சிறகடிக்க ஆசை: முத்து போனை எடுத்து சிக்கிய ரோகிணி.. கல்யாணி அம்மா மீனாவிடம் சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் நான்காம் தேதிக்கான எபிசோடில் முத்துவின் ஃபோனில் இருக்கும் சத்யா வீடியோவை எடுக்க போய் குடும்பத்தினரிடம் ரோகிணி வசமாக சிக்கி இருக்கிறார். அதே நேரத்தில் முத்துவும் மீனாவும் ரோகிணியின் அம்மாவை நேரில் சென்று கொலுவிற்கு கூப்பிட்டு இருக்கின்றனர்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவும் அண்ணாமலையும் கிண்டலாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் பார்வதி வீட்டிற்கு வருகிறார். அவரை மீனா வரவேற்று பேசிக் கொண்டிருக்கிறார். அவரிடம் நான் இன்னொரு வீட்டிற்கும் கொலுவிற்கு போயிட்டு வரேன். அங்கேயும் சுண்டல், கொழுக்கட்டை எல்லாம் தந்தாங்க நல்லா இருந்தது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா வருகிறார். அவரை பார்த்ததும் விஜயா சம்மந்தி வரலையா என்று கேட்கிறார். அதற்கு முத்து அவருக்கு வழக்கம் போல ஏதாவது வேலை இருக்கும் அதனால போயிட்டாரு என்று கிண்டல் செய்ய, அதற்கு ஸ்ருதியின் அம்மா எந்தவொரு நல்ல விசேஷம் என்றாலும் இவர் இப்படித்தான் பேசி அடுத்தவங்களை கஷ்டப்படுத்துவாரா? என்று விஜயாவிடம் கேட்கிறார்.
அதற்கு மீனா அவர் அவருடைய மனசில் பட்டதை அப்படியே பேசுகிறார். எதையும் மனசில் வைத்து உங்களை குத்தி காமிக்கல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு விஜயா விடுங்க சம்மந்தி இவங்க இப்படித்தான் இவங்களுக்கு உங்க மேல பொறாமை என்று ஏற்றி விடுகிறார். அப்போது அண்ணாமலை வரவேற்று உங்க புருஷன் இந்த முறையும் வரலையா? என்று கேட்கிறார்.
அதற்கு விஜயா அதான் இவங்க வந்திருக்காங்களே அதை பாருங்க என்று சமாளிக்கிறார். அதற்கு ஸ்ருதி, அம்மா நான் உங்க ரெண்டு பேரையும் வர சொன்னேனே அப்பா ஏன் வரல என்று கேட்கிறார். அப்போது ரவி வந்து ஸ்ருதியிடம் உங்க அப்பா வேண்டும் என்று எங்க வீட்டை அவாய்ட் பண்றாரா? என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் வித்யா கோலாட்ட குச்சிகளை கொண்டு வருகிறார்.
அதை பற்றி எல்லாரும் என்னது என்று விசாரிக்க இன்று கோலாட்டம் நடக்கப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது விஜயா தன்னுடைய டான்ஸ் கிளாஸ் மாணவர்களிடம் இந்த குச்சியை கொடு இவங்க நல்லா ஆடுவாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு பூஜைகள் நடந்ததும் எல்லோரும் கோலாட்டம் டான்ஸ் ஆடுகின்றனர். அப்போது முத்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார்.

வித்யா நீங்க டான்ஸ் ஆடுங்க நான் வீடியோ எடுக்கிறேன் என்று போனை வாங்கி வீடியோ எடுக்கிறார். பிறகு ரோகிணி வித்யாவை கிச்சனுக்கு கூட்டிட்டு போய் அந்த போனில் இருக்கும் சத்யா வீடியோவை சோசியல் மீடியாவில் அப்லோட் பண்ணு என்று சொல்ல, அதற்கு வித்யா இப்போ எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க இந்த நேரத்தில் அப்லோட் பண்ணனுமா? இவங்க சந்தோஷம் எல்லாம் போயிரும் என்று சொல்கிறார்.
அதற்கு ரோகிணி அப்போ நான் சந்தோஷமா இருக்க கூடாதா என் சந்தோஷம் போனா மட்டும் பரவாயில்லையா? என்று கோபப்படுகிறார். பிறகு போனை வாங்கி வீடியோவை அனுப்பும் நேரத்தில் மீனா கிச்சனுக்கு வர முத்து நீயும் டான்ஸ் ஆட வா என்று மீனாவை பிடித்து இழுக்க கிச்சனுக்குள் கதவை தள்ளிக் கொண்டு மீனா விழுந்து விட, ரோகிணி கையில் இருக்கும் போன் கீழே விழுந்து விடுகிறது. அதை பார்த்து முத்துவும் மீனாவும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.
அப்போது டான்ஸ் ஆடிய வீடியோவை பார்த்ததாக ரோகிணி சமாளிக்கிறார். ஆனால் செல்போன் உடைந்து விட்டதால் கோபப்படுகிறார். அதற்கு ரோகிணி எனக்கு தெரிஞ்ச கடை இருக்கிறது. அங்கு கொடுத்து சரி பண்ணிடலாம் என்று சொல்ல முத்து வேண்டாம் என்று போனை வாங்கி கொள்கிறார். அதைத் தொடர்ந்து நடக்கும் கோலாட்டத்தை முத்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். பிறகு இரவு மீனாவும் முத்துவும் தனியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது முத்து நாளைக்கு உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்கிறார். பிறகு அடுத்த நாள் காலையில் முத்து கிரிஷ் வீட்டிற்கு போகிறார். அப்போது கிரிஷ் உடைய பாட்டி கடைக்கு போய் இருக்கிறார். கிரிஷை பார்த்ததும் முத்துவும் மீனாவும் அவருடன் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் கிரிஷின் பாட்டி வந்து இவர்களின் காரை பார்த்ததும் முத்துவும் மீனாவும் வந்திருக்காங்க போல என்று பயந்து கொண்டே வீட்டிற்குள் வருகிறார்.
அவரிடம் முத்துவும் மீனாவும் கொலுவிற்கு வரச் சொல்லி கேட்கிறார். அதற்கு ரோகிணியின் அம்மா நான் வரல உங்க அம்மா திட்டுவாங்க என்று சொல்கிறார். ஆனாலும் முத்துவை மீனாவும் நீங்க கண்டிப்பா வரணும் என்று விடாப்பிடியாக சொல்ல வேறு வழி இல்லாமல் ரோகிணியின் அம்மாவும் கொலுவிற்கு கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications