Siragadikka Aasai : கிரிஷ் விஷயத்தில் மீனா கண்டுபிடிக்கும் உண்மை! பதட்டத்தில் ரோகிணி! விஜயா எடுக்கும் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை, ஆகஸ்ட் 15, 2025: விஜய் தொலைக்காட்சியில், ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலான 'சிறகடிக்க ஆசை'யில், இன்று, கிரிஷ் காணாமல் போனது குறித்த ஒரு பெரிய மர்மம், விலகத் தொடங்கியுள்ளது. கிரிஷை, வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற மனோஜ், விஜயாவின் திட்டம், ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம், முத்து, கிரிஷை தேடி, அலைகிறார். இதனால், ரோகிணி, ஒரு பெரிய பதட்டத்தில் இருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணியின் திட்டம்

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், ரோகிணி, கிரிஷை, வித்யா வீட்டுக்கு அழைத்து வருகிறார். வித்யா, "நான் ஒரு வாரம் தான் பார்ப்பேன். இல்லைனா, திருப்பி, உங்க வீட்டிலேயே விட்டுடுவேன்," என்று சொல்ல, ரோகிணி, "இல்லை, அதுவரைக்கும் எல்லாம் விட மாட்டேன். நானே பார்த்துக் கொள்கிறேன்," என்று சொல்லிவிட்டு, கிரிஷை, அங்கேயே விட்டுவிட்டு, செல்கிறார். கிரிஷ், "இல்லைம்மா, நான் வீட்டுக்கு வரணும். உங்க கூட தான் இருப்பேன்," என அடம் பிடிக்க, ரோகிணி, "நான் ஒரு வாரம் கழிச்சு, கூட்டிட்டு போயிடுறேன்," என சொல்லி, சமாதானப்படுத்திவிட்டு, வருகிறார். அதற்கு வித்யா நீ இப்ப கூட உன்னுடைய பையனுடைய உணர்வுகளை புரிஞ்சிக்க மாட்டேங்குற உன்னுடைய சந்தோஷத்தை மட்டும் தான் பாக்குற என்று திட்டுகிறார். ஆனால் ரோகினி வழக்கம் போல சமாளித்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்

கிரிஷை தேடி அலையும் முத்து

மறுபக்கம், விஜயா, மனோஜ் பேசிக் கொண்டிருக்க, அண்ணாமலை, 'ஸ்நாக்ஸ்' வாங்கி கொண்டு வந்து, "கிரிஷ் வந்தவுடன், எடுத்துக் கொடும்மா," என்று, மீனாவிடம் சொல்லுகிறார். அப்போது, முத்து, சோகமாக, வீட்டுக்கு வர, "கிரிஷை கூட்டிட்டு வர போகலையா?" என்று, அண்ணாமலை கேட்கிறார். முத்து, "அவன், ஸ்கூல்ல இல்லைப்பா. விசாரிச்சப்போ, அவங்க அம்மா வந்து, கூட்டிட்டு போயிட்டதா சொல்றாங்க," என்று சொல்ல, உடனே, விஜயா, சந்தோஷப்படுகிறார். ஆனால், மீனா, "அது எப்படி, அவங்க வந்து, ஒரே நாள்ல கூட்டிட்டு போக முடியும்? அதுவும் இல்லாம, அவங்க பாட்டி, சீரியஸா இருக்காங்கன்னு சொல்றாங்க. ஆனா, இப்ப, அவங்க நல்லா தானே இருக்காங்க," என்று, சந்தேகம் எழுப்புகிறார்.

ரோகிணியின் அதிர்ச்சி:

"என்னோட நம்பர், கிரிஷ் கிட்ட இருக்கு. நம்ம, இத்தனை நாளா, பார்த்துக் கிட்டதுக்காக, அவங்க வந்து, நம்ம கிட்ட பேசாம, கூட போயிருப்பாங்க," என்று, மீனா, சொல்ல, "நீ சொல்றதும், கரெக்ட் தான் மீனா," என்று, முத்து, அதற்கு, ஆதரவு தெரிவிக்கிறார். "முதல்ல, இவ்வளவு வேகமா வந்து, கூட்டிட்டு போன, அந்தப் பெண்ணைக் கண்டு பிடிக்கணும்," என்று, முத்து, சபதம் செய்ய, அதைக் கேட்டு, ரோகிணி, அதிர்ச்சி அடைகிறார்.

விஜயா - பார்வதி - சிந்தாமணி சந்திப்பு

விஜயா, பார்வதி வீட்டுக்கு வந்து, பேசிக் கொண்டிருக்க, பார்வதி, "டான்ஸ் கிளாஸ் இருக்கிற வரைக்கும், 'டைம் பாஸ்' ஆச்சு. இப்போ, 'போர்' அடிக்குது. ஏதாவது, நாம, புதுசா, 'பிசினஸ்' ஸ்டார்ட் பண்ணலாம். 'எம்பிராய்டிங்' போடலாமா?" என்று கேட்க, விஜயா, "அதெல்லாம் வேண்டாம்," என்று சொல்கிறார். "நான் தான், 'யோகா கிளாஸ்' ஆரம்பிக்கலாம் என்று சொன்னல்ல," என்று, விஜயா சொல்ல, "சரி, எப்போ ஆரம்பிக்கலாம்?" என, பார்வதி கேட்கிறார். அவர்கள், பேசிக் கொண்டிருக்கும்போது, 'காளிங் பெல்' சத்தம் கேட்கிறது. பார்வதி, போய் திறந்து பார்க்க, சிந்தாமணி வருகிறார்.

அடுத்த எபிசோடில், மூவரும், என்ன பேசிக் கொள்கின்றனர்? சிந்தாமணி, என்ன சொல்லுகிறார்? அதற்கு, விஜயாவின் பதில் என்ன? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+