சிறகடிக்க ஆசை: முத்துவுக்கு வந்த சந்தேகம்.. அண்ணாமலையிடமே சிக்க போகும் ரோகிணியின் குடும்பம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் அண்ணாமலை வேலை பார்க்க போகும் ஸ்கூலில் தான் ரோகிணி தன்னுடைய மகனை சேர்த்து விடுகிறார். அதே நேரத்தில் ரோகிணியின் குடும்பத்தின் மீது முத்துவிற்கு சந்தேகம் வருகிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி கிருஷ் மற்றும் அம்மாவை புது வீட்டிற்கு கூட்டிட்டு வந்து பால் காய்ச்சுகிறார். பால் காய்ச்சி முடித்த பிறகு அம்மாவிடம் பல ரூல்ஸ் போடுகிறார். அதாவது எங்கேயும் வெளியே போகக்கூடாது, கிரிஷ் வெளியே போய் விளையாடவே கூடாது, 8 மணிக்கு மேல ரூம் லைட் எரியக் கூடாது என்றெல்லாம் சொல்ல கோபமான அம்மா இதுக்குமே எங்களை ஜெயிலில் போட்டு விடலாம். காய்கறி வாங்க கூட போக கூடாதா? என்று கேட்க, அதற்கு ரோகிணி நீ எங்கேயும் போக வேண்டாம் நானே வாரத்துக்கு ரெண்டு முறை வாங்கி கொடுத்து விடுவேன்.

பாலுக்கும் டெய்லி சொல்லி இருக்கிறேன். டெய்லி வீட்ல கொடுத்துடுவாங்க என்று சொல்லிவிட்டு க்ரிஷை கூப்பிட்டு வெளியே சென்று விடுகிறார். ரோகிணி போனதும் வித்யா ரோகிணியின் அம்மாவிடம் ரூல்ஸ் போடறது உங்களுக்கு கஷ்டமா இருக்கா அம்மா? என்று கேட்க, கஷ்டமா இல்லமா அவா அவ்வளவு பயத்துல இருக்கான்னு எனக்கு தெரியுது.
நான் முதல்ல அவளுக்கு தேடி வைத்த வாழ்க்கை தான் சரியில்ல, ஆனால் இப்போ அவளா தேடிகிட்ட வாழ்க்கை... உண்மை தெரிஞ்சா அவளை அந்த வீட்டில் சேர்ந்து இருப்பாங்களான்னு தெரியல. அது எனக்கு பயமாயிருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து ரோகிணியின் அம்மா முதலில் இருந்த ஊருக்கு சவாரிக்கு போயிருக்கிறார். இவ்வளவு தூரம் வந்துட்டோம் கிரஷ் வீட்டிற்கு போயிட்டு வரலாம் என்று அங்கு போக, அங்கு வீடு பூட்டி இருப்பதை பார்த்துவிட்டு பக்கத்தில் இருப்பவர்களிடம் விசாரிக்கிறார்.

அவர்கள் ரெண்டு நாளா அவங்க ஆள் இல்லை என்று சொன்னதும், முத்து ரோகிணி அம்மாவுக்கு போன் போடுகிறார். அந்த நேரத்தில் காய்கறி வாங்க போயிருந்த ரோகிணி வீட்டிற்கு வந்து விடுகிறார். யார் போன் பண்ணுவது என்று கேட்க முத்து என்று சொன்னதும் அவன் எதுக்காக உனக்கு போன் பண்ணுதான் என்று கோபப்படுகிறார்.
பிறகு நான் சொல்றதை மட்டும் சொல்லு என்று சொல்லிக் கொடுக்கிறார். அதன்படியே நாங்க வேற ஊருக்கு வந்துட்டோம் இனிமேல் கால் பண்ண வேண்டாம் என்று முத்துவிடம் கோபமாக ரோகிணியின் அம்மா பேசி விடுகிறார். பிறகு முத்து ஃபோனை வைத்ததும் அதற்காக பீல் பண்ணுகிறார். அடுத்ததாக ரோகிணி கிரிஷ் ஸ்கூலுக்கு போக வேண்டியது இருக்கு ரெடி ஆகுமா என்று சொல்கிறார்.

ரோகிணியின் மகன் படிக்கும் ஸ்கூலுக்கு தான் அண்ணாமலை பரசு வேலை சொல்லி இருந்த காரணத்தினால் அங்கு வந்து பேசுகிறார். அவர்கள் அண்ணாமலையை வாரத்தில் 2 நாள் மட்டும் வந்து வேலை பார்த்தால் போதும் என்று சொல்லுகிறார்கள். அதனால் ஆபீஸ் வாசலில் நின்று அண்ணாமலை பரசுவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் ரோகிணியின் அம்மா மற்றும் க்ருஷோடு வருகிறார். ஆனால் அண்ணாமலை கவனிக்காமல் சென்று விடுகிறார். அப்போது கிரிஷ் ரோகிணியிடம் நானும் நீ இருக்கிற வீட்டுக்கே வந்துடவா அம்மா என்று கேட்க அதற்கு ரோகிணி இப்போதைக்கு வேண்டாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு உன்னை கூட்டிட்டு போறேன் என்று சொல்கிறார்.

மறுபக்கத்தில் வீட்டிற்கு போன முத்து மீனாவிடம் நடந்ததை சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த ரோகிணி முத்துவும், மீனாவும் பேசுவதை ஒளிந்து நின்று கேட்கிறார். அப்போது க்ரிஷ் ஊருக்கு போனேன் ஆனா அங்க வீடு பூட்டி இருக்கு, அதை பற்றி கேட்பதற்காக அவங்க பாட்டிக்கு போன் செஞ்சேன்.
ஆனா அவங்க இனிமே போன் பண்ணாதன்னு சொல்லிட்டாங்க, ஆனா அந்த அம்மா அப்படி பேசுற ஆளே கிடையாது. நம்ம கிருஷிடம் பேசுறது வேற யாருக்கோ பிடிக்காம இருக்குது போல.. என்று சந்தேகப்படுகிறார். இதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications