சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி.. சந்தோஷத்தில் அண்ணாமலை.. விஜயாவிற்கு கிடைத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனாவிற்கு இரண்டு லட்சத்திற்கான புதிய ஆர்டர் கிடைத்திருக்கிறது. அந்த சந்தோஷத்தை மீனா குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்கிறார். ஆனால் சிந்தாமணி விஜயாவிடம் ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொல்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் பல மாதங்களாகவே ரோகிணி எப்போது மாட்டுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை ராஜா என்று இயக்குனர் ஒவ்வொரு வாரமும் கதையை லாவகமாக திருப்பிக் கொண்டிருக்கிறார். ப்ரோமோவில் மட்டும் ரோகிணிக்கு பிரச்சனை வருவது போல இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காட்டிவிடுகிறார்கள். ஆனால் கடைசியில் ஒவ்வொரு முறையும் ரோகிணி தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

முத்து மீனாவிற்கு மட்டும் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. சில வாரங்கள்தான் முத்து மற்றும் மீனா அடுத்தடுத்து ஜெயிப்பது போன்று கதை நகர்ந்துக்கொண்டிருந்தது ஆனால் இப்போது மீனாவிற்கு பிரச்சனை வருவது போன்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதாவது தற்போது வெளியான ப்ரோமோவில் ரோகிணி மீனா வீட்டிற்கு சந்தோஷமாக வருகிறார். அது பற்றி முத்து விசாரிக்கிறார்.

அப்போது நமக்கு பெரிய ஆர்டர் கிடைத்திருக்கிறது அதை செஞ்சு கொடுத்தா இரண்டு லட்சம் கிடைக்கும் என்று சொல்ல, முத்து மீனாவை தூக்கி சந்தோஷப்படுகிறார். அப்போது அங்கு வரும் விஜயா என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று திட்டுகிறார். அதற்கு அண்ணாமலை ஏதோ சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு அதை அவங்களே சொல்லுவாங்க பொறுமையா இரு என்று விஜயாவை திட்டுகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அப்போது மீனா தனக்கு 2 லட்சம் ஆர்டர் கிடைத்த விஷயத்தை சொல்ல, அதைக் கேட்டு விஜயாவின் முகம் சுருங்கி போய் விடுகிறது. பிறகு தனியாக யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது சிந்தாமணிக்கு போன் போட்டு இந்த விஷயத்தை சொல்கிறார். அதற்கு சிந்தாமணி நீங்க கவலைப்படாதீங்க அந்த ஆர்டர் கிடைத்தது என்னால தான். மீனா எடுக்க போற கடைசி ஆர்டர் இதுதான். இதில் நான் என்ன செய்யப் போறேன்னு பாருங்க என்று வில்லத்தனமாக பேசுகிறார். இதனால் அடுத்ததாக மீனாவிற்கு தான் பெரிய பிரச்சனை வரப்போகிறது என்று தெரிகிறது.

Siragadikka aasai serial vijay tv

ஏற்கனவே வெளியான ப்ரோமோவில் ரோகிணியின் மாமாவாக நடிக்க வந்த கறிக்கடைக்காரர் அண்ணாமலையின் நண்பர் பரசுராமரிடம் போனில் பேசுகிறார். அப்போது முத்து அங்கே நின்று கொண்டிருக்கிறார். முத்து கறிக்கடைக்காரர் மணி பேசுவதை கேட்டு இந்த குரலை எங்கேயோ கேட்டிருக்கேன்.. நல்ல பழக்கப்பட்ட குரல் தான் யாருன்னு தெரியலையே என்று யோசித்து கொண்டு இருக்கிறார். மீனாவும் அவரோடு இருக்கிறார் மீனாவும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் கறிக்கடைக்காரர் முத்துவிடம் மாட்டுவாரா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+