சிறகடிக்க ஆசை: ரவியை அடித்த முத்து பற்றி ஸ்ருதி சொன்ன வார்த்தை.. கடும் கோபத்தில் மீனா செய்த செயல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அக்டோபர் 27ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ரவியை ரெஸ்டாரண்டில் போய் முத்து அடித்து விட அது குறித்து ஸ்ருதி திட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து பாரில் மனைவி பற்றி ஒரு நபர் சொன்ன வார்த்தையை கேட்டு பயந்து போய் முத்து தன்னுடைய நண்பன் மூலமாக மீனாவுக்கு போன் செய்கிறார்.
இப்படியாக இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஹோட்டலுக்கு வந்த முத்து ரவியை போட்டு அடிக்கிறார். அதற்கு ரவி திருப்பி அடிக்காமல் மௌனம் காக்க, அண்ணாமலைக்கு இனி ரெண்டு பசங்க தான் மூணாவது ஒருத்தன் இருந்தான் ஆனா அவன் இனி கிடையாது. உன்மேல எவ்வளவு நம்பிக்கை வச்சாரு. ஆனா நீ அந்த நம்பிக்கை எல்லாம் கெடுத்துட்ட துரோகி, அதோட இனி நீ வீட்டு பக்கம் வந்துராத என்று மிரட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறார்.
அதைத்தொடர்ந்து ரவி வீட்டில் இருட்டில் சோகமாக உட்கார்ந்து இருக்க அப்போது வீட்டிற்கு வந்த ஸ்ருதி நீ காலையில் நான் கோபத்தில் போனேன் என்று தெரிந்த பிறகும் எனக்கு ஒரு முறை கூட போன் செய்யல, நீ இப்படி எல்லாம் இருப்பேன்னு நினைத்து கூட பாக்கல என்று திட்டிக் கொண்டே இருக்கிறார். இது எதற்குமே ரவி பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என்று விசாரிக்க அப்போது ரவி எதுவும் சொல்லாமல் இல்ல சும்மாதான் நீ பசிக்குதுன்னு சொன்ன இல்ல இரு நான் பிளேட் எடுத்துட்டு வருகிறேன் என்று கிளம்பி போக, அப்போது ரவியின் நண்பர் ஃபோன் செய்து முத்து அவரை அடித்த விஷயம் பற்றி சொல்கிறார்.

அதைக் கேட்டு கோபமான ஸ்ருதி ரவியிடம் இன்னொரு முறை அவர் உன் மேல கை வச்சா நான் சும்மா இருக்க மாட்டேன். போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் என்று மிரட்டுகிறார். அதே நேரத்தில் முத்து பாரில் சரக்கு அடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு ஒருவர் என் பொண்டாட்டியை நான்கு வார்த்தை திட்டினேன் அதனால செத்துட்டா, யாரும் பொண்டாட்டி கிட்ட சண்டை போடாதீங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அதை கேட்டு டென்ஷனான முத்து அங்கிருந்து நண்பன் செல்வத்தை கூட்டிக்கொண்டு காரில் வருகிறார். அப்போது அந்த நபர் சொன்ன விஷயங்கள் முத்துக்கு நினைவு வந்து கொண்டே இருக்க மீனாவும் ஏற்கனவே நீங்க என்னை தேடும் போது நான் இருக்க மாட்டேன் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது. உடனே மீனாவுக்கு என்ன ஆச்சு என்று தெரியாமல் பதறுகிறார்.
அந்த நேரத்தில் மீனா அவருடைய அம்மாவின் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது அம்மா எதற்கெடுத்தாலும் எரிந்து விழுந்து கொண்டு இருக்க, அதற்கு மீனா என்னை எதுக்காக இங்க கூட்டிட்டு வந்த இப்போ நீ இப்படி முகத்தை காட்டாத அவரும் என்னை புரிஞ்சுக்கல நீயும் என்னை புரிஞ்சுக்கல என்று பீல் பண்ண அதற்கு மீனாவின் அம்மா உன் புருஷன் ரொம்ப நல்லவரு உன் மேல கோபத்தில் இருக்காரு.
அதனால நீ எங்கேயும் போயிடக் கூடாது என்று தான் நான் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் சீக்கிரமா அவரை மனசு மாத்தி அவரோட போய் சேர பாரு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபக்கத்தில் முத்து செல்வத்திடம் மீனாவுக்கு போன் போட்டு முத்து இருக்கானான்னு கேளு அவ எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம் என்று சொல்ல செல்வமும் போன் போட்டு முத்து இருக்கானா என்று கேட்க மீனா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
அப்போது செல்வம் முத்து எதுவும் பேச மாட்டேங்கிறாங்க அமைதியா இருக்காங்க என்று சொல்ல மீனாவுக்கு அது முத்து தான் போன் பண்ண சொல்லி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்கிறார். பிறகு மீனா போனை கட் செய்து வைத்துவிட முத்து காரில் யோசித்தபடியே வந்து கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications