சிறகடிக்க ஆசை: மனோஜ் செய்த பிரச்சனை.. முத்துவுக்காக அப்பா சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 18ம் தேதிக்கான எபிசோடில் முத்து மனோஜின் பார்டி கார்டை அடித்ததால் உறவினர்கள் வந்து பிரச்சனை செய்ததால் மனோஜ் வீட்டில் சண்டை போடுகிறார். அதற்கு அண்ணாமலை முத்துவுக்காக சப்போர்ட் செய்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து கார் செட்டில் இருக்கும் போது அங்கு மீனா வந்து சீதாவுக்கு வரம் வந்த விஷயத்தை பற்றி சொல்ல அதற்கு முத்து இப்பவே அவளுக்கு கல்யாணம் செய்து கொடுக்கணுமா? அவ சின்ன பொண்ணு அவளிடம் சம்மதம் கேட்டீங்களா? அவன் சம்மதிச்சா மட்டும்தான் இந்த கல்யாணம் நடக்கும் என்று சொல்ல அதற்கு மீனா நாம சம்மதித்தா நம்முடைய கல்யாணம் நடந்துச்சு?

television siragadikka aasai serial vijay tv

ஆனா கல்யாணம் நடந்த பிறகு நாம இப்போ நல்லா தானே இருக்கோம். அவளுக்கு சரியான வரன் வந்திருக்கு அவங்களே விரும்பி வரதால இந்த வாழ்க்கை நல்லா இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். முதலில் முத்து இதற்கு சம்மதிக்கவில்லை பிறகு சரி என்று சொல்கிறார். இதைத்தொடர்ந்து வீட்டிற்கு கோபமாக வரும் மனோஜ் இந்த மாதம் நான் 50000 காசு தரமாட்டேன் என்று சொல்ல, என்ன நடந்தது என்று எல்லோரும் கேட்கிறார்கள்.

அதற்கு எல்லாம் உன்னாலதான்டா என்று முத்துவை திட்டுகிறார். முத்து நான் என்ன பண்ணுனேன் என்று கேட்க, நீ பாடிகாடை அடித்ததால் அவன் ஹாஸ்பிடலில் இருக்கிறான். அவனுக்கு ஹாஸ்பிடல் செலவுக்காக அவனுடைய சொந்தக்காரங்க வந்து பணம் கேட்டு பிரச்சினை பண்ணுனாங்க. நான் இல்லைன்னு சொன்னதும் கடையில் இருந்த பொருள்களை அள்ளிட்டு போயிட்டாங்க என்று சொல்கிறார்.

அதற்கு அண்ணாமலை நீ ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு காரணம் சொல்லிட்டு இருக்க என்று சொல்ல, விஜயா மனோஜ்க்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார். அதற்கு முத்து நீ எனக்கு போன் பண்ணி சொல்லி இருந்தா நான் அவனுகள ரெண்டு போட்டு அனுப்பி இருப்பேன் என்று சொல்ல, அதற்கு மனோஜ் நான் டீசன்டான ஆளு இப்படி அடிதடி எல்லாம் எனக்கு பிடிக்காது என்று சொல்ல, அதற்கு விஜயா நான் என் பிள்ளையை இப்படி வளர்த்து இருக்கிறேன் ஆனால் உங்க அம்மா இவனை ரவுடியா வளர்த்து இருக்காங்க என்று சொல்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதற்கு அண்ணாமலை எங்க அம்மா முத்துவை நல்லபடியா நேர்மையா வளர்த்திருக்காங்க. அவரு தைரியமா இருக்கானே தவிர ரவுடி ஒன்னும் கிடையாது. முத்துவும் உன் பையன் தான். அதை முதல்ல ஞாபகம் வச்சுக்கோ என்று சொல்ல, அதற்கு விஜயா கோபப்படுகிறார். ஆனால் இந்த மாதம் நான் பணம் தர முடியாது என்று மனோஜ் சொன்னதால் நாங்க அடுத்த மாதம் தருகிறோம் என்று ரோகிணி சொல்கிறார்.

அதற்கு அண்ணாமலை இது என்னுடைய பணம் எங்க அம்மா சொன்ன மாதிரி மனோஜ் பணம் தந்தாகணும் இந்த மாதம் முடியலை என்றால் அடுத்த மாதம் ஒரு லட்சமா தரணும் என்று சொல்லிவிடுகிறார். அடுத்ததாக சீதா அவருடைய அம்மாவிடம் எனக்கு இப்போ கல்யாண வேண்டாம் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்துவும் மீனாவும் அங்கு போகின்றனர்.

television siragadikka aasai serial vijay tv

சீதா கல்யாணம் வேண்டாம் என்று சொல்வதற்கு முத்து காரணம் கேட்டதும், நான் இப்பதான் வேலைக்கு போறேன் இன்னும் உயர வேண்டும் என்று சொல்ல, அதற்கு முத்து ஆமாம் சரிதான் என்று சொல்கிறார். பிறகு மீனாவின் அம்மா இப்போதைக்கு சூழ்நிலையில் கல்யாணம் முடிந்தால் தான் சரி என்று சொல்ல அதற்கும் முத்து இதுவும் சரி என்று சொல்கிறார். அந்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டிலிருந்து மாப்பிள்ளையின் பெற்றோர் வருகின்றனர். அவர்களுக்கு சீதாவை பிடித்து போய்விடுகிறது. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+