சிறகடிக்க ஆசை: செய்ததை சொல்லி காட்டி மிரட்டும் ஸ்ருதி.. முத்து கேட்ட கேள்வி.. ஆடி போன மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலின் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் அக்டோபர் ஏழாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ரவி திருமணத்தை பற்றி முத்து மீனாவிடம் பேச சொல்கிறார்.

அதே நேரத்தில் மீனாவிடம் ஸ்ருதி நானும் ரவியும் காதலிக்கிறோம் என்ற விஷயத்தை பற்றி சொல்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் விஜய் டிவியில் சமீபத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் வேகமாக கதை பயணித்துக் கொண்டு வருவதால் ரசிகர்கள் இதை அதிகமாக பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் அடுத்தடுத்த ட்விஸ்டுகளும் உடனுக்குடன் உடைந்து வருகிறது.

ஏற்கனவே விஜயா வீட்டு பத்திரத்தை வைத்து ரோகிணிக்கு பணம் வாங்கி கொடுத்திருந்த விஷயம் இப்போது வீட்டிற்கு தெரிய வந்திருக்கும் நிலையில், ரோகினிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் ரகசியம் இனி எப்போது தெரிய வரும் என்று எதிர்பார்ப்பும், அதே நேரத்தில் மனோஜ் வேலைக்கு போகாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பது ரோகிணிக்கு தெரிய வந்தால் என்ன மாதிரி ரியாக்ஷன் நடக்கப்போகிறது என்பது பற்றி எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ரவியின் திருமண விஷயத்தில் அடுத்த பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்கிறது. ரவிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அதுவும் பணக்கார வீட்டில் திருமணம் செய்ய வேண்டும் என்று விஜயா ஒரு பக்கமாக பிளான் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அண்ணாமலை தன்னுடைய நண்பர் பரசு வீட்டில் சம்மதம் பேச ஆசைப்பட்டார். ஆனால் அவர் விஜயாவை சொல்லி தன்னுடைய மகளை அந்த வீட்டிற்கு கட்டித் தர முடியாது என்று கூறிவிட்டார்.

அதே நேரத்தில் ரவி ஸ்ருதியை காதலித்து வரும் வேளையில் அது பற்றி வீட்டில் செல்வதற்கு பயந்து கொண்டிருக்கிறார். ஸ்ருதியின் வீட்டில் இவர்களுடைய காதல் தெரிய வந்ததும் சுருதிக்கு உடனடியாக வேறு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். தற்போது புதிய பிரமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அப்போது முத்து மீனாவிடம் எங்க அந்த ரவி பையனை காணும் என்று கேட்க, அதற்கு மீனா அவர் அப்பவே ரெஸ்டாரன்ட் கிளம்பி போயிட்டாரு என்று சொல்ல, அவனுக்கு அந்த சம்பந்தம் கை கூடல என்று கவலையில் இருக்கிறானா? அதனால சோகமா ஆயிட்டா என்ன?, அம்மா பணத்தை மட்டும் தான் பார்ப்பாங்க. அப்பா தான் நல்ல குடும்பமா நல்ல பொண்ணா என்று பார்ப்பாங்க. நீயும் ரவி கிட்ட சொல்லி வை அம்மா சொல்ற பொண்ண எல்லாம் பார்க்க வேண்டாம் என்று என சொல்லிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பி போகிறார்.

அதற்குப் பிறகு மீனா வீட்டில் தனியாக இருக்கும் போது ஸ்ருதி அங்கே வருகிறார். அப்போது மீனாவிடம் ரவி உங்ககிட்ட சொன்னானா இல்லையா என்று தெரியாது. நானும் ரவியும் காதலிக்கிறோம் என்று சொல்ல, அதைக் கேட்டு மீனா அதிர்ச்சி ஆகிறார். எனது லவ்வா என்று கேள்வி கேட்க அதற்கு ஸ்ருதி உங்களுக்கு ஒரு பிராப்ளம் என்ற போது நான் ஹெல்ப் பண்ணினேன்ல. செஞ்ச ஹெல்ப்புக்கு பதிலா ஏதாவது செய்யணும்னு சொல்லுவீங்கல்ல. இந்த ஹெல்ப்பை எனக்காக செய்யங்க. உங்களால தான் இதை செய்ய முடியும் என்று சொல்ல, இதில் என்ன முடிவு எடுக்க என்று தெரியாமல் மீனா தவித்துக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications