சிறகடிக்க ஆசை: அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த அம்மா.. ரோகினியால் புது பிரச்சனையில் மாட்டும் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் எட்டாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் வசீகரனுக்கு கொடுப்பதற்காக ரோகினி பணம் கேட்டிருந்த நிலையில் மனோஜ், விஜயா கடன் வாங்கிய 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து ரவிக்கு கல்யாணம் ஆனது தெரியாத அண்ணாமலையின் அம்மா அண்ணாமலைக்கு போன் போட்டு ரவிக்கு தான் பொண்ணு பார்த்து வைத்திருப்பதாக கூறுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து கார் செட்டில் சவாரிக்காக நண்பர்களோடு வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது பசியில் இருக்கும் முத்து தன்னுடைய நண்பரிடம் சொல்லி அடிக்கடி டீயை மட்டும் வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் முத்துவின் நண்பர்கள் காலையில் வீட்டில் சாப்பிடாமல் ஏன் வந்த, உன் பொண்டாட்டி மேல இருக்குற கோவத்தை சாப்பாட்டில் காமிப்பியா என்று திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது மீனா முத்துவிற்காக மீன் குழம்பு வைத்து சாப்பாடு எடுத்துட்டு வருகிறார். மீனாவை பார்த்ததும் முத்து உன்னை யாரு இங்க சாப்பாடு எடுத்துட்டு வர சொன்னா? நான் உன் சாப்பாடு சாப்பிட மாட்டேன் என்று வீம்பு பிடிக்கிறார். அதற்கு மீனா நேத்து நைட்டு நீங்க குடிச்சிட்டு சாப்பிடாம தூங்கிட்டீங்க. காலையிலேயே சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகிறது.

கோபத்தை எல்லாம் சாப்பாடில் காமிக்காதீங்க. வந்து சாப்பிடுங்க என்று முத்துவின் பதிலுக்கு காத்திருக்காமல் இலையை விரித்து மீன் குழம்பு பரிமாறி வைக்கிறார். ஆனால் அப்போதும் முத்து வீராப்பாக நின்று கொண்டு இருக்க அவருடைய நண்பர்கள் மூன்று பேரும் சாப்பாடு வாசனையில் ஒவ்வொருவராக வந்து சாப்பிடுகின்றனர்.
ஆனால் முத்து மட்டும் நான் சாப்பிட மாட்டேன் என்று வீராப்பாக நின்று கொண்டிருக்கிறார். பிறகு மீனா முத்து முன்னாடியே அவருடைய நண்பர்களிடம் நான் அவருக்கும் சாப்பாடு வச்சிருக்கேன், அப்புறமா சாப்பிட சொல்லுங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி இருக்கிறார். மீனா போனதும் முத்து சாப்பாடு வீணாக கூடாது என்று சாப்பிடிருக்கிறேன் என்று சாப்பிட்டு முடிக்கிறார்.
அடுத்ததாக விஜயா மனோஜ் கையில் பார்வதி கொடுத்த 25 ஆயிரம் பணத்தை கொடுத்து இதை கம்பெனியில் போனஸ் கொடுத்தாங்க என்று ரோகினியிடம் கொடு என்று சொல்கிறார். அப்படியே மனோஜும் ரோகினி இடம் நடிக்க அந்த பணத்தை வாங்கிக் கொண்ட ரோகினி வசீகரனுக்கு போன் பண்ணி என்னால் 25 ஆயிரம் ரூபாய் தான் ரெடி பண்ண முடிந்தது.

அதை உன் அக்கவுண்டுக்கு அனுப்புறேன். இனி என்னை தொல்லை பண்ணாத என்று கேட்க, அதற்கு வசீகரன் இந்த மாதத்திற்கு இனிமே தொல்லை பண்ண மாட்டேன். ஆனால் அடுத்த மாதத்தில் பணத்துக்கு போன் பண்ணுவேன் என்று மிரட்டுகிறார். அடுத்து ஊரில் இருந்து அண்ணாமலை அம்மா முத்துவிற்கு போன் பண்ண பதறிப்போன முத்து போனை அண்ணாமலை இடம் கொடுக்கிறார்.
பிறகு அண்ணாமலை தன்னுடைய அம்மாவிடம் நலம் விசாரிக்கிறார். அப்போது ரவிக்கு நான் ஒரு பொண்ணு பார்த்து வச்சிருக்கேன். நீங்க ஊருக்கு வரும்போது அதை பத்தி பேசலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். கூடவே இந்த தீபாவளி முத்து- மீனா, மனோஜ்-ரோகினி நாலு பேருக்கும் தல தீபாவளி அதனால நான் கொஞ்சம் பணம் அனுப்பி வச்சிருக்கேன்.
அவங்களுக்கு தேவையானதை வாங்கி கொடுங்க என்று சொல்லிவிட்டு பாட்டி போனை வைக்கிறார். அதைத்தொடர்ந்து விஜயா அண்ணாமலை இடம் நீங்க மீனா பண்ண வேலையை உங்க அம்மா கிட்ட சொல்ல வேண்டியது தானே. அவங்களுக்கும் அப்போதானே மீனாவ பத்தி தெரியும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு அண்ணாமலை அம்மாகிட்ட எப்ப சொல்லணும்னு எனக்கு தெரியும். அப்போ சொல்லிக்கலாம். இப்போ அம்மாவும் கொஞ்சம் பணம் அனுப்பி இருக்காங்க. என்கிட்டயும் கொஞ்சம் பணம் இருக்கு. அதனால நீங்க உங்களுக்கு தேவையான துணிகளை எடுத்துக்கோங்க என்று சொல்கிறார்.
அதற்கு ரோகிணி அண்ணாமலையிடம் உங்களுக்கு உடம்பு சரியில்லாத நேரத்துல எங்களுக்கு என்ன தல தீபாவளி என்று கேட்க, அதைக் கேட்ட விஜயா பாத்தீங்களா? நான் கூட்டிட்டு வந்த மருமகள் நம்ம வீட்டு கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு எப்படி பேசுறான்னு. ஆனா மீனாவும் தான் இருக்காளே, நம்மளை வெளியே தல காட்ட முடியாம பண்ணிட்டா என்று வழக்கம்போல மீனாவை திட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications