சிறகடிக்க ஆசை: ஏமாந்த மீனாவிற்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்.. விஜயாவுக்கு ஆப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை மார்ச் 13ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஏமாந்த மீனாவிற்கு அண்ணாமலை சூப்பர் அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் இரண்டு வாரங்களாக மீனாவும் முத்துவும் அடுத்தடுத்து முன்னேறுவது போன்று கதை போய்க் கொண்டிருந்தது. இதை பார்க்கும் ரசிகர்கள் பரவாயில்லையே கதை இப்பொழுது சூடு பிடிக்க தொடங்கிவிட்டது என்று நினைத்த நேரத்தில் மீனாவிற்கு அடுத்த பிரச்சனையையும் கொடுத்துவிட்டார் இயக்குனர்.

பாவம் மீனா
அதாவது மீனா 2 லட்சம் ஏமாந்து போனது போன்று கதையை கொண்டு போயிருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் சிந்தாமணி. அதுபோல என்னதான் ரோகிணி ஏமாற்று வேலைகள் செய்து கொண்டிருந்தாலும் அவர் மட்டும் ஒவ்வொரு முறையும் தப்பி விடுகிறார். ஆனால் அடுத்தவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மீனாவிற்கும் முத்துவுக்கு மட்டும் பிரச்சனை மேல் பிரச்சினை வருகிறது.
ஏமாற்றும் மேனேஜர்
அதுபோல விஜயா மீனாவை வளர விடக்கூடாது என்பதற்காக செய்யும் சூழ்ச்சிகளை பார்த்து அதிகமான ரசிகர்கள் விஜயாவையும் திட்டி வருகிறார்கள். இன்றைய எபிசோடில் மீனா மண்டபத்து மேனேஜர் தன்னிடம் 25,000 தந்துவிட்டு 2 லட்சம் கொடுத்து விட்டதாக பொய் கையெழுத்து வாங்கி வைத்திருக்கிறார் என்று மண்டபத்து ஓனரை சந்தித்து சொல்ல அதற்கு அவரும் கண்டுகொள்ளாமல் போய்விடுகிறார்.

சந்தோஷத்தில் சிந்தாமணி
இதனால் ஏமாந்து போயிருக்கும் மீனா பற்றி சிந்தாமணி விஜயாவுக்கு போன் பண்ணி சொல்ல விஜயா ரவியை ரெஸ்டாரண்டில் இருந்து விதவிதமான சாப்பாடு கொண்டு வரச் சொல்லி சாப்பிட்டு சந்தோஷப்படுகிறார். ஆனால் மீனா சோகமாக இருக்கிறார். இன்றைய எபிசோடு ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். ஆனால் நாளை எபிசோடுக்கான ப்ரோமோ இப்போது வெளியாகி இருக்கிறது.
உண்மையை மறைக்கும் மீனா
அதில் துவண்டு போய் இருக்கும் மீனாவிற்கு அண்ணாமலை சூப்பர் அட்வைஸ் கொடுக்கிறார். அதாவது தான் ஏமாற்றப்பட்டு இருக்கும் விஷயத்தை சொன்னால் முத்து மேனேஜரை போய் அடிப்பார் என்ற பயத்தில் மீனா இருக்கிறார். ஸ்ருதியிடமும் உண்மையை சொல்லாமல் மறைக்கிறார். இந்த நிலையில் அண்ணாமலை வீட்டிற்கு வந்து பேசும்போது ஒருவர் தனக்கு கொடுத்த பணத்தில் ஒரு தாள் கிழிந்து இருந்தது, அதை அடுத்த நாள் நான் கொண்டு போய் அவரிடம் கொடுத்தேன் இது உங்களிடம் வாங்கியது என்று சொன்னதுக்கு அவர் முடியாது என்று சொல்லிவிட்டார்.

அண்ணாமலை அட்வைஸ்
பிறகு அதை சலோடேப் போட்டு ஒட்டி அடுத்த நாள் மடித்து கொடுத்தேன் அதை வாங்கி விட்டார். என்ன ஏமாற்றியவரை நான் ஏமாற்றிவிட்டேன் என்று சொன்னார். இதைக் கேட்டு மீனா மாமா சொன்னது போல தான் நானும் இனி அந்த மேனேஜர் வாயில இருந்து உண்மையை வர வைக்க வேண்டும். அதற்கு பிளான் போடணும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
விஜயாவுக்கு பிரச்சனை இருக்கு
இது பற்றி மீனா தன்னுடைய அம்மா மற்றும் தங்கை சீதாவிடமும் சொல்லி இருக்கிறார். அவர்களும் மீனாவிற்கு ஹெல்ப் பண்ணுகிறோம் என்று சொல்கிறார்கள் . அதைத்தொடர்ந்து இதற்கு ஸ்ருதியிடம் மீனா சம்மதம் கேட்கிறார். இதனால் மேனேஜர் பற்றிய உண்மைகள் வெளிவரும். மேனேஜர் சிந்தாமணி சொல்லி தான் இப்படி நடந்து கொண்டார் என்று மீனா எல்லோருக்கும் நிரூபித்து விஜயா முகத்தில் கரியை பூச போகிறார் என்று தெரிகிறது.

-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications