Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: மீனா குடும்பம் மீது கம்ப்ளைன்ட் கொடுத்த விஜயா.. பார்வதி சொன்ன ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா, சத்யா மற்றும் மீனா குடும்பத்தினர் மீது கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். இதனால் மீனா கதறி அழுகிறார். அதோடு மீனா வீட்டை விட்டுப் போக வேண்டும் என்று விஜயா பிரச்சனையை செய்ய அண்ணாமலை அதிர்ச்சி கொடுக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலை கோபமாக இருக்கிறார். அவரிடம் முத்து, சத்யா திருடுவதற்கு முக்கிய காரணமே அம்மா தான். இவங்க அவன் செய்யாத தப்பை சொல்லி அவனை அடிச்சு அவமானப்படுத்தினாங்க. அதனால கோபத்துல அவன் அம்மா பேக்கை திருடிட்டான். ஆனால் பிறகு அந்த பணத்தை அவன் என்னிடம் கொடுத்துட்டான்.

television siragadikka aasai serial vijay tv

நான் கூட போலீஸ் பணம் தந்தாங்க என்று சொன்னேனே அது அவன் கொடுத்தது தான் என்று சொல்கிறார். ஆனாலும் அண்ணாமலை அவன் செஞ்சது தப்புதான் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் திருடும்போது அம்மாவுக்கு ஏதாவது நடந்திருந்தால் என்ன செஞ்சிருப்ப என்று கேட்க, அதற்கு முத்து நீ கல்யாணத்தின்போது பணத்தை திருடினியே அப்போ அதை நினைச்சு அம்மா அப்பாவுக்கு ஏதாவது ஆகிடும்னு நீ நெனச்சியா என்று மனோஜ் வாயை அடைக்கிறார்கள்.

அந்த நேரத்தில் விஜயா வீட்டிற்கு போலீஸ் வருகின்றனர். அப்போது முத்து குடும்ப பிரச்சினை என்று சொன்னாதால் இது குடும்ப பிரச்சனை என்றால் நாங்க கம்ப்ளைன்ட் கொடுக்க விரும்பல என்று எழுதிதாங்க என்று சொல்ல, அதற்கு விஜயா நான் கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க மாட்டேன். நான் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் என்று சொல்ல முத்துவும் மீனாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.

television siragadikka aasai serial vijay tv

அப்பொழுது அண்ணாமலை சத்யா செய்தது தப்புதான். அவங்க அப்பா இறந்து போகும்போது அந்த குடும்பத்தை என்னிடம் ஒப்படைச்சது போல இருந்தது. ஆனால் அந்த பையன் ஒவ்வொரு முறையும் திருந்தாமல் தப்பு செஞ்சிட்டே இருக்கிறார் என்று சொல்லிவடுகிறார். இப்போது மீனா ரோகிணி, ஸ்ருதி, ரவி என ஒவ்வொருவரிடமும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டு கதறுகிறார்.

ஆனாலும் யாரும் மீனாவுக்கு சப்போர்ட் செய்யாமல் இருக்கின்றனர். விஜயா சத்யா மீது கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். அதோடு அவனை பற்றி நான் விசாரிக்க போகும்போது அவருடைய குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து என்னை அடிக்க வந்தாங்க அவங்க மேலயும் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் என்று போலீஸிடம் கையெழுத்து போட்டு கொடுக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

இதனால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் மீனா கதறி அழுது கொண்டிருக்கிறார். ஆனாலும் அவனை எப்படி வெளியே எடுப்பது என்று எனக்கு தெரியும் என்று முத்து நம்பிக்கை கொடுக்குறார். பிறகு மீனாவை உள்ளே போகுமாறு முத்து சொல்ல விஜயா அவளை வீட்டை விட்டு வெளியே போக சொல்லு என்று திட்டுகிறார்.

அதற்கு அண்ணாமலையை தப்பு செஞ்சது சத்யா தானே மீனா என்ன செய்வா என்று கேட்க, எனக்கு தெரியாது இந்த வீட்டில் மீனா இருந்தா நான் இருக்க மாட்டேன் என்று விஜயா சொல்கிறார். இதற்கு அண்ணாமலை மீனா இந்த வீட்டு பொண்ணு அவள் இங்குதான் இருப்பா என்று சொல்ல விஜயா தன்னுடைய டிரஸ் எல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பி போகிறார்.

பிறகு பார்வதி வீட்டிற்கு சென்று நான் இங்கேதான் இருக்கப் போகிறேன் என் புருஷன் மனம் மாறுகிற வரைக்கும் அந்த வீட்டிற்கு நான் போக மாட்டேன். மீனா இருக்கிற வீட்டில் நான் இருக்கவே மாட்டேன் என்று விஜயா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அப்போது பார்வதி, ரோகிணி நான் தேடித்தந்த மருமகள்தான். அதுபோல ஸ்ருதி உன் மகனா தேடிக்கொண்ட மருமகள் அவர்கள் இருவரையும் விடவும் மீனாதான் ரொம்ப நல்ல பொண்ணு. அவள் தான் உன்னை நல்லா பாத்துக்க போற என்று சொல்கிறார்.

அதற்கு விஜயா எதற்காக நீ மீனாவிற்காக இப்போ சப்போர்ட் பண்ற? அவ நீ வீட்டுக்கு வரும்போது நல்ல சமைச்சு போட்டா என்பதற்காகவா? என்று விஜயா பார்வதியை திட்ட, அதற்கு பார்வதி என் மகனை மருமக என்னிடமிருந்து பிரிச்சி தனி குடித்தனம் கூட்டிட்டு போனது போல உன்னுடைய மத்த மருமகள் ரெண்டு பேரும் கூட்டிட்டு போகப் போறாங்க. அப்போதான் உனக்கு மீனாவோட அருமை தெரியும் என்று சொல்ல விஜயா அதிர்ச்சியாகி இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+