சிறகடிக்க ஆசையில் நாளை: அண்ணாமலையிடம் முத்து கேட்ட கேள்வி.. விஜயாவால் வெடிக்கும் பூகம்பம், அடுத்த சம்பவம் ரெடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து அண்ணாமலையிடம் தனக்கு உதவி வேண்டும் என்று கேட்க, அதை கேட்டதும் விஜயா கோபத்தில் பேசுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய ஒரு உண்மை மட்டும் விஜயாவிற்கு தெரிய வந்திருக்கிறது. அதற்கே வானத்திற்கு பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் விஜயாவை எப்படியாவது மீண்டும் தன் வசப்படுத்த வேண்டும் என்று ரோகிணி பிளான் போட்டு காய் நகர்த்துக் கொண்டிருக்கிறார். தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் விஜயாவிடம் கொடுத்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். அதை பார்த்து குடும்பத்தினர்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

திருந்தாத மீனா
எத்தனையோ முறை அவமானப்பட்டாலும் முத்துவும் மீனாவும் திருந்தாமல் ரோகிணிக்காக பீல் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார். ஐயோ பாவம் ரோகிணி என்பதுதான் மீனா அடிக்கடி சொல்லும் வார்த்தையாக இருக்கிறது ஒவ்வொரு இடத்திலும் மீனாவின் மூக்கை ரோகிணி உடைத்து விடுகிறார். ஆனால் மீண்டும் மீண்டும் ரோகிணிக்காக மீனா பீல் பண்ணிக் கொண்டிருப்பது பார்ப்பதற்கு கடுப்பாகிறது.
அருண் செய்த உதவி
ஆனாலும் ஸ்ருதி கிடைக்கிற கேப்பில் விஜயா மற்றும் ரோகிணிக்கு சரியான பதிலடி கொடுத்து விடுகிறார். சத்யாவை எக்ஸாம் எழுத விடாமல். ஆனால் முத்து டிராபிக் போலீஸ் அருணின் உதவியால் சத்யாவை கண்டுபிடித்திருக்கிறார். ஆனால் அருண் தான் உதவி செய்தது என்பது முத்துவுக்கு தெரியாமல் இருக்கிறது. இந்த நிலையில் நாளைக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

விஜயா கேட்ட கேள்வி
அதில், மீனாவிற்கு புதிய ஆர்டர் ஒன்று கிடைத்திருக்கிறது. அதற்காக 2 லட்சம் ரூபாய் மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் இது பற்றி அண்ணாமலையிடம் முத்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து அண்ணாமலையிடம் பணத்தைப் பற்றி பேசியதை கேட்டதும் விஜயா இப்பதான் உங்க பிளான் என்னன்னு எனக்கு புரியுது, ஏற்கனவே வீட்டு பத்திரத்தை அடகு வைத்திருக்கிறது அதில் இன்னமும் ரெண்டு லட்சம் வாங்க வேண்டும் என்று தானே நீங்கள் பிளான் போடுறீங்க என்று கேட்க அதை கேட்டு முத்து அதிர்ச்சியோடு கோபம் அடைகிறார்.
நாளைக்கு தெரியும்
இதனால் நாளைக்கு பெரிய சம்பவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முத்து அண்ணாமலையிடம் இரண்டு லட்சம் பணம் கொடுத்து உதவும்படி கேட்க போகிறாரா அல்லது தாங்கள் ஏற்கனவே கொடுத்து வைத்திருக்கும் பணத்தைக் கேட்கப் போகிறாரா? என்று தெரியவில்லை. ஆனால் அதை முழுமையாக கேட்காமல் விஜயா பிரச்சனை செய்கிறார். நாளைக்கு முத்து பதிலடி கொடுக்கப் போகிறாரா? அல்லது வழக்கம் போல அவமானப்பட போகிறாரா? என்று பார்க்கலாம்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications