சிறகடிக்க ஆசை: பணத்துக்காக மீனாவை தேடும் முத்து.. கடைசியில் கிடைத்த அதிர்ச்சி.. ஆபத்தில் அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 31ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு போன பிறகும் அண்ணாமலைக்கு மீண்டும் சீரியஸ் ஆகிவிட பணத்திற்காக மொத்த குடும்பமும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.

அப்போது மீனாவிடம் இருக்கும் வீட்டு பத்திரத்தை வைத்து பணம் வாங்கலாம் என்று மீனாவை முத்து தேட மீனா காணாமல் போகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அண்ணாமலைக்கு திடீரென்று பல்ஸ் குறைந்து கொண்டே வருகிறது என்று டாக்டர்கள் சொல்லி நாலு மணி நேரத்திற்குள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கெடு கொடுக்கின்றனர். அதைக் கேட்டதும் முத்து கையில் பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்க, மனோஜிடம் கேட்க அவரும் பணம் இல்லை என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு விஜயா ரோகினி இடம் உங்க அப்பா கிட்ட கொஞ்சம் பணம் கேட்டு யாமா என்று கேட்க அதற்கு ரோகிணி மாமாவுக்கு உடம்பு சரியில்லாமல் ஆனதுமே நான் அப்பாவுக்கு போன் பண்ணுனேன். அவர் துபாயில் இல்லை அவர் கிட்டயும் பணம் கிடைக்காது என்று சொல்ல அப்போது பார்லர் வச்சு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா என்று விஜயா கேட்க அதற்கு ரோகிணி அது இப்போதைக்கு முடியாது என்று சொல்லி விடுகிறார்.
அதைத் தொடர்ந்து முத்து தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக பணத்தை கேட்டு பார்க்க எல்லோரும் முடியாது என்று சொல்கின்றனர். அப்போது வீட்டு பத்திரத்தை வைத்து பணம் வாங்கலாம் என்று ரோகிணி சொல்ல, விஜயா வீட்டை வித்தா கூட பரவால்ல. பணத்தோட வா என்று முத்துவை அனுப்பி வைக்கிறார். அதற்கு ரோகிணி அந்த பத்திரம் மீனா கிட்ட தானே இருக்கு, மீனா இப்போ நம்ம வீட்டில் இல்லையே என்ன பண்ண என்று கேட்க,

அதற்கு வீட்டில் தானே அன்னைக்கு பீரோவில் வைத்து பூட்டினா, வீட்டில் போய் தேடி பாரு என்று முத்துவிடம் விஜயா சொல்ல முத்துவும் வீட்டிற்கு வந்து வீடு முழுக்க தேடி பார்க்க பத்திரம் காணாமல் போய்விடுகிறது.அதனால் திரும்பவும் ஹாஸ்பிடலுக்கு வந்து மனோஜ் சட்டையை பிடித்து பத்திரத்தை நீ தான் எடுத்திருப்பா, எங்கடா வச்சிருக்க என்று சண்டை போடுகிறார்.
அதற்கு ரோகிணி மீனா கிட்ட தானே பத்திரம் கொடுத்தாங்க. அங்க போய் அவங்க கிட்ட கேளுங்க என்று திட்டி அனுப்பி வருகிறார். அதை தொடர்ந்து முத்து மீனாவை தேடி வீட்டிற்கு வர அங்கு வீடு பூட்டி கிடக்கிறது. அதனால் பக்கத்தில் இருந்தவர் கோவிலுக்கு போய் இருப்பாங்க என்று சொல்ல கோவிலுக்கு வந்து பார்க்கும் போது அங்கு இருந்த பெண்மணி இப்பதானே மூணு பேரும் கிளம்பி ஆட்டோவில் போனாங்க என்று சொல்லகிறார்.
முத்து எங்க போய் தொலைச்சான்னு தெரியலையே என்று குழப்பத்தில் திட்டிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து மீனா தன்னுடைய அம்மாவுடன் ஒரு சாமியாரை பார்க்க வர அவர் ஒரு மந்திர கயிற்றை கொடுத்து இதை உங்க மாமனார் கையில கட்டி விடு. அவருக்கு ஒண்ணுமே ஆகாது. உன்னால உன் புகுந்த வீட்டுக்கு நல்லது மட்டுமே நடக்கும். உன் மாமனாருக்கு ஒன்னும் ஆகாது என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications