சிறகடிக்க ஆசை: முத்துவின் கனவு கலைந்தது.. பிஏவால் மீனாவிடம் மாட்டும் ரோகிணி.. விஜயாவின் வில்லத்தனம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலின் நவம்பர் 6ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் முத்து மீனாவை வெறுப்பதை பார்த்து விஜயா சந்தோஷப்பட்டு அவர்களை நிரந்தரமாக பிரிக்க பிளான் போடுகிறார்.

அதே நேரத்தில் மீனாவுக்கு பிரச்சனை கொடுத்துக் கொண்டிருந்த ரோகினிக்கு அவருடைய பழைய பிஏ வீட்டிற்கு வந்து அதிர்ச்சி கொடுக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசொடின் ஆரம்பத்தில் மீனா முத்துவுக்கு பிடிக்கும் என்பதற்காக பூரி மசாலா செய்து வைத்திருக்க அதை பார்த்து ரோகினி காலையிலேயே இதை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் வரும் என்று பிரச்சனை கிளப்ப அதற்கு விஜயா இதை சாப்பிட்டு எங்களுக்கும் கொலஸ்ட்ரால் வந்துரும் நாங்க ஒல்லியா இருக்கிறது இந்த மீனாவுக்கு புடிக்கல என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் முத்து அதை சாப்பிடுவதற்கு தயக்கம் காட்ட அதற்கு அண்ணாமலை உக்கார்ந்து சாப்பிடு என்று சொல்கிறார். அப்போது விஜயா அது எப்படி உட்கார்ந்து சாப்பிடுவான். அவ செஞ்சதெல்லாம் அதுக்குள்ள மறந்துடுவானா? உங்கள கூட்டிட்டு போய் ஜெயில்ல உட்கார வச்சாலே என்று ஏற்றி விட அதைக் கேட்டு கோபமான முத்து ஆமா எனக்கு வேண்டாம் வயிறு சரியில்லை என்று சொல்லி கிளம்பி விடுகிறார்.
இதை மீனா பார்த்து பீல் பண்ணி நின்று கொண்டிருக்க அதை பார்த்து விஜயா நக்கலாக சிரிக்கிறார். அதைத்தொடர்ந்து ஸ்ருதி ஷாப்பிங் போய் ரவிக்கு டிரஸ் மற்றும் மோதிரம் என பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து இப்ப நாமதான் ஃபேமிலி இந்த தீபாவளியை சந்தோஷமா கொண்டாடலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது ரவி வழக்கம் போல் தன்னுடைய குடும்பத்தை நினைத்து கவலைப்படுகிறார். அதற்கு ஸ்ருதி ரவியை சமாதானம் செய்து கடைசியில் எனக்கு பசிக்கிறது என்று சொல்லி சமைக்க வைக்கிறார். மறுபக்கத்தில் முத்து காரை பற்றி நினைத்து செல்வத்திடம் பீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் அந்த காரை வாங்கிய கணபதி அங்கு வந்து முத்துவிடம் டாக்குமெண்டை வாங்கிக்கொண்டு கையெழுத்து கேட்கிறார்.
முத்து கடைசியாக ஒருமுறை என்னுடைய காரை நான் ஓட்டி பார்த்துக்கிறேன் என்று சொல்லி ஆசை ஆசையாக அந்த காரை ஓட்டி பார்த்துவிட்டு பிறகு அதை கணபதியிடம் கொடுத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து இரவு முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வர மீனா என்ன இப்படி குடிச்சிட்டு வந்திருக்கீங்க என்று திட்டுகிறார். அதற்கு உன்னால் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு, அதனால என் காரும் என்னை விட்டுப் போயிடுச்சு என்று திட்ட அதற்கு மீனா வருத்தப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
அதைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோவில் கொரியர் பாய் போன்ற கெட்டப்பில் வீட்டிற்கு வந்த பழைய பிஏ ரோகினியிடம் நாளைக்கு காலையில் 7:00 மணிக்குள்ள ஐம்பதாயிரம் ரூபாய் பணம் வந்தாக வேண்டும். இல்லன்னா அடுத்த நிமிஷம் இங்க வந்து உன்ன பத்தி எல்லாம் உண்மையை சொல்லிடுவேன் என்று மிரட்டுகிறார். மறுபக்கத்தில் மீனா இதை பார்த்து விடுவது போல காட்டப்படுகிறது. இதனால் அடுத்த ரோகினி பிரச்சனை தான் வீட்டில் தெரிய வருமா? என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications