சிறகடிக்க ஆசை: விஜயா, மனோஜை பெல்டால் விளாசிய மீனா.. ரவியின் மனமாற்றம்.. இப்படி பண்ணிட்டாங்களே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மீனா, மனோஜ், ரோகிணி, விஜயாவை பெல்டால் அடித்து விளாசி இருக்கிறார். ஆனால் கடைசியில் அது கனவாக இருக்கிறது. அதுபோல வீட்டை விட்டுப் போன ஸ்ருதியை ரவி சமாதானம் செய்திருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மனோஜ் மீனாவிடம் அதிகாரமாக பேசிக் கொண்டிருக்க கோபமான மீனா நேராக ரூமுக்கு சென்று அங்கிருக்கும் பெல்ட்டை எடுத்து வந்து மனோஜ் மற்றும் விஜயாவை போட்டு அடிக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி வருகிறார் அவரும் எதுக்காக மனோஜை போட்டு அடிக்கிறீங்க என்று மீனாவிடம் வாக்குவாதம் செய்ய ரோகிணியையும் அடித்து உன் புருஷனுக்கு தேவைன்னா நீ சமைச்சு கொடு.

என்னை எதற்காக சமைக்க சொல்லி உன் புருஷன் அதிகாரம் பண்ணுறான் என்று திட்டுகிறார். ரோகிணி, மனோஜ், விஜயா என எல்லோரும் முட்டி போட்டு மன்னிப்பு கேட்கின்றனர். இதையெல்லாம் நீங்கள் நிஜம் என்று நம்பிக் கொண்டிருந்தால் அது தான் இல்லை. கடைசியில் மீனா கனவு கண்டு இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. இதுவரைக்கும் இந்த சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் அடுத்தடுத்து நடந்து விடுவதால் இதுவும் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்று அதிர்ச்சி தான் கிடைத்தது.

கடைசியில் தான் கண்ட கனவில் விஜயா, ரோகிணி, மனோஜ் மூவரும் நடந்து கொண்டதை நினைத்து மீனா சிரித்துக்கொண்டே இருக்கிறார். எதற்காக சிரிக்கிறார் என்று தெரியாமல் விஜயாவும், மனோஜும் கோபப்படுகின்றனர். கடைசியின் முத்து வந்து என்னாச்சு எதற்காக சிரிக்கிறாய் என்று கேட்க, தான் கனவு கண்ட விஷயத்தைப் பற்றி மீனா சொல்கிறார். அவரும் இவர்களை வெறுப்பேத்தும் விதமாக சிரித்துக் கொண்டே இருக்கிறார்.

இதைப் பார்த்து வெறுப்பானது விஜயாவும், மனோஜும் மட்டுமல்ல ரசிகர்களும் தான். மறுபக்கத்தில் ரவி ஸ்ருதியை சமாதானம் செய்ய வீட்டிற்கு போகிறார். ஆனால் அங்கு ஸ்ருதியின் அப்பாவும் அம்மாவும் ஸ்ருதியை தங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ரவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்டு மோதிரம் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்து அவரை வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்.

அடுத்ததாக ஷோரூமில் இருக்கும் ரோகிணி வித்யாவுக்கு போன் போட்டு முத்து போனில் இருக்கும் வீடியோவை எடுக்க வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications