சிறகடிக்க ஆசை: வீட்டுக்கு வந்த ஸ்ருதி விஜயாவுக்கு கொடுத்த அதிர்ச்சி.. அண்ணாமலை சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 16ம் தேதிக்கான எபிசோடில் வீட்டை விட்டு போன ஸ்ருதி மீண்டும் வீட்டிற்கு வந்து இருக்கிறார். அப்போது விஜயாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதுபோல முத்துவின் செல்போனை எடுப்பதற்காக ரோகிணி புது ப்ளான் போட்டு இருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது அண்ணாமலைக்கு இன்னும் சாப்பிடுங்க இன்னும் சாப்பிடுங்க என்று மீனா சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருக்க அதை பார்த்த அண்ணாமலை எங்க அம்மா தான் இப்படி எனக்கு சாப்பாடு பரிமாறுவாங்க .ஆனா கல்யாணத்திற்கு பிறகு விஜயா சாப்பிட்டது போதும் என்று சொல்லி சொல்லியே பழக்கம் ஆயிடுச்சு என்று சொல்கிறார்.

அதற்கு முத்து ஆமாம், பாட்டி எனக்கும் எண்ணிக்கையே இல்லாமல் சாப்பாட்டை எடுத்து வைப்பாங்க. நான் 10 இட்லி வரைக்கும் சாப்பிட்டு விடுவேன் என்று சொல்ல, அதற்கு விஜயா வயசு ஆக ஆக சாப்பாடை கம்மியா தான் சாப்பிடணும் என்று சொல்ல, மீனா அப்படி எல்லாம் இல்ல ஓடி ஆடி வேலை செய்றவங்க எவ்வளவு சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகிடும் என்று சொல்ல, அதான் தெரியுமே நீ குண்டா நிறைய சாப்பாடு சாப்பிடுவ. கப்பில் தான் டீயே குடிப்பே என்று விஜயா நக்கல் செய்ய, அதற்கு அண்ணாமலை அடுத்தவங்க சாப்பிடுவதைப் பற்றி பேசுவது பெரிய பாவம் என்று திட்டுகிறார்.
அந்த நேரத்தில் ஸ்ருதியும் ரவியும் வீட்டிற்கு வர விஜயா வாடா ரவி வந்து சாப்பிடு என்று சொல்கிறார். அதோடு ஸ்ருதியை பார்த்ததும் புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை வரத்தான் செய்யும் அதுக்குன்னு உங்க அப்பா வீட்டுக்கு போயிருவியா? என்கிட்ட சொல்லி இருந்தா நானே தீர்த்து வைத்திருப்பேன் என்று சொல்ல, அதற்கு நீங்கள் என்ன ஐகோர்ட்டு ஜட்ஜா என்று கேட்க முத்து பல குரலுக்கு ரொம்ப தான் தைரியம் இப்படி ஓப்பனா பேசிட்டியே என்று கிண்டல் செய்கிறார். அதற்கு விஜயா கோபப்படுகிறார்.
அப்போது அண்ணாமலை ஸ்ருதியை கூப்பிட்டு வீட்டு பிரச்சினை எல்லாம் அம்மா வீட்டில் கொண்டு போய் சொல்ல கூடாது என்று அட்வைஸ் செய்ய, அதற்கு ஸ்ருதி நான் எங்க அம்மா வீட்டில் எங்களுடைய சண்டை பற்றி சொல்லவே இல்லை. எனக்கு உடம்பு சரியில்லை என்று மட்டும் தான் சொன்னேனே தவிர இங்கு நடைபெறுவதை பற்றி எதுவும் நாங்கள் சொல்ல மாட்டேன். இது என்னுடைய குடும்பம் என்று சொல்கிறார்.

அதோடு ரவி வந்து என்னை கன்வின்ஸ் பண்ணிட்டான். அதனாலதான் நான் வந்துட்டேன் என்று ரவி வாங்கி கொடுத்த மோதிரத்தை காட்ட அதை பார்த்ததும் முத்து அதிர்ச்சியாகி ஏன்டா இப்படி பண்ணின? நாள் சண்டை வந்துட்டா அல்வாவும் மல்லிகைப்பூவும் வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தி இருக்கிறேன். நீ இப்படி பண்ணிட்டா இதையே இனி இவளும் கேட்க போறா என்று சொல்கிறார். பிறகு அண்ணாமலை எல்லாரையும் சாப்பிட சொல்ல ஸ்ருதி எனக்கு பீவரா இருக்கு நான் போறேன் என்று ரூமுக்குள் செல்கிறார்.
விஜயா ரவியை தனியாக கூப்பிட்டு நான் தான் சொன்னேனே அதற்குப் பிறகு எதுக்கு அவளை கூப்பிட வீட்டுக்கு போன? இப்போ நீ கூப்பிட போயிருக்கதனால இனி இதுபோல மோதிரத்துக்காக அடிக்கடி சண்டை போடுவா என்று திட்ட அதற்கு ரவி ரெஸ்டாரண்டில் பெரிய ஆர்டர் ஓகே ஆனதால் ஒரு அமௌன்ட் கொடுத்தாங்க அதற்கு தான் மோதிரம் வாங்கி கொடுத்தேன் என்று சொல்ல இந்த பணத்தை நீ என்னிடம் கொடுத்திருக்கலாம் என்று திட்டிக் கொண்டிருக்கும்போது ரவி நீங்க போக வேண்டாம்னு சொன்னீங்க அதற்குப் பிறகு மீனா அண்ணி போன் பண்ணி ஸ்ருதியை போய் சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர சொன்னாங்க அதற்கு பிறகு தான் நான் கிளம்பிப் போனேன் என்று சொல்கிறார்.

உடனே விஜயா மீனாவிடம் சென்று உன்னை யாரு ரவி இடம் சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர சொல்ல சொன்னது என்று திட்ட, அதற்கு முத்து எல்லாரும் சாப்பிட்டா ஜீரணம் ஆகுறதுக்கு சோடா குடிப்பாங்க ஆனா இவங்களுக்கு மீனாவை திட்டுனா தான் ஜீரணம் ஆகும் என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார். அதற்கு அண்ணாமலை நீ செய்ய வேண்டிய வேலையை மீனா செஞ்சிருக்கா போய் உன் வேலையை பாரு என்று திட்டி அனுப்புகிறார்.
அடுத்ததாக கிச்சனில் மீனா பால் காய்ச்சிக்கொண்டிருக்கும்போது அந்த பாலில் தூக்க மாத்திரையை கலப்பதற்காக ரோகிணி ரூமுக்குள் வருகிறார் . அங்கு மீனா நின்று கொண்டே இருக்க மீனாவிடம் மழை வர மாதிரி இருக்கு மாடியில் துணி காய போட்டு இருக்கீங்களா போய் பாருங்க என்று சொல்ல மீனாவும் மாடிக்கு போகிறார். அந்த நேரத்தில் பாலில் ரோகிணி தூக்க மாத்திரைகளை கலந்து விடுகிறார்.
பிறகு மாடியில் இருந்து வந்த மீனா மாடியில் துணியே இல்ல எதுக்காக இப்படி சொன்னீங்க என்று ரோகிணியை திட்டி விட்டு பாலை கொண்டு போய் முத்துவிடம் கொடுக்க, முத்து பாலை குடித்துவிட்டு மீனாவிடம் பாட்டு பாட சொல்ல மீனா பாட்டு பாடி கொண்டிருக்கும்போது முத்து தூங்கி விடுகிறார். இதையெல்லாம் பார்த்து ரோகினி சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications