சிறகடிக்க ஆசை: முத்து குடும்பத்துக்குள் என்ட்ரியாகும் புது கேரக்டர்.. ரோகிணிக்கு வந்த சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 21ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியிடம் சத்யாவின் வீடியோவை கேட்டு சிட்டி மிரட்டுகிறார். அதே நேரத்தில் இன்றைய எபிசோடில் சீதாவிற்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையாக நடிகர் குமரன் அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் முத்துவின் மனதை கவர்ந்திருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணி சிட்டியை சந்தித்து பிஏ தன்னை மிரட்டுவதாகவும் அவனை ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்ல, அதற்கு சிட்டி நீங்க முதலில் முத்து ஃபோனில் இருக்கும் வீடியோவை எடுத்து கொடுங்க. அதுக்கு பிறகு நான் அந்த பி ஏவை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு சரி செய்கிறேன் கொஞ்சம் டைம் கொடு என்று கேட்டுவிட்டு ரோகிணியும் வித்யாவும் அங்கிருந்து வெளியே வருகின்றனர்.

television siragadikka aasai serial vijay tv

அப்போது வித்யா ரோகிணிடம் என்ன பிளான் பண்ண போற என்று கேட்க, என்னுடைய கல்யாண நாள் வருது அப்போ ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி அதுல எப்படியாவது முத்துவை குடிக்க வச்சுட்டா மட்டும் போதும். போனை ஈசியா எடுத்திடலாம் என்று பிளான் போடுகிறார். மறுபக்கத்தில் முத்துவும் மீனாவும் சீதாவை திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளையை சந்திக்கின்றனர்.

புது மாப்பிள்ளையாக நடிகர் குமரன் அறிமுகமகிறார். (அவர் ஏற்கனவே சன் டிவி உட்பட பல சேனல்களில் சீரியல்களில் அடித்து இருக்கிறார்). அவரிடம் முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அவர் சொன்ன கண்டிஷன் சீதா சொன்ன கண்டிஷனுக்கு அப்படியே தலைகீழாக இருக்கிறது. அதாவது நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போவோம் ஆனா அம்மா வீட்டுக்கு சீதா பணம் கொடுக்கக்கூடாது.

television siragadikka aasai serial vijay tv

நான் வெளியே எங்கேயும் கூட்டிட்டு போக மாட்டேன். வீட்டு வேலை செய்ய மாட்டேன் என்று புது மாப்பிள்ளை அடுக்கிக் கொண்டே போக முத்து அதிர்ச்சியாகிறார். பிறகு தான் குடித்த ஜூஸுக்கு அவர் பணத்தை கொடுத்து விட்டு போகும் போது இந்த குணம் எனக்கு பிடிச்சிருக்கு ஆனா இது சீதா வாழ போற வாழ்க்கை அவ பேசி முடிவு பண்ணட்டும் என்று சொல்லிவிடுகிறார்.

அடுத்ததாக மனோஜ் கடையில் உட்கார்ந்து லாபம் வரலையே என்று பேசிக் கொண்டிருக்கும் போது மனோஜின் பார்க் ஃபிரண்ட் வருகிறார். அவர் என்னுடைய நண்பர் சென்னையில் பெரிய பிசினஸ் மேனாக இருக்கிறார். அவர் நன்றாக உழைக்கக்கூடிய ஒருவருடன் பிசினஸ் வைக்கப் போகிறார். நான் உன்னை பற்றி நிறைய சொல்லி இருக்கிறேன்.

television siragadikka aasai serial vijay tv

அதோடு உன்னை ஒரு பெரிய கோடீஸ்வரன் என்றும் உன்னுடைய ஒரு தம்பி 50 காருக்கு சொந்தக்காரன் என்றும், இன்னொரு தம்பி ரெஸ்டாரண்ட் சொந்தமா வச்சிருக்கிறான் என்றும் உங்க குடும்பம் கோடீஸ்வர குடும்பம் என்றெல்லாம் சொல்லி இருக்கிறேன் என்று சொன்னதும் முதலில் மனோஜ் பொய் சொல்லி பிசினஸ் தொடங்கனுமா? உண்மை தெரியும் போது பிரச்சனை ஆயிடுமே என்று சொல்கிறார்.

அதற்கு ரோகிணி பார்த்துக்கலாம் என்று மனோஜின் மைண்டை மாற்றுகிறார். அதோடு தன்னுடைய திருமண நாளன்று அந்த கோடீஸ்வரரை கூப்பிட்டு ஒரு பார்ட்டி வைப்போம் என்று மனோஜ் மற்றும் ரோகிணி பிளான் போடுகின்றனர். ஆனால் அதற்கு முன்பு முத்துவிடம் நான் சொல்ற மாதிரி கூப்பிடு என்று ரோகிணி மனோஜ்க்கு ஐடியா கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

television siragadikka aasai serial vijay tv
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+