சிறகடிக்க ஆசை: மீனாவால் ரோகிணிக்கு வர போகும் பிரச்சனை! முத்துவிடம் சொன்ன நல்ல செய்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 30ம் தேதிக்கான எபிசோடில் மீனாவிற்கு பெரிய ஆர்டர் ஒன்று கிடைக்கிறது. அதே நேரத்தில் ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்தவரின் கடைக்கு மீனா போயிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா ஸ்விட்ச் போர்டில் கை வைக்க, அவருக்கு ஷாக் அடித்ததை தொடர்ந்து பார்வதி, மனோஜ், ரோகிணி, ஸ்ருதி, ரவி என எல்லோரும் காப்பாற்ற போய் அவர்களுக்கும் ஷாக் அடிக்கிறது. அதை பார்த்து மீனா பூரிக்கட்டையால் விஜயாவை அடித்து கீழே விழ வைக்கிறார்.

அந்த நேரத்தில் முத்து வந்து என்ன ஆச்சு என்று கேட்க, விஜய்யா ஷாக் அடித்துவிட்டது என்று சொன்னதும், மெயின் ஆஃப் பண்ணி தானே வச்சிருந்தது. யார் ஆன் பண்ணது என்று கேட்க மனோஜ் நான் தான் பண்ணுனேன் என்று சொல்கிறார். பிறகு எல்லோரும் மனோஜை திட்டுகின்றனர். அதற்குப் பிறகு பார்வதி விஜயாவிடம் பேச விஜயா கோபமாக இருக்கிறார்.
அப்போது உனக்கு செய்வினை வச்சா கூட இப்படித்தான் நடக்கும் அவளுக்கு பரிகாரம் பண்ண சொல்லு என்று பார்வதி சொல்கிறார். அப்போது நடந்த விஷயங்களை வைத்து மனோஜ் மீண்டும் விஜயாவிடம் பரிகாரம் செய்ய சொல்ல, அவர் சரி என்று ஒத்துக் கொள்கிறார். அடுத்ததாக மீனா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் மீனாவிற்கு ஒரு போன் வருகிறது. அவர் மண்டபத்திலிருந்து பேசுவதாகவும் நீங்க கேட்ட மாதிரி ஒரு சின்ன ஆர்டர் வந்திருக்கு என்று சொல்கின்றனர். மீனா அவர்களிடம் சென்று பேச, அவர்கள் பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுத்து இந்த ஆர்டரை நீங்க நல்லா பண்ணுனா அடுத்ததாக உங்களுக்கு ஆர்டர் கிடைக்கும் என்று சொல்கின்றனர்.
இதனால் சந்தோஷமாக மீனா வீட்டிற்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்து எல்லாரிடமும் கொடுக்கிறார். ஆனாலும் விஜயா இது என்ன பெரிய விஷயமா என்று வழக்கம் பல மீனாவை திட்டுகிறார். எல்லோரும் மீனாவிற்கு வாழ்த்துக்கள் சொல்லி ஸ்வீட் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் மனோஜ் மீனாவை மட்டம் தட்டி பேசுகிறார்.
ஆனால் முத்து, மீனாவும் ஒரு நாள் தொழிலதிபர் ஆவா என்று நம்பிக்கை கொடுக்கிறார். அதோடு இந்த சந்தோஷத்தை கொண்டாட இன்னிக்கு எல்லாருக்கும் பிரியாணி சமைத்துக் கொடுக்குமாறு முத்து சொல்ல, அப்போது மீனா தனக்கு கிடைத்த அட்வான்ஸ் பணத்தை முத்துவிடம் கொடுக்கிறார்.
இதை பார்த்து விஜயாவும் ரோகிணியும் அதிர்ச்சியடைகின்றனர். அப்போது விஜயா நான் இன்னைக்கு கறி சாப்பிட மாட்டேன் விரதம் இருக்கிறேன் என்று சொல்ல, அவங்க சாப்பிடலைன்ன பரவாயில்லை. வீட்டில் இருக்கிறவங்க எல்லாத்துக்கும் இன்னைக்கு பிரியாணி சமைச்சிடு என்று முத்து சொல்கிறார்.
பிறகு மீனா சிக்கன் வாங்குவதற்காக ஒரு கடைக்கு போய் இருக்கிறார். அது ரோகிணி மலேசியா மாமாவாக நடிக்க கூட்டிட்டு வந்தவரின் கறிக்கடை தான். அங்கு மீனாவை பார்த்ததும் அவர் தலையில் துண்டை போட்டு மறைத்து விடுகிறார். யார் என்று தெரியாமல் மீனா சிக்கன் வாங்குகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications