சிறகடிக்க ஆசை: முத்து மீனாவிற்கு சீதா கொடுத்த அதிர்ச்சி.. மனம் மாறும் அருண்? இனி தான் சம்பவமே இருக்கு
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சீதா அருணை காதலிக்கும் விஷயம் முத்து மீனாவிற்கு தெரிகிறது. அருணை பார்த்ததும் முத்துவும் மீனாவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து அடுத்து இனி தான் பஞ்சாயத்தே வரப்போகிறது. ஏற்கனவே ரோகிணி சிட்டியிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கி இருக்கிறார். அதையும் விஜயாவிற்கு கொடுத்திருக்கிறார். விஜயாவின் மனதை மாற்றுவதற்காக ரோகிணி எடுத்த முடிவு இனி ரோகிணிக்கு ஆப்பு வைக்க போகிறது என்று தான் தெரிகிறது. சிட்டியிடம் ஒருவர் திருட்டு நகையை கொடுத்திருக்கிறார். அதை குறைந்த பணம் கொடுத்து ரோகிணியும் வாங்கி இருக்கிறார்.

அருணோடு பிரச்சனை
ஆனால் இனி போலீஸ் விசாரணை வரும்போது விஜயாவுக்கு பிரச்சனை வரும், இல்லையென்றால் இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காக மீண்டும் அந்த நகையை ரோகிணி திருடுவார். அப்போது விஜயாவால் குடும்பத்தில் பிரச்சினை நடக்கும். ஏற்கனவே விஜயா ரோகிணியை மதிக்காமல் இப்போது திட்டிக் கொண்டே இருக்கிறார். இப்போது எடுத்த முடிவால் மீண்டும் பிரச்சனை தான் வரப்போகிறது.
சீதாவின் காதல்
இது ஒரு பக்கம் இருக்கும் போது முத்துவுக்கும் போலீஸ்காரர் அருணுக்கும் ஆரம்பத்தில் இருந்தே முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. இருவருக்கும் ஈகோ தலை தூக்கி இருக்கும் நிலையில் ஒருவரை ஒருவர் மாட்டி விடுவதற்கும், ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்துவதற்கும் தான் இருவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான்தான் இந்த ஊரிலேயே நேர்மையானவன் என்று சொல்லிக் கொண்டிருந்த அருண் முத்துவை பழிவாங்க அவர் மீது பொய்யான வழக்கு போட்டிருந்தார். கடைசியில் அது அவருக்கு ஆப்பு வைத்திருக்கிறது.
முத்துவுக்கு தெரிந்த உண்மை
அதேபோல ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த சம்பவமும் இப்போது நடந்திருக்கிறது. அதாவது சீதா அருணை காதலிக்கும் விஷயம் முத்துவிற்கும் மீனாவிற்கும் எப்போது தெரியும் என்று எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்காக தான் இப்போது வெளியான ப்ரோமோ மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதில் முத்துவிடம் மீனா, சீதா காதலிக்கும் விஷயத்தை சொல்கிறார். அதோடு நாம அந்த நபரிடம் பேசி ஓகே சொன்னாதான் சீதா கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லி இருக்கா என்று சொன்னதும் முத்துவும் சரி என்று கிளம்பி போகிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
எல்லோரும் கோவிலில் சந்திக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். அப்போது அருண் மற்றும் சீதாவை பார்த்ததும் முத்துவும் மீனாவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இனி செய்த தப்புக்கு அருண் மனம் இறங்கி முத்துவிடம் மன்னிப்பு கேட்பாரா? அல்லது மீண்டும் பிரச்சனை செய்வாரா? என்ற கேள்விகளும் எழுகிறது. ஒவ்வொரு இடத்திலும் தன்னுடைய அக்கா மாமா பற்றி சீதா பெருமையாக சொல்லி இருக்கிறார். ஆனால் முத்துவை தவறாக புரிந்து கொண்டிருக்கும் அருண் முத்துவை வில்லனாகவே பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் நாளைய எபிசோடில் தரமான சம்பவம் இருக்கிறது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications