Siragadikka Aasai Promo: முத்துவிடம் உண்மைய உளறிய கிரிஷ்! ஒரு வழியாக சிக்கிய ரோகிணி.. மீனா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கிரிஷ் தன்னுடைய அம்மாவின் பெயரை சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் கிரிஷுடைய ஸ்கூலில் முத்து மற்றும் மீனாவிடம் ரோகிணியின் தோழி வசமாக சிக்கி இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறக்கடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போது குடும்பத்தில் மாட்டுவார் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஆனால் அவர் பணக்கார வீட்டு பொண்ணு இல்லை என்ற ஒரு உண்மை மட்டும் தான் இப்போது குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. அதை தொடர்ந்து அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கிரிஷ் என்ற மகன் இருக்கும் உண்மை இன்னும் குடும்பத்திற்கு தெரியாமல் தான் இருக்கிறது. கிரிஷ் மீண்டும் மீண்டும் முத்து மீனாவிடம் அடைக்கலம் தேடி வந்து கொண்டு இருக்கிறார்.
மீண்டும் அதே காட்சி
ஒவ்வொரு முறையும் கிருஷ் வரும்போது கிரிஷுடைய அம்மா யாராக இருக்கும் என்ற பில்டப் காட்சிகளுடன் முத்துவும் மீனாவும் யோசிப்பார்கள். ஆனால் அடுத்த வாரமே அதை பற்றி மறந்து விடுவார்கள். இதுதான் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது ரோகிணி தான் கிரிஷ் உடைய அம்மா என்று தெரிவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதாவது ரோகிணியின் பிரண்டு ஒருவர்தான் கிரிஸ் உடைய கார்டியன் என்று கிரிஷை ஒரு ஸ்கூலில் சேர்த்து இருக்கிறார்கள். ஆனால் அந்தப் பெண்ணை மீனா ஒரு முறை ரோகினியின் பிரண்டு வித்யா வீட்டில் பார்த்திருக்கிறார்.
க்ரிஷ் செய்த சம்பவம்
இப்படியான நிலையில் இப்போது ஸ்கூலில் ஒரு பையன் கிரிஷிடம் உனக்கு அம்மா இல்லையா என்று கேட்டு கிண்டல் பண்ணி அசிங்கப்படுத்தினான். இதனால் கோபமான க்ரிஷ் அதில் ஒரு பையனை அடித்து இருக்கிறான். இதற்கு ஹெட் மாஸ்டர் உன்னை இன்று போலீஸ் வந்து அரெஸ்ட் செய்யும் என்று மிரட்டி இருந்தார். இதனால் பயந்து போன கிரிஷ் அங்கிருந்து ஓடி ஒரு காரில் வந்து ஏறி இருந்தார். அது முத்து உடைய கார் என்று கிரிஷ்க்கு தெரியாது.
இன்றைய எபிசோடில் முத்து காரை திறந்து பார்க்கும்போது கிரிஷ் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகுகிறார். பிறகு கிரிஷை ஹாஸ்பிட்டல்க்கு கொண்டு சேர்க்க கிரிஷ் உடைய அம்மாவின் பெயர் என்னவென்று கேட்கும் போது அவன் கல்யாணி என்று சொல்லி இருக்கிறார். பிறகு தான் படித்துக் கொண்டிருக்கும் ஸ்கூல் பெயரை சொன்னதும் முத்துவும் மீனாவும் அந்த ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகின்றனர்.
முத்துக்கு தெரிந்த உண்மை
நாளைக்கான ப்ரோமோவில் ஸ்கூலில் மீனாவிற்கு டெக்கரேஷன் ஆர்டர் கொடுத்த மேனேஜரிடம் மீனா நடந்த விஷயத்தை சொன்னதும் அவர் கிரிஷ் உடைய கார்டியனுக்கு போன் செய்து கூப்பிடுகிறார். நடந்த விஷயத்தை சொல்லாமல் கூப்பிட்டதும் கிரிஷ் உடைய கார்டியன் அங்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் மீனா நீங்கதான் கிரிஷ் கார்டியனா என்று கேள்வி கேட்கிறார். அடுத்ததாக ரோகிணி தான் இவருடைய அம்மா என்று கார்டியன் சொல்லப் போகிறாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்போடு ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. இதனால் அடுத்த வாரம் பெரிய சம்பவம் காத்திருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications