்று பேசிக்கொண்டு இருக்க, அதற்கு அண்ணாமலை இனிமேல் கோபப்பட்டு என்ன ஆகப்போகுது.. ரவி இந்த வீட்டுக்கு வரட்டும் ஆனா வாசுதேவன் என்னை சொத்துக்காக தானே உன் பையனை என் பொண்ணு கூட பேச விட்டானு கேட்டான். அதை என்னால மறக்க முடியாது. அதனால அவங்களே அவங்க பொண்ண அழிச்சிட்டு வந்து உங்க மருமகளை பார்த்துக்கோங்கன்னு சொன்னா மட்டும் ரவியையும் அந்த பெண்ணையும் நான் வீட்டுக்கு வர வைக்கிறேன் என்று சொல்கிறார்.
இதை கேட்டு மீனாவும் விஜயாவும் அதிர்ச்சியாகின்றனர். பிறகு விஜயா எனக்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்தீங்களே அதுவரைக்கும் சந்தோஷம் என்று சொல்கிறார். அடுத்த கட்டத்தில் முத்து மீனாவிடம் எனக்கு ரொம்ப உடம்பு வலியா இருக்கு. உன்னை கோவிலில் தூக்கிக்கொண்டு நடந்ததால் கை எல்லாம் வலிக்கிறது என்று சொல்ல அதற்கு மீனா முத்துவை கீழே படுக்க வைத்து முதுகில் ஏறி மிதித்து கொண்டிருக்கிறார்.
அப்போது முத்து கத்தி கதறுகிறார். அதனால் விஜயா கதவை திறந்து உள்ளே வந்து பார்க்க அங்கு மீனா முத்துவைப் போட்டு மிதித்துக் கொண்டிருப்பது பார்த்து என்ன இப்படி பண்ணிட்டு இருக்க, உடம்பு வலி என்றால் ஹாஸ்பிடலுக்கு போக வேண்டியது தானே இப்படி மிதிச்சா சரியாயிடுமா என்று திட்டி அண்ணாமலை இடம் இது பற்றி சொல்ல அண்ணாமலை உடம்பு வலி என்றால் மிதிச்சா சரியாகிவிடும். கரெக்ட்டா தான் மீனா பன்னுறா. இதுல என்ன தப்பு?
எனக்கும்தான் நிறைய தடவை முதுகு வலி வந்து இருக்கு. நீ இந்த மாதிரி ஒன்னும் பண்ணல என்று சொல்ல அதற்கு விஜயா இப்ப நான் ஏரி மிதிக்கட்டுமா? என்று கேட்கிறார். அதற்கு பதறி போன அண்ணாமலை வேணாம் இப்பதான் ஆபரேஷன் பண்ணிட்டு வந்தேன். திரும்ப என்னால ஹாஸ்பிடல் போக முடியாது என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications