சிறகடிக்க ஆசையில் திடீர் திருப்பம்.. முத்துவால் வில்லியாக மாறும் ஸ்ருதி.. குடும்பத்தை ஏமாற்றும் மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் இரண்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் அண்ணாமலையை பார்க்க வேண்டும் என்று ரவி வந்திருந்த நிலையில் அவரை பார்க்க விடாமல் எல்லோரும் திட்டி அவமானப்படுத்தி வெளியே அனுப்புகின்றனர்.

மீனா யாருக்கும் தெரியாமல் அண்ணாமலை கையில் கயிறு கட்டி விடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரவி அப்பாவை பார்ப்பதற்காக ஹாஸ்பிடலுக்கு வருகிறார். அப்போது உன்னால தான் இவ்வளவு ஆச்சு என்று விஜயா ரவியை திட்டுகிறார். நீ என்கிட்ட சொல்லி இருந்தா நான் எப்படியாவது அவரிடம் கெஞ்சி உனக்கு கல்யாணத்தை முடித்து வைத்திருப்பேன். ஆனா அந்த மீனாவால் இவ்வளவு பிரச்சனை வந்திருச்சு என்று சொல்லித் திட்டிக் கொண்டிருக்க அதையெல்லாம் மீனா மறைந்து இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது ரவி நான் அப்பாவை பார்க்காமல் போகமாட்டேன் என்று சொல்லி உள்ளே போக முயற்சி செய்கிறார். மனோஜும் அதை தடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் முத்து அங்கு வந்த உன்னால தான் அப்பாவுக்கு இந்த நிலைமை நீ அவரை பார்க்க கூடாது என்று அடிக்க அப்போது விஜயா ரவியிடம் உன்னை அவர் பார்த்தால் இன்னும் கோபப்படுவார்.

அவருக்கு தான் கஷ்டம். நீ போயிரு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். அதை தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆபரேஷன் வார்ட்டிற்கு கொண்டு செல்ல முத்து பணத்திற்காக வெளியே போகிறார். விஜயா மற்றும் ரோகிணி இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர். அண்ணாமலைக்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிகிறது. மனோஜ் மருந்து மாத்திரை வாங்க வெளியே செல்கிறார்.
அப்போது அண்ணாமலை நண்பர் மட்டும் அண்ணாமலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் மறைந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்த மீனா அண்ணாமலை ரூமுக்குள் போகிறார். அப்போது அண்ணாமலை நண்பன் மீனாவுக்கு ஆறுதல் கூறுகிறார். அதைத் தொடர்ந்து உள்ளே போய் மாமாவிற்கு இந்த கயிறை கட்டணும் என்று சொல்ல, அதற்கு அவர் நீ போய் பாரு நான் வெளியே யாராவது வர்றாங்கலானு பார்க்கிறேன் என்று அவர் வெளியே நின்று கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் வெளியே விஜயாவும் ரோகிணியும் வந்துவிட அண்ணாமலையும் நண்பர் மீனாவுக்கு போன் செய்து நீ அந்த வழியாக போயிடு என்று கூறுகிறார். அதை தொடர்ந்து மீனா வேறு வழியாக வெளியே வர ரோகிணி மற்றும் விஜயா இருவரும் இன்னொரு வழியாக உள்ளே சென்று அண்ணாமலையை பார்க்கின்றனர். மறுபக்கத்தில் வீட்டிற்கு வந்த ரவி அழுது கொண்டிருக்கிறார்.
அப்போது ஸ்ருதி ரவிக்கு ஆறுதல் கூறுகிறார். என்னை அப்பாவை பார்க்க விடல என்று ரவி சொல்ல, அதற்கு ஸ்ருதி கோபப்படுகிறார். நான் ஏற்கனவே நினைத்தேன் இதுதான் நடக்கும் என்று ஆனால் அவர்கள் இப்படி பண்ணி இருக்க கூடாது. உனக்கு அப்பாவ பார்க்கிற முழு உரிமை இருக்கு. அவங்க யாரு அதை தடுப்பதற்கு என்று கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications