சிறகடிக்க ஆசை: விஜயாவை போலவே மாட்டும் ரோகிணி.. முத்து மறைக்கும் ரகசியம்.. செம டுவிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் அக்டோபர் ஐந்தாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
இதில் ரோகினி வேலை பார்க்கும் இடத்திற்கு விஜயா வந்ததால் ரோகினி பிரச்சனையில் மாட்டுகிறார்.

அதே நேரத்தில் ரவி திருமண விஷயத்தில் முத்து சில உண்மைகளை மறைக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோட்டை ஆரம்பத்தில் மீனா தன்னுடைய அறையில் துணி மடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் முத்து அவருக்கு உதவி செய்து கொண்டு, ரவி இந்த சம்பந்தம் கைவிட்டு போனதால் கவலையா இருக்கானா? என்று விசாரிக்க அதற்கு மீனா இல்ல அவர் அப்படி கவலைப்பட்ட மாதிரி தெரியல. ரெஸ்டாரன்ட் கிளம்பி போயிட்டாரு என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து முத்து ரவிக்கும் உன்ன மாதிரியே ஒரு நல்ல பொண்ணு கிடைக்க வேண்டும். நான் சந்தோஷமா இருக்கிற மாதிரி அவனும் சந்தோஷமாக இருக்கணும். அது மட்டும் இல்லாம என் மனசுல ஒரு பொண்ணு இருக்கு. அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டா ரவியோட வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும் என்று முத்து சொல்ல, மீனா அது யார் என்று கேட்க நேரம் வரும்போது சொல்றேன் என்று சவாரிக்கு கிளம்பி போகிறார்.

அடுத்ததாக ரவி ரெஸ்டாரண்டில் இருக்க அங்கு வரும் ஸ்ருதி ரவியை வெளியே கூட்டிட்டு போயி நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று கேட்க அதைக் கேட்ட அதிர்ச்சியில் ரவி என்ன இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேப்ப போல என்று சொல்ல, அதற்கு ஆமாம் என்று தன் வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்த்ததை பற்றி ஸ்ருதி சொல்ல அதற்கு ரவி எங்க வீட்டிலயும் எனக்கு பொண்ணு பார்த்தாங்க என்று சொல்ல அப்போ நம்ம சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாம் என்று ஸ்ருதி பேசிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு ரவி இல்ல அவசரப்படாத பொறுமையா இரு என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு ஸ்ருதி இனி உன்கிட்ட பேசிகிட்டு இருந்தா ஒன்னும் ஆகாது என்று சொல்லி பேச வேண்டிய இடத்தில் பேசிக்கிறேன் என்று கோபமாக அங்கிருந்து கிளம்பி போகிறார். அதை தொடர்ந்து ரோகினி பியூட்டி பார்லருக்கு விஜயா அங்கு வர போர்டில் வேறு பெயர் இருப்பதை பற்றி கேள்வி கேட்க, அதற்கு பெயிண்ட் அடிப்பதாக சொல்லி சமாளிக்கிறார். பிறகு விஜயா தனக்கு தலை வலிக்குது என்று சொல்ல ரோகினி மசாஜ் செய்து கொண்டிருக்கிறார். அப்போது பியூட்டி பார்லர் ஓனர் அங்கு வந்து விடுகிறார்.
இதனால் ரோகிணி விஜயாவின் கண்ணில் வெள்ளரிக்காயை வைத்துவிட்டு வெளியே வந்து ஓனரிடம் அக்கவுண்ட் காட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் விஜயா அங்கே வந்து விடுவாரோ என்று பதட்டத்தில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைந்தது.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications