சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்: கிரிஷால் வெடிக்கும் பூகம்பம்.. வசமாக சிக்கிய ரோகிணி! மீனா கேட்ட கேள்வி
சென்னை: ஆகஸ்ட் 13, 2025: விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் 'சிறகடிக்க ஆசை'சீரியலில், இன்று, கிரிஷின் எதிர்காலம் குறித்த ஒரு பெரிய விவாதம், ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்க வைத்துள்ளது. கிரிஷின் தாயாரைத் தேடும் முயற்சி, ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம், அவனை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று, விஜயாவும், மனோஜும் போடும் திட்டங்கள், குடும்பத்தில் ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிஷ் பாட்டியின் மர்மம்
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், மீனா, முத்துவைக் கூப்பிட்டு, "கிரிஷை ஸ்கூலில் சேர்க்கும்போது, அவனுடைய அம்மாவின் புகைப்படத்தைக் கொடுத்திருப்பார்கள். அங்கே போய் வாங்கலாம்," என்று ஒரு யோசனையைச் சொல்கிறார். அண்ணாமலை, முத்துவைக் கூப்பிட்டு, "கிரிஷின் பாட்டியைக் குறித்த ஏதாவது தகவல் கிடைத்ததா?" என்று கேட்க, முத்து, "அவங்களை காணோம்," என்று சொல்கிறார். பிறகு மீனா சொன்ன ஐடியாவை சொன்னதும் இதுவும் நல்ல ஐடியா தான் நான் கிரிஷை பற்றிய தகவலை ஸ்கூலில் கேட்கிறேன் என்று அண்ணாமலை சொல்கிறார். அப்போது ரோகிணி நல்லவேளை நாம முதலில் போட்டோ கொடுக்காம தப்பிச்சிட்டோம் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார்.
விஜயாவின் கோபம்:
இதைக் கேட்ட விஜயா, "இது சரிவராது. இவனை எங்கேயாவது ஆசிரமத்தில் விடுங்க," என்று கோபமாகப் பேசுகிறார். அதற்கு அண்ணாமலை வழக்கம் போல திட்டி விட்டு ஸ்கூலுக்கு கிளம்புகிறார். அண்ணாமலை, பள்ளியில் விசாரித்து, "கிரிஷின் அம்மா பெயர் கல்யாணி," என்று முத்துக்குச் சொல்கிறார். இதைக் கேட்ட ரோகிணி, அதிர்ச்சி அடைகிறார். ரோகிணியின் முகத்தில் இருந்து, ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது என்பதுபோல் தெரிகிறது.
போட்டோ தேடுதல்
பின்னர், கிரிஷின் பாட்டியின் புகைப்படத்தை, பள்ளியில் இருந்து வாங்கி, எல்லாரும் தேடிப் பார்க்கிறார்கள். "கடைசியில் நான் தான் மாட்டிக்கப் போகிறேன் போல இருக்கு," என்று ரோகிணி தனக்குள்ளேயே பேசிக்கொள்கிறார். கிரிஷ், ரோகிணியிடம், "நான் உன்னோடவே இருக்கவா?" என்று கேட்க, ரோகிணி, "இல்லை கிரிஷ், அது முடியாது," என்று சொல்லிவிடுகிறார்.
மனோஜின் திட்டம்
மறுநாள் காலையில், மனோஜ், எல்லாரையும் அழைத்து, "இனிமேல் இந்த பையன் இந்த வீட்டில் இருக்கக் கூடாது," என்று உறுதியாகச் சொல்கிறார். அதற்கு முத்து, "கிரிஷை எங்கேயும் கொண்டுபோய் விட முடியாது. அவன் இங்கே தான் இருப்பான்," என்று சொல்கிறார். ஆனால், மனோஜ், "நீ மட்டும் முடிவெடுக்கலாமா? நாங்களும் சொல்லணும்," என்று சொல்ல, கிரிஷ் இந்த வீட்டில் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்று, எல்லாரும் வாக்கெடுப்பு நடத்துகிறார்கள். அதற்கு கிரிஷ், "நான் எங்கேயும் போக மாட்டேன். இங்கே தான் இருப்பேன்," என்று சொல்வது, அந்த குடும்பத்திற்குள் ஒரு பெரிய உணர்ச்சிபூர்வமான தருணத்தை ஏற்படுத்துகிறது.
மனோஜ் சொன்னதற்காக ரவியும் ஸ்ருதியும் கைதூக்காமல் நிற்கின்றனர். இதனால் முத்து உங்களுக்கு என்ன ஆச்சுடா என்று கேட்கிறார். பிறகு மனோஜ் இந்த பையனை வீட்டை விட்டு அனுப்புவதற்கு யாரெல்லாம் ஓட்டு போடுறாங்க என்று கேட்டதும் மனோஜும் விஜயாவும் கையை தூக்குகின்றனர். ரோகிணி மெல்ல மெல்ல கை தூக்க அதை பார்த்து கிரிஷ் அதிர்ச்சி அடைகிறார்கள். ரோகிணி கையை பிடித்துக்கொண்டு நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் ஆன்ட்டி என்று அழுது கொண்டிருக்கிறான். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications