சிறகடிக்க ஆசை: சத்யாக்கு வந்த பிரச்சனை.. முத்து சொன்ன வார்த்தை.. ரோகிணிக்கு எதிராக மாறிய அம்மா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் ஏழாம் தேதிக்கான எபிசோடில் ரோகிணிக்கு எதிராக அவருடைய அம்மா பேசுகிறார். அதுபோல சத்யாவிற்கு காலேஜில் பிரச்சனை வருகிறது. அதற்கு முத்து சப்போர்ட்டாக நிற்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரோகிணியின் அம்மா க்ரிஷை தத்து தர முடியாது என்று முத்து மற்றும் மீனாவை திட்டிவிட்டு வீட்டு வாசலில் நின்று கொண்டு அழுது கொண்டிருக்க க்ரிஷ் அவரிடம் ஏன் பாட்டி முத்து மாமாவையும், அத்தையையும் திட்டுனீங்க அவங்க ரொம்ப நல்லவங்க என்று சொல்ல ரோகிணியின் அம்மா எனக்கு வேற வழி இல்ல என்று கண் கலங்குகிறார்.

television siragadikka aasai serial vijay tv

பிறகு மீனா நடந்ததை நினைத்து அமைதியாக நிற்க விஜயா உங்க மருமக ரொம்ப சிறப்பா கொலு நடத்திட்டா என்று நக்கல் செய்ய, அதற்கு அண்ணாமலை நீ எதுவும் தப்பா நினைச்சுக்காதம்மா என்று மீனாவிடம் சொல்லிவிட்டு அவரும் கிளம்புகிறார். பிறகு மறுபக்கத்தில் ரோகினியின் அம்மா நடந்ததை நினைத்து கண்கலங்கி கொண்டிருக்கும் போது வித்யா சாப்பிடுறீங்களா? என்று கேட்க, அதற்கு வேண்டாமா நான் இப்போதான் ரெண்டு மனசை காயப்படுத்திட்டு வந்து இருக்கிறேன் என்று ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கும்போது ரோகிணி வந்து நான் இப்போதான் சந்தோஷமா இருக்கேன் என்று நல்லா சாப்பிட்டு தூங்குவேன் என்று சொல்கிறார்.

அதற்கு ரோகிணியின் அம்மா எனக்கு நல்லது மட்டுமே நினைச்ச மனசை கஷ்டப்படுத்திட்டு எப்படித்தான் உனக்கு நிம்மதியா இருக்க தோணுதோ தெரியல. இன்னைக்கு நானும் உன் மகன் கிருஷும் உயிரோடு இருப்பதற்கு காரணமே அவங்க தான் என்று கோபப்படுகிறார். அதற்கு ரோகிணி என்னோட வாழ்க்கை இப்படி ஆனதுக்கு நீதான் காரணம் என்று சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது வித்யா ரோகிணியை சமாதானம் செய்து அழைத்து செல்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அடுத்ததாக மீனா மாடியில் உட்கார்ந்து தனியாக அழுது கொண்டிருக்கும் போது அங்கு முத்து வருகிறார். உன்னை வீடெல்லாம் தேடிட்டு நான் வந்தேன் நீ இங்கே உட்கார்ந்திருக்க என்று கேட்க, நம்ம மனசு கஷ்டப்படுத்தவே மாட்டாங்கன்னு நினைச்சா ஒருத்தங்க தான் நம்மள அசிங்கப்படுத்தும் போது அதோட வலி மனசு உடைஞ்சு போயிடுதுங்க என்று சொல்லி மீனா அழுது கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனாவும் முத்துவும் என்ன பேசுகிறார்கள் என்று ரோகினி ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்போது முத்து எனக்கு கிரிஷ் பாட்டி பேசினது அவங்க பொண்ணு சொல்லி கொடுத்து தான் அவங்க அப்படி பேசி இருப்பாங்கன்னு தோணுது என்று சந்தேகப்படுகிறார். இதுக்கு மேல நாம கிரிஷை பார்க்க முடியாதா என்று மீனா கேட்க, கண்டிப்பா பார்க்கலாம் கொஞ்ச நாள் போகட்டும் என்று முத்து ஆறுதல் சொல்ல இதைக்கேட்டு ரோகினி இவங்க அடங்கவே மாட்டாங்களா? என்று கோபப்படுகிறார்.

television siragadikka aasai serial vijay tv

அந்த நேரத்தில் அங்கு விஜயா வந்ததும் சிக்னல் இல்லாதது போல நடித்து விடுகிறார். அப்போது விஜயா நான் இன்னைக்கு தான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் என்று சொல்ல, முத்து உங்களுக்கு என்ன பிரச்சனை என்று விஜயாவிடம் கோபப்படுகிறார். அவளே அழுதுட்டு இருக்கா அவ கிட்ட இப்படி பேசுறீங்க என்று ஒரு முத்து கேட்டதும் அதற்கு விஜயா அந்த பொம்பள என்னவோ மகாராணி மாதிரி வந்து நடு வீட்டுல கத்திட்டு போறா.. ஊர் பெயர் தெரியாதவங்களை எல்லாம் வீட்ல சேர்த்தா இப்படித்தான் என்று விஜயா கோபப்பட்டதும் ரோகிணி ஆன்ட்டி என்று கத்துகிறார்.

நம்ம ஏன் அடுத்தவங்களை குறை சொல்லணும்? இவங்க ஏன் குழந்தையை அடாப் பண்ண நினைக்கிறாங்க என்று முத்து மீனா மீது பிரச்சனையை திருப்புகிறார். அடுத்த நாள் காலையில் மீனா அம்மா வீட்டிற்கு வந்து அம்மா அம்மா என்று கூப்பிட சீதா வந்து அம்மா காலையில் கோயிலுக்கு போயிட்டாங்க என்று சொல்லிக்கொண்டு மீனாவின் முகம் வாடி இருப்பதை பார்த்து என்ன ஆச்சு வீட்டில் எதுவும் பிரச்சனையா என்று கேட்க, மீனா ரோகிணியின் அம்மா வீட்டில் பேசியதை பற்றி சொல்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதற்கு சீதா அவங்க இப்படி எல்லாமா பேசுவாங்க? இதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்ற என்று யோசிக்கிறார். உடனே முத்துவிடம் நான் அவங்களுக்கு போன் போட்டு கேட்கட்டுமா என்று கேட்க, போனிலும் திட்டு வாங்குறதுக்கா? அதெல்லாம் தேவையில்லை கொஞ்ச நாள் போகட்டும் என்று முத்து சொல்லிக் கொண்டிருக்கும்போது சத்யா வீட்டிற்கு வருகிறார். இப்ப தான்டா காலேஜ்க்கு போனா அதுக்குள்ள எப்படி வந்த? கட்டடிச்சிட்டியா என்று சீதா கேட்கிறார்.

சத்யா இல்ல எக்ஸாம் எழுத முடியாதுன்னு சொல்லி வெளிய அனுப்பிட்டாங்க என்று சொல்ல, என்ன ஆச்சு திரும்ப ஏதாவது தப்பு பண்ணுனியா என்று சீதா கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல அட்டனன்ஸ் இல்லன்னு எக்ஸாம் எழுத முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டாங்க என்று சத்யா அழுகிறார். அதற்கு சீதா சத்யாவை போட்டு அடித்து இந்த விஷயம் மட்டும் அம்மாவுக்கு தெரிஞ்சா அவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க?

நீ தான் படிச்சு வேலைக்கு போய் குடும்பத்தை பார்க்க போறேன்னு அவங்க நினைச்சிட்டு இருக்காங்க என்று சத்யாவை போட்டு அடிக்க மீனா சீதாவை தடுக்கிறார். அப்போது இனி அவ்வளவுதான் என் படிப்பு போய்விட்டது என்று சத்யா அழுது கொண்டிருக்கும் போது முத்து அழுகையை நிறுத்துடா குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்குற, இப்ப என்னடா நடந்து போச்சு? உனக்கு உங்க பிரின்ஸ்பல் சொன்னா எக்ஸாம் எழுத விடுவாங்களா? என்று கேட்க அதெல்லாம் நடக்கும என்று சத்யா கேட்டதும் நான் நடத்தி காட்டுறேன் என்று முத்து சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+