சிறகடிக்க ஆசை: சீதாவிடம் காதலை சொன்ன ரவி.. முத்துக்கு தெரிய வந்த உண்மை.. மொத்த கதையும் மாறி போச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 14ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் தான் காதலிக்கும் விஷயத்தை ரவி, மீனாவின் தங்கை சீதாவிடம் சொல்ல அவர் அதிர்ச்சியாகிறார்.
அதே நேரத்தில் ஸ்ருதியும் ரவியும் இப்போது பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்ற உண்மையை கேட்டு முத்து அதிர்ச்சி அடைகின்றார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில் அண்ணாமலையும் ஸ்ருதியின் அப்பாவும் பார்க்கில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஸ்ருதியின் அப்பா அண்ணாமலையிடம் நீங்க பொம்பள பிள்ளைகளை பெற்றிருந்தால்தான் என்னோட வலி உங்களுக்கு புரியும் என்று சொல்ல, அதற்கு அண்ணாமலை பொண்ணா இருந்தாலும் சரி பையனா இருந்தாலும் சரி எல்லா குழந்தைகளுக்கும் அப்பா அம்மா ஒரே போல தான் பாசத்தை காட்டுறோம். நீ உங்க பொண்ணு கூட என் பையன் பேசமாட்டான் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வருகிறார்.
வீட்டில் சோகமாக இதையே யோசித்துக் கொண்டிருக்கும் அண்ணாமலையை பார்த்த முத்து என்னாச்சுப்பா இப்படி சோகமாய் இருக்க என்று விசாரிக்க, அதற்கு ஸ்ருதியின் அப்பா தன்னை கூப்பிட்டது பற்றியும் அவர் பேசியது பற்றியும் அண்ணாமலை சொல்கிறார். அதற்கு முத்து இது ஏற்கனவே எனக்கு தெரியும் அவங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கிறது. ஆனா உனக்கு தெரிஞ்சா நீ கஷ்டப்படுவானு என்று தான் உன் கிட்ட சொல்லல.
இனி ரவி அந்த பொண்ணு கூட பேச மாட்டான் நான் அவன் கிட்ட சொல்றேன் என்று சொல்லிவிட்டு
முத்து மீனாவிடம் ரவியை பற்றி கோபப்படுகிறார். ரவி அந்த பொண்ணு கூட தான் பேசிக்கிட்டு இருந்திருக்கார். இதற்கு ஒரு முடிவு கட்டணும். சீக்கிரமா ஒரு பொண்ண பார்த்து அவனுக்கு கல்யாணத்தை முடிக்கணும் என்று சொல்ல, அதற்கு மீனா தன்னுடைய அறிவுரைகள் சொல்ல வர ஆனால் முத்து எதையும் கேட்கவில்லை.
அதைத்தொடர்ந்து ரவி சீதாவுக்கு போன் போட்டு நான் என்னுடைய வாழ்க்கை பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை உன்கிட்ட பேசணும் நாளைக்கு காலையில் பார்க்குக்கு வா என்று சொல்ல, அதைக் கேட்டு சீதா அதிர்ச்சி அடைந்து குழப்பம் அடைகிறார். பிறகு அடுத்த நாள் காலையில் ரவியை பார்க்க சீதா வந்து கொண்டிருக்கும் போது அவருடைய தோழி அவருக்கு கல்யாணம் என்று சொல்லி இன்விடேஷன் கொடுத்து அழைக்கிறார். அதை வாங்கிக்கொண்டு ரவியிடம் வந்து பேசும் சீதாவிற்கு ரவி ஆரம்பத்தில் பேசுவதை பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது.
ரவி தன்னைத் தான் காதலிக்கிறானோ என்று சீதா நினைக்க, கடைசியில் ரவி தான் ஸ்ருதியை காதலிக்கிறேன் என்பதை பற்றி சொன்னதும் சீதா நிம்மதி அடைகிறார். பிறகு தங்களுடைய கல்யாணத்திற்கு நீதான் சப்போர்ட் செய்ய வேண்டும் என்று ரவி கேட்க, அதற்கு முதலில் சீதா மறுக்க பிறகு எங்களுக்கு வேற வழி இல்ல இந்த கல்யாணம் நடக்கலனா ஸ்ருதி இறந்து போயிருவேன்னு சொல்லுதா என்று சொல்ல ஒரு வழியாக சீதாவும் சம்மதிக்கிறார்.

அப்போது ஸ்ருதி ரவிக்கு போன் போட ரவி சீதாவிடம் தான் பேசிக் கொண்டிருப்பது பற்றி சொல்ல நானும் பேசுகிறேன் என்று ஸ்ருதி சீதாவிடம் பேசுகிறார். அதைத்தொடர்ந்து சீதா சரி வீட்டுக்கு தெரியாமல் உங்களுக்காக உதவுகிறேன் என்று சம்மதம் சொல்லி, ஸ்ருதி வீட்டிற்கு போகிறார். அங்கு ஸ்ருதியின் அம்மா முதலில் இவரை பார்த்ததும் யார் என்று விசாரிக்க, நான் ஸ்ருதியின் தோழி செவ்வியிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்ல, அவர்கள் ஸ்ருதியை கூப்பிடுகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications