சிறகடிக்க ஆசை: ரோகிணி குழந்தை பற்றி பேசியதை போட்டுக் கொடுத்த சீதா.. மீனாவிற்கு தெரிய வந்த உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தன்னுடைய குழந்தை விஷயத்தில் எடுத்த முடிவு பற்றி அறிந்து கொண்ட சீதா அது பற்றி மீனாவிடம் போட்டுக் கொடுக்கிறார். இதுவரைக்கும் ஒவ்வொரு பிரச்சனையிலும் ரோகிணி வீட்டில் மாட்டாமல் தப்பி வந்த நிலையில் இப்போது புது பிரச்சனையில் மாட்டுகிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கான எபிசோட்டில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே ரோகிணி இதுவரைக்கும் ஒரு இடத்தில் கூட வீட்டில் மாட்டாமல் இருக்கிறார். பார்லரில் ரோகினி விஜயாவின் பெயரை மாற்றிய விஷயம் கூட முத்துவிற்கு தெரிய வந்தாலும் அதை வீட்டில் முதலில் சொல்லாமல் மறைத்து விட்டார். அதற்கு பிறகு சில வாரங்கள் கழிப்பது தான் மனோஜ் மூலமாக அந்த உண்மை வீட்டிற்கு தெரிய வந்தது.

ஆனாலும் அது பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்தவில்லை. ஆனால் முத்து மீனா செய்யும் செயல்கள் மட்டும் எல்லா நேரங்களிலும் அவர்களுக்கே பிரச்சனையாக வந்து கொண்டிருக்கும். விஜயாவும் மனோஜும் நகை திருடிய போது கூட அந்த பழியும் மீனாவின் மீதுதான் விழுந்தது. நகையை திருடியவர்கள் மாட்டிக் கொண்டாலும் அசிங்கப்படுவது மீனாவாக தான் இருக்கிறது.
ரோகிணி பற்றிய விஷயம் எதுவுமே வீட்டிற்கு தெரியாமல் இருக்கும் நிலையில் எப்போது தான் ரோகிணி வீட்டில் மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் தான் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது கிரிஷை தத்தெடுக்க வேண்டும் என்று முத்துவும் மீனாவும் வீட்டில் பேசி இருக்கின்றனர். இதனால் ரோகிணி தனக்கு என்று ஒரு குழந்தை பிறந்தால் மனோஜ் தன்னுடைய பேச்சைக் கேட்டு தனக்காக இருப்பார் என்று குழந்தை விஷயத்தில் அவசரம் காட்டுகிறார்.
இந்த நிலையில் ரோகிணியும் அவருடைய பிரண்ட் வித்யாவும் ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கின்றனர். அங்கு ரோகிணிக்கு குழந்தை பிறப்பதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்பதை செக் பண்ணுவதற்காக வந்திருக்கும் நிலையில் வித்யா ரோகிணியிடம் எதற்காக அதை குழந்தை விஷயத்தில் இவ்வளவு அவசரப்படுதா? என்று கேட்க, ரோகிணி எனக்கு குழந்தை பிறப்பதில் ஏதேனும் பிரச்சனை இருக்கா என்று சந்தேகம் இருக்கிறது என்று சொல்ல,
அதற்கு வித்யா அதான் ஏற்கனவே நீ ஒரு குழந்தையை பெத்தவ தானே உனக்கு என்ன பிரச்சனை இருக்க போகிறது என்று சொல்கிறார். இதை எல்லாம் அங்கிருக்கும் மீனாவின் தங்கை கேட்டு விடுவது போல ப்ரோமோவில் காட்டுகின்றனர். ஆனால் இதை சீதா கேட்டு விட்டாளா? இல்லையா? என்பது நாளைக்கு தான் தெரிய வரும். ஆனால் சீதா மீனாவுக்கு போன் போட்டு நான் இப்போ எங்கிருந்து பேசிட்டு இருக்கேன் தெரியுமா? ஹாஸ்பிடலில் இருக்கிறேன் அந்த ரோகிணி வந்திருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ப்ரோமோவில் சீதா ரோகிணி பற்றிய உண்மைகளை சொல்வது போல காட்டப்பட்டிருக்கிறது இதனால் ரோகிணி ஹாஸ்பிட்டலுக்கு வந்திருப்பது பற்றி உண்மையை தெரிந்து சீதா, மீனாவிடம் சொல்லப் போகிறாரா? அல்லது குழந்தைக்காக ரோகிணி வந்து இருப்பதை தவறாக புரிந்து கொண்டு ரோகிணி கர்ப்பமாக இருக்கிறார் என்று சீதா மீனாவிடம் சொல்லப் போகிறாரா? என்பது நாளைக்கான எபிசோடில் தெரியவரும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications