சிறகடிக்க ஆசை: சத்யாவை அடித்து அவமானப்படுத்திய விஜயா.. மீனா குடும்பத்தை காப்பாற்றிய நபர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 4ஆம் தேதிக்கான எபிசோடில் சத்தியா திருடிய விஷயம் தெரிந்து கம்ப்ளைண்ட் செய்யப் போகிறேன் என்று வீட்டிற்கு வந்து அடித்து அவமானப்படுத்துகிறார் விஜயா. ஆனால் மீனா கதறி அழுது கொண்டிருக்கிறார். அப்போது ஒரு நபர் வந்து சத்யாவை காப்பாற்றுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி விஜயாவிடம் வீடியோவை காட்டியதும் விஜயா கோபத்தில் மீனாவின் வீட்டிற்கு ரோகிணியை கூட்டிக் கொண்டு வருகிறார். அந்த நேரத்தில் சத்யா வண்டியில் இருந்து வரும்போது வழிமறிக்கும் சிட்டி உன்னை பற்றிய வீடியோ வெளிய வந்துட்டு. அதுக்கு காரணம் உங்க மாமா தான் என்று சொல்ல, அதற்கு சத்யா நான் கண்டிப்பா நம்ப மாட்டேன்.

அவர் அப்படி பண்ணி இருக்க மாட்டார். அவருடைய போன் தொலைஞ்சுடுச்சு அதிலிருந்து நீதான் எடுத்து இப்படி வெளியே அனுப்பி இருப்ப என்று சொல்ல, அதற்கு சிட்டி இப்போ கூட பிரச்சனை இல்ல. நீ என்கூட வந்துவிடு என்று சொல்ல, இந்த வீடியோவுக்காக எல்லாம் நான் உன் கூட வருவேன்னு நினைக்காத என்று திட்டிவிட்டு கிளம்புகிறார்.
பிறகு மீனா சீதாவிடம் வந்து முத்துவிற்கு புது போன் வாங்கியதை காட்டி கொண்டிருக்கிறார். அப்போது சத்தியா வீட்டிற்கு வந்து பழைய சிம் பிளாக் பண்ணிட்டு புதுசா வாங்கிட்டு வந்துட்டேன். அதே நம்பர் என்று சொல்ல, மீனாவின் அம்மா என் பிள்ளைக்கு எவ்வளவு அறிவு பாத்தியா என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு சீதா இதெல்லாம் சாதாரண தான் ரொம்ப பெருமையா பேசாதே என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் விஜயா கோபமாக வீட்டிற்கு வந்து சத்யாவை இழுத்து செருப்பால் அடிக்கிறார். இதை பார்த்த மீனா அதிர்ச்சியாக அவரை தடுத்து எதுக்கு அடிக்கிறீங்க என்று கேட்க, ரோகிணி வீடியோவை காட்ட மீனாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். மீனாவின் அம்மா, சீதா அனைவரும் சத்யாவை அடிக்க சத்தியா மீனாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.
என்கிட்ட இருந்து திருடிட்டு அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேக்குறியா? என்று விஜயா மீண்டும் அடிக்கிறார். அதோடு மீனா குடும்பத்தை மீண்டும் அசிங்கப்படுத்தி பேச, மீனா அத்தை என்று கத்தி பேச இனிமே அத்தைனு கூப்பிடாத பல்ல ஒடச்சிடுவேன். இனி நீ அந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்கிறார்.
அதற்கு மீனாவின் அம்மா மன்னிப்பு கேட்கிறார். ஆனாலும் கோபத்தில் விஜயா நான் இவனை போலீஸில் பிடித்துக் கொடுப்பேன் என்று சட்டையை பிடித்துக் கொண்டு இழுத்து வெளியே வருகிறார். மீனாவும் சீதாவும் என் தம்பியை விடுங்க என்று சத்யாவை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வீட்டு ஓனர் வந்து உங்க பிரச்சனை எல்லாம் வெளிய வச்சுக்கோங்க என் வீட்டுல வச்சுக்காதீங்க வெளிய போங்க என்று திட்டுகிறார்.

அதற்கு விஜய்யா இப்பவே நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு போறேன் அவங்க வந்து உன்னை அடித்து இழுத்துட்டு போவாங்க. உன்னை களி திங்க வைக்கப்போறது உறுதி என்று திட்டி விட்டு போகிறார். அப்போது சத்யாவிடம் அவருடைய அம்மா இப்ப உனக்கு போதுமா? எங்களை உயிரோடு இப்படி கொல்லுறியே என்று அழுது கொண்டு உள்ளே செல்கிறார்.
அடுத்ததாக செருப்பு தைக்கும் தாத்தா பாட்டி ரோட்டில் வந்து கொண்டிருக்கும்போது அவர்களிடம் முத்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ரோட்டில் ரெண்டு பேர் சத்யா வீடியோவை பார்த்து சின்ன பையனா இருக்கான் இவன் இப்படி திருடி இருக்கான் பாரு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்ததாக சத்தியாவின் அம்மா அழுது கொண்டிருக்க சீதா போய் அவரை சமாதானப்படுத்துகிறார். அதற்கு இவனால மீனா வாழ்க்கை போயிடுச்சு பாரு என்று சத்யாவை திட்டி அழுது கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications