சிறகடிக்க ஆசை: மீனா பற்றி தெரிய வந்த உண்மை.. விஜயா கொடுத்த அதிர்ச்சி..அண்ணாமலை எடுத்த முக்கிய முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் நவம்பர் மூன்றாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் கண் முழித்த அண்ணாமலைக்கு விஜயா தன்னுடைய நகைகளை அடகு வைத்தும் முத்துவின் காரை விற்றுதான் மருத்துவ செலவு பார்த்தது என்று கூறுகிறார்.

அதே நேரத்தில் மீனா மீண்டும் வீட்டிற்கு வர வேண்டும் என்று அண்ணாமலை அடம்பிடிக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் அண்ணாமலை கண்விழிக்க, விஜயா கண் கலங்கி அழுது கொண்டிருக்கிறார். அதற்கு அண்ணாமலை எனக்கு ஏதாவது ஆயிட்டா நீங்க என்ன பண்ணுவீங்கன்னு நினைச்சு தான் நான் பயந்தேன் என்று அண்ணாமலை சொல்கிறார். அதைத் தொடர்ந்து முத்து ஓடி வந்து அப்பா எப்படி இருக்க என்று நலம் விசாரிக்கிறார்.
அதற்கு அண்ணாமலை நான் இப்போ நல்லா இருக்கேன் என்று சொல்லி மீனா குறித்து விசாரிக்க அதற்க்கு முத்து சமாளித்து பேச்சை மாற்றி வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். வீட்டுக்கு வந்ததும் பணத்துக்கு என்ன பண்ணுனீங்க என்று அண்ணாமலை விசாரிக்க, அதற்கு முத்து அதெல்லாம் விடுங்கப்பா என்று சமாளிக்கிறார். அப்போது விஜயா, முத்து அவனோட காரை வித்துட்டான்.

என்னுடைய நகைகளையும் அடமானம் வைத்து தான் மருத்துவ செலவு பார்த்தோம் என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை வீட்டு பத்திரத்தை வைக்க வேண்டியதுதானே என்று கேட்க அதற்கு விஜயா அதைதான் அந்த மீனா தூக்கிக்கிட்டு ஓடிட்டாலே. நீங்க அவகிட்ட கொடுத்தீங்க அவ எங்க கொண்டு அடகு வச்சு எந்த தேசத்துக்கு போனான்னு தெரியல. வீட்ல பத்திரம் இல்லை என்று திட்டுகிறார்.
அதற்கு அண்ணாமலை நீங்க மீனாவ தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க. நான் பத்திரத்தை கொடுத்து அன்னைக்கே தனியா பேசினாள். அப்போ இது உங்ககிட்ட இல்லனா அத்தை கிட்ட தான் இருக்கணும். அதுதான் நியாயம், என்று சொல்லி என்கிட்ட திருப்பி கொடுத்துட்டா. நம்ம பீரோல தான் இருக்கு என்று அண்ணாமலை சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து முத்துவிடம் நீ ரோகிணியிடம் மன்னிப்பு கேளு என்று சொல்ல முத்துவும் அப்பாவிற்காக ரோகிணியிடம் அன்னைக்கு தெரியாம கை பட்டுடிச்சி மன்னிச்சிடுங்க என்று மன்னிப்பு கேட்கிறார். அடுத்ததாக நீ மீனா வீட்டுக்கு போய் மீனாவ கூட்டிட்டு வா என்று சொல்ல, அதற்கு விஜயா அவா இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து தான் பிரச்சனை ஆரம்பிச்சது.
தரித்திரம் போய் தொலையட்டும் என்று திட்ட அதற்கு அண்ணாமலை மீனா இந்த வீட்டை விட்டு போனதுக்கு பிறகு தான் நமக்கு பெரிய பிரச்சினையே வந்தது என்று கூறுகிறார். அதோடு மீனா வராமல் நான் மாத்திரை போட மாட்டேன். சாப்பிட மாட்டேன் என்று ஸ்ட்ரைக் பண்ண, முத்து வேறு வழியில்லாமல் நான் வேகமாக போய் கூட்டிட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்புகிறார்.

மீனா வீட்டில் அருடைய அம்மா நீ உன் வீட்டுக்கு போ இப்படியே இங்க இருந்தா சரிப்பட்டு வராது என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து வேகமாக வந்து கிளம்ப சொல்கிறார். அதற்கு மீனா எங்கே என்று நக்கலாக கேட்க அதற்கு நான் இப்போ ஒன்னும் உன் மேல பாசத்துல உன்னை கூப்பிட்ட வரல. எங்க அப்பா உன்னை கூட்டிட்டு வந்தா தான் மாத்திரை சாப்பிடுவேன்னு அடம் பிடிக்கிறார்.
அதற்காகத்தான் வந்தேன் என்று சொல்ல, அதற்கு மீனாவும் நான் இப்போ ஒன்னும் உங்களுக்காக வரல. மாமாவுக்காக தான் வருகிறேன் என்று சொல்லி வீட்டிற்கு வருகிறார். வீட்டு வாசலில் மீனா நிற்கிறார். அண்ணாமலை வாமா என்று கூப்பிடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications