சிறகடிக்க ஆசை: உயிருக்கு போராடும் பிஏ.. ரோகிணிக்கு சிக்கல்.. மனோஜை மிரட்டும் முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 9ஆம் தேதிக்கான எபிசோடில் சிட்டியும் பழைய பிஏவும் சேர்ந்து ரோகிணியை ஏமாற்றுகின்றனர். அதோடு மிரட்டி பணம் கேட்கின்றனர். இதனால் ரோகிணி பெரிய பிரச்சனையில் சிக்குகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்து, சீதா, மீனா எல்லோரும் போலீஸிடம் கெஞ்சுவதால் மீனாவின் அம்மாவை போலீஸ் வீட்டிற்கு அனுப்புகின்றனர். ஆனாலும் இன்னைக்கு ஒரு நாள் தான் டைம் தரோம் அதற்குள் அந்த பையன் சத்யாவை போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் பெரியதாக ஆக்சன் எடுப்போம் என்று சொல்லி விடுகின்றனர்.

மறுபக்கத்தில் ரோகிணி சிட்டி எதுக்காக கூப்பிட்டார் என்று வருகிறார். அங்கு பிஏ இருந்த ரூமிற்கு அழைத்து செல்ல பிஏ படுத்த படுக்கையாக இருக்கிறார். அதை பார்த்து ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். என்ன ஆச்சு என்று கேட்க லேசா தான் அவனை அடிச்சோம் ஆனா நெஞ்ச புடிச்சுட்டு விழுந்துட்டான் இன்னும் ஒரு வாரம் இப்படி வைத்திருந்தா அவன் செத்து போயிடுவான். இவனுக்கு ட்ரீட்மென்ட் பாக்கணும்.
இவனை காணோம்னு அவனுடைய பொண்டாட்டி தேடி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பாங்க அப்போ என்னோட ஆளுங்க இவன தூக்கிட்டு வந்து இருக்காங்க நானும் மாட்டுவேன். நான் மாட்டுனா உன் பேரை சொல்லிடுவேன் என்று ரோகிணியை மிரட்டுகிறார். உடனே ரோகிணி டென்ஷன் ஆக நான் இவனை இப்படியா அடிக்க சொன்னேன் என்று கேட்கிறார்.

அதற்கு ஒரு தப்பு நடந்துவிட்டால் அந்த பிரச்சனையிலிருந்து எப்படி வெளியே வரலாம்னு பேச தான் உன்னை கூப்பிட்டேன், அதாவது இவனை இங்க வச்சு ட்ரீட்மென்ட் பாத்தா நாம மாட்டிக்குவோம். இவனை கேரளாவுக்கு அனுப்பி வைக்கணும் அதுக்கு ரெண்டு லட்சம் செலவாகும் என்று சொல்ல, அதற்கு ரோகிணி நான் அவ்வளவு பணம் எப்படி கொடுக்க முடியும் என்று கேட்கிறார்.
அதற்கு சிட்டி இவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா உனக்கு இருக்குற பிரச்சனையில் இதுதான் பெரிய பிரச்சனையா இருக்கும் என்று மிரட்டுகிறார். அதற்கு ரோகிணி சரி நான் ரெடி பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அவர் போனதும் பி ஏ மாஸ்கை எடுக்கிறார். அதற்கு பிறகு தான் சிட்டியும் சேர்ந்து நாடகம் ஆடியது தெரிய வருகிறது.

அப்போது பிஏ தினேஷ், நான் சொன்னேன்ல இவகிட்ட எவ்வளவு பணம் கேட்டாலும் இவ தருவானு என்று சொல்ல, அதற்கு சிட்டி நான் இவா கிட்ட இன்னும் நிறைய பணம் வாங்கணும் என்று பிளான் போடுகிறார். மறுபக்கத்தில் முத்துவும் மீனாவும் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வக்கீல் நம்பர் வாங்கிக் கொண்டு வருகின்றனர். பிறகு அந்த வக்கீலை பார்ப்பதற்காக செல்கின்றனர்.
அங்கு அவர் இந்த பிரச்சனையை ஈஸியா முடிக்கிறதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு உங்களுடைய அம்மா கேஸை வாபஸ் வாங்குவது தான். அப்படி இல்லன்னா காசு ரொம்ப செலவாகும் என்று சொல்கிறார். அதை தொடர்ந்து முத்து வீட்டிற்கு வந்து அண்ணாமலையிடம் இந்த கேஸை வாபஸ் வாங்க சொல்லி அம்மா கிட்ட சொல்லுங்கப்பா என்று கெஞ்சி கொண்டிருக்கிறார்.

அப்போது மனோஜ் வந்து அப்படியெல்லாம் நீங்க கேச வபஸ் வாங்க சொல்லி அம்மாகிட்ட பேசாதிங்கப்பா.. அவன் ஜெயிலில் இருக்கட்டும் என்று சொல்ல, முத்து மனோஜின் சட்டையை பிடித்து செய்யாத தப்புக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்புறது உங்களுக்கு கைவந்த கலையாச்சே என்று பேச, மனோஜ் எதுவும் சொல்லாமல் அமைதியாக ரூமுக்குள் செல்கிறார். பிறகு அண்ணாமலை விஜயாவிடம் பேசுவதற்காக பார்வதி வீட்டிற்கு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications