சிறகடிக்க ஆசை: ரோகிணியின் பிளான் படி பேசிய அம்மா.. எல்லாம் உன்னால்தான், அதிர்ச்சி கொடுத்த மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் ஐந்தாம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியின் மகன் க்ரிஷை தத்தெடுக்கும் முடிவை சொன்ன முத்து, மீனாவிற்கு ரோகிணியின் அம்மா அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் முத்துவும், மீனாவும் ரோகிணியின் அம்மாவையும் பையனையும் கொலுவிற்கு கூப்பிடுகின்றனர். முதலில் ரோகிணியின் அம்மா வரல என்று சொல்ல பிறகு ரொம்பவும் வற்புறுத்தியதால் சரி என்ற கிளம்புகிறார். பிறகு ரூமிற்கு வந்து ரோகிணிக்கு போன் போடலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மனோஜ் கடைக்கு போகாமல் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து ரோகிணி பிசினஸ் டைம்ல இப்படி தூங்கிட்டு இருக்க என்று திட்டுகிறார்.

அதற்கு மனோஜ் எல்லாம் உன்னால தான் நான் டான்ஸ் ஆட மாட்டேன்னு சொன்னேன் நீதானே என்னை டான்ஸ் ஆடி டயர்ட் ஆக்கிட்ட என்று சொல்ல, அதற்கு ரோகிணி போய் முகம் கழுவிட்டு வா என்று மனோஜ் அனுப்பி வைக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணியின் அம்மா போன் பண்ணி இருக்கிறார். அப்போது என்ன விஷயம் என்று ரோகிணி கேட்டதும் எனக்கு பயமா இருக்குடி என்று சொல்ல உடம்பு முடியலயா என்று ரோகிணி கேட்க, அதெல்லாம் ஒன்னும் இல்ல முத்துவும் மீனாவும் வந்திருக்காங்க என்று சொன்னதும் ரோகிணி அவர்களுக்கு வேற வேலையே இல்லையா என்று கோபப்படுகிறார்.
அதற்கு ரோகிணியின் அம்மா, உங்க வீட்டில கொலு வைத்திருப்பதாகவும் அதுக்கு கூப்பிட வந்திருக்காங்க என்று சொல்கிறார். அதற்கு சிறிது நேரம் யோசித்த ரோகிணி கிளம்பி வாங்க என்று சொல்லிவிடுகிறார். நிஜமாகவே நாங்கள் வரட்டுமா என்று அவங்க அம்மா கேட்க நான் சொல்றதை மட்டும் சொல்லுங்க என்று ஒரு ரோகிணி ஒரு பிளான் போட்டு கொடுக்க சரி என்று அவருடைய அம்மாவும் சொல்லி விடுகிறார்.
பிறகு கொலு ஏற்பாடுகளை விஜயா செய்து கொண்டிருக்கும் போது அண்ணாமலை இடம் இந்த மீனா பண்றது ஒன்னும் சரியில்லை, கொலு வைக்கும் போது நானே எல்லா வேலையும் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு இப்போ எங்க போனான்னு தெரியல என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு அண்ணாமலை அவ தானே 8 நாளும் விழுந்து விழுந்து வேலை செஞ்சா ஒரு நாள் செய்ய உனக்கு கஷ்டமா என்று அனுப்பி வைக்கிறார்.

பிறகு ரோகிணி சர்க்கரை பொங்கல் செய்து கொண்டிருக்கும் போது வித்யா இன்னைக்காவது முத்துவோட போனை எடுத்துடுவியா என்று கேட்க, அது ஒரு பக்கம் இருக்கட்டும் அதைவிட வேற ஒரு பிளான் போட்டு இருக்கிறேன் இன்னைக்கு அவங்க அசிங்கப்பட போறாங்க என்று சொல்கிறார். என்னடி என்ன சொல்ற என்று கேட்க, நீயே பார்த்துக்கொள் என்று பிளானை சொல்லாமல் இருக்கிறார்.
பிறகு முத்து வீட்டிற்கு வந்ததும் எங்கடா போயிருந்த என்று கேட்க, அதற்கு முத்து கெஸ்ட்டை கூப்பிட போயிருந்தேன் என்று சொல்கிறார். யாரு சினிமா நடிகர்கள் யாரும் வராங்களா? என்று நீ கேட்க, கிருஷ்ணர் கூப்பிட போயிருந்தேன் என்று முத்து சொல்ல கிருஷ்ணன் உங்க சொந்தக்காரரா மீனா என்று கேட்க இல்லம்மா கடவுள் கிருஷ்ணர் என்று கிருஷ்ணரை கூப்பிட அனைவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

அப்போது கிரிஷ் கிருஷ்ணர் வேஷத்தில் வீட்டிற்குள் வருகிறார். அதை பார்த்து விஜயா இவங்களையெல்லாம் கூப்பிட வேண்டாம்னு சொன்னா இந்த மீனா கேட்கவே மாட்டா என்று திட்டுகிறார். வித்யா ரோகிணியிடம் இந்த பையன் அழகா இருக்கானே என்று சொல்ல, ரோகிணியும் ஆமாம் என்று சொல்கிறார். மனோஜ் இந்த பையனுக்கு கெட்டப் நல்லாவே இல்லை என்று சொல்ல நல்லா தான் இருக்கு போடா உன் வேலையை பாரு என்று அனுப்பி வைக்கிறார்.
பிறகு விஜயா தீபாரதனை காட்ட அனைவரும் சாமி கும்பிடுகின்றனர். முத்து கிரிஷ் கையால் எல்லோருக்கும் பிரசாதம் கொடுக்கலாம் என்று அண்ணாமலை இடம் முதலில் கொடுக்க அவர் வாங்கிக் கொள்கிறார். விஜயாவிடம் கொடுக்க விஜயா அப்புறமா சாப்பிடுறேன் என்று சொல்லிவிடுகிறார். ரோகிணியிடம் கிரிஷ் போக அவரை கட்டிப்பிடித்து கண்கலங்குகிறார். இதை அனைவரும் பார்த்துவிட மனோஜ் ஏன் ரோகிணி ரொம்ப எமோஷனலா இருக்கா என்று கேட்க, அதற்கு விஜயா இது கூட உனக்கு தெரியாதா ரோகிணி வயிற்றில் கரு உண்டாகி கலைஞ்சு போயிடுச்சுல்ல அந்த ஞாபகம் வந்திருக்கும் என்று சொல்ல, அதற்கு ரோகிணி ஆமாம் ஆண்டி என்று சமாளிக்கிறார்.

பிறகு கிரிஷை உட்கார வைத்து முத்து கிருஷ்ணர் பாட்டு பாட சொல்ல மீனா ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ என்ற பாட்டை பாடுகிறார். பிறகு எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது முத்து நீ இந்த வீட்டுக்கு வந்ததால ரொம்ப சந்தோஷம் நீ எங்க கூடவே இருந்துடுறியா? நான் இங்கே ஒரு ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்கிறேன் என்று சொல்ல ரோகிணி அவங்க அம்மாவிடம் கண்ணை காட்டுகிறார்.
உடனே ரோகிணி அம்மா கோபப்பட்டு நிறுத்துப்பா என்று சத்தம் போடுகிறார். நானும் எவ்வளவு தூரம் பொறுமையாக இருக்கிறது அவனை இங்க வர வச்சி ஆசை வார்த்தை காமிச்சு அவன் மனசை ஏன் குழப்புறீங்க? அவன் ஒன்னும் அனாதை கிடையாது. அவனுக்கு பாட்டி நான் இருக்கிறேன் என் பொண்ணு இருக்கா அம்மான்னு. நீங்க எதுக்கு சும்மா தத்து எடுக்கறத பத்தி பேசிட்டு இருக்கீங்க என்று சொல்ல இதுக்கு ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க என்று அண்ணாமலை கேட்கிறார்.
இதை பத்தி பேசும் போது நான் எதுவும் பேசக்கூடாது அமைதியா இருக்கிறேன் ஆனா நீங்க அவனை தத்தெடுக்கிற விஷயத்தை பற்றி அடிக்கடி பேசுறீங்க என்று கோபப்படுகிறார். அதோடு க்ரிஷை கூட்டிக்கொண்டு கிளம்பும்போது மீனா தடுத்து சாப்பிட்டு விட்டு போங்க என்று சொல்ல, எனக்கு உங்க சாப்பாடு ஒன்னும் தேவை இல்லை நீங்க இனி எங்க வீட்டு பக்கம் வந்திராதீங்க என்று அவர்களை அசிங்கப்படுத்திவிட்டு செல்ல மீனா அழுது கொண்டிருக்கிறார். அதை பார்த்து விஜயா சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications