சிறகடிக்க ஆசை: கடன் கொடுத்து போட்டோவால் மாட்டிக்கொள்ளும் மனோஜ்.. விஜயாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 12ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் அண்ணாமலையிடம் கடன் வாங்கிய காசால் மனோஜ் புது நண்பர் மூலமாக அடுத்த பிரச்சனையில் சிக்குகிறார்.

அதே நேரத்தில் முத்துவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் ரவி மற்றும் ஸ்ருதி மூலமாக புது பிரச்சனையும் வர இருக்கிறது.

siragadikka aasai serial October 12th promo and Episode Highlights

அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் ஸ்ருதியும் அவருக்கு என்கேஜ்மென்ட் செய்து இருக்கும் பிஜுவும் துணி எடுக்க கடைக்கு வருகிறார்கள். அந்த லிப்டிற்குள் ஹீரோ போல ரவி வந்து என்ட்ரி கொடுக்க அவரைப் பார்த்ததும் ஸ்ருதி சந்தோஷப்படுகிறார். அப்போது ரவி ஸ்ருதியிடம் பேச முயற்சி செய்ய அங்கு இருக்கும் பிஜு குரங்கு சேட்டைகள் செய்து கொண்டிருக்கிறார் அதனால் ரவி கடுப்பாகிறார்.

அப்போது வீட்டில் விஜயா மனோஜை திட்டிக் கொண்டிருக்கிறார். இன்னும் எத்தனை நாளைக்கு தான் வேலை இல்லாமல் சுத்துவ. சீக்கிரமா வேலை தேடு. ரோகிணி வேற சம்பள காச கேட்டா அதற்கு நீ என்ன பண்ணுவ? நீ ஏதாவது வேலைக்கு போனா தான் நிலைமையை சரி பண்ண முடியும். உனக்கு தங்கமான மனைவி கிடைச்சிருக்கு. அதை நீ காப்பாத்திக்க என்று சென்டிமெண்டாக மகனுக்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்க அதற்கு மனோஜ் அம்மா எனக்கு ஒரு 500 ரூபாய் கொடு என்று கேட்க அதற்கு விஜயா கடுப்பாகி நான் என்ன வேலைக்கா போறேன்.

பத்திர விஷயத்தில் வீட்டில் மாட்டியதுல உங்க அப்பா எனக்கு பணமே கொடுக்கிறதில்ல. இதுல நீ வேற என்ன தொந்தரவு பண்ணாத. வேணும்னா நீ உங்க அப்பா கிட்ட கேளு என்று சொல்ல, மனோஜ் மெல்ல மெல்ல அண்ணாமலையை நோக்கி வந்து கொண்டிருக்க, அந்த நேரத்தில் அங்கு முத்து அண்ணாமலைக்கு 500 ரூபாய்க்கு சில்லறை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அதில் 50 ரூபாயில் ஹார்ட்டின் போட்டு மைனா என எழுதி இருக்கிறது.

இதைக் குறித்து அப்பாவும் மகனும் பேசிக்கொண்டிருக்க அந்த நேரத்தில் இந்த முத்து வேற இருக்கானே விலகிப் போனாலாவது நம்ம பணம் வாங்கலாம் என்று மனோஜ் காத்துக் கொண்டிருக்கிறார். பிறகு முத்து கிளம்பி போனதும் 500 ரூபாய்க்கு சில்லறை வேண்டும் என்று ஏமாற்றி அண்ணாமலை இடம் இருக்கும் 300 ரூபாயை மனோஜ் வாங்கிக் கொண்டு கிளம்ப, அதனால் கடுப்பான அண்ணாமலை விஜயாவிடம் இருக்கும் 200 ரூபாயை வாங்கிக் கொண்டு கிளம்புகிறார்.

siragadikka aasai serial October 12th promo and Episode Highlights

அதைத் தொடர்ந்து அங்கிருந்து மனோஜ் வழக்கம்போல பார்க்குக்கு வருகிறார். ஆனால் அங்கே ஒரு கஸ்டமரை அழைத்துக் கொண்டு முத்துவும் அங்கே வருகிறார். அந்த கஸ்டமர் மனோஜ்க்கு பழக்கமானவர், முத்துவிடம் சில்லறை இல்லாததால் நான் என்னுடைய நண்பரிடம் போய் சிலரை வாங்கிட்டு வருகிறேன் என்று மனோஜிடமிருந்த 300 ரூபாயை வாங்கி முத்துவிடம் கொடுத்து விடுகிறார். முத்து அந்த பணத்தில் இருந்த 50 ரூபாய் நோட்டை பார்த்ததும் அப்போ அண்ணாமலை தான் இங்கே இருக்கிறாரோ என்று பார்க் முழுவதும் தேடிப் பார்க்கிறார்.

முத்துவை பார்த்ததும் மனோஜ் அதிர்ச்சி அடைந்து அங்கே இங்கே ஓடி ஒளிந்து பிறகு வேறு வழியில்லாமல் பிச்சைக்காரர் போட்டு இருக்கும் பெட் சீட்டை எடுத்து போர்த்தி பிச்சைக்காரர் போல உட்கார்ந்திருக்க அவருக்கு முத்து ஐந்து ரூபாயை போட்டுவிட்டு போகிறார். அதை தொடர்ந்து துணி கடையில் இருக்கும் ஸ்ருதி ரவிக்கு தேங்க்ஸ் சொல்லி நாம உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்ல, அதற்கு ரவியும் சம்மதம் தெரிவிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

அதைத்தொடர்ந்து நாளைக்கான எபிசோட் இல் மனோஜ் தான் கொடுத்த 300 ரூபாயை அவருடைய நண்பரிடம் கேட்க அவர் என்னிடம் சில்லறை இல்லை என்று சொல்லி 500 ரூபாயை கொடுத்துவிட்டு நீ உன்னுடைய பொண்டாட்டியையே ஏமாற்றிக்கொண்டு இங்கே வேலை பார்ப்பதாக நடித்துக் கொண்டிருக்கிறாய். என்னையும் ஏமாத்திட்டு போனாலும் போயிடுவே உன்னை ஒரு போட்டோ எடுத்துக்கிறேன் என்று போட்டோ எடுக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+