சிறகடிக்க ஆசை: தனி குடித்தனம் போகும் ரோகிணி.. முத்துவிடம் மீனா சொன்ன ரகசியம்..பிரிய போகும் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் ஆறாம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஸ்ருதியும் ரவியும் காதலிக்கும் விஷயத்தை பற்றி ஸ்ருதி மீனாவிடம் பேசுகிறார்.

இதைப் பற்றி மீனா முத்துவிடம் பேச முத்து அதற்கு கோபத்தில் திட்டுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பியூட்டி பார்லருக்கு வந்திருந்த விஜயாவிற்க்கு உண்மை தெரியாமல் கஷ்டப்பட்டு ரோகினி மறைத்து விடுகிறார். அதே நேரத்தில் வீட்டில் மீனா தனியாக இருக்கும்போது ஸ்ருதி அங்கு வந்து ரவியும் நானும் காதலிக்கிறோம் என்ற விஷயத்தை சொல்ல மீனா அதிர்ச்சி அடைகிறார். இத மட்டும் அத்தை கேட்டா அவ்வளவுதான் என்று ஸ்ருதியை மீனா ரூமுக்கு அழைத்து சென்று பேசுகிறார்.
இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் கொஞ்சம் பொறுமையாக இருங்க என்று மீனா சொல்ல ஆனால் ஸ்ருதி எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க பொறுமையா இருக்க முடியாது. நீங்களும் ரவி மாதிரியே பேசாதீங்க. நான் உங்களுக்கு உதவி செஞ்சு இருக்கேன். அதனால நீங்க எனக்கு எப்படியாவது உதவி செய்யுங்க. நீங்கதான் வீட்டில் பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்.

இல்லன்னா நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி விடுவோம் என்று மிரட்டுகிறார். அதைக் கேட்டு பயந்து போன மீனா அப்படியெல்லாம் செஞ்சு விடாதீங்க ஏற்கனவே ரெண்டு கல்யாணம் எப்படியோ நடந்து போச்சு இந்த கல்யாணமாவது நல்ல படியா நடக்கணும். மாமாவுக்கு இது தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவாரு என்று சொல்லி, சரி நான் வீட்டில் பேசுகிறேன் என்று ஸ்ருதியை சமாதானப்படுத்தி மீனா அனுப்பி வைக்கிறார்.
அந்த வீட்டிற்கு அந்த நேரத்தில் பியூட்டி பார்லரில் இருந்து விஜயாவும் ரோகினியும் வீட்டிற்கு வருகின்றனர். வீட்டில் ஹாலில் பூவெல்லாம் கொட்டி கிடக்க மீனா தனியாக ரூமில் இருந்து ஸ்ருதி உடன் பேசிக்கொண்டு வருவதை பார்த்து இது யாரா இருக்கும் என்று விஜயா யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரோகிணி எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு என்று சொல்ல இது பூ வாங்க வரும் போது ஏதாவது பழக்கம் ஆன பொண்ணா இருக்கும் என்று விஜயா கண்டுகொள்ளாமல் விடுகிறார்.
அதை தொடர்ந்து ஸ்ருதி வீட்டிற்கு வர அங்கு தன்னுடைய அம்மா அப்பா அவரிடம் சண்டை போடுகின்றனர். அப்போது எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல என்று சொல்லி அதை பற்றி எங்களது கவலை இல்லை கண்டிப்பா இந்த கல்யாணம் தான் நடக்கும் என்று அவருடைய பெற்றோர் அதிர்ச்சி கொடுக்கின்றனர். அதோடு இனிமேல் டப்பிங் பேசக்கூடாது மாப்பிள்ளைக்கு அது புடிக்கல என்றும் தடை போடுகின்றனர். அதே நேரத்தில் முத்து வீட்டிற்கு வந்ததும் மீனா, ஸ்ருதி ரவியை காதலிப்பதாக சொல்ல முத்து கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications